-
27th March 2014, 05:52 AM
#11
Junior Member
Platinum Hubber

MAKKAL THILAGAM MGR'S PROVERBS
என்னை எதிரியாக நினைக்க வேண்டும் என்ற கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டவர்கள் கூட என்னை நேரில் சந்திக்கும்போது அன்போடு பேசுவதற்கு காரணமே, அவர்களது ஒலிகளையும், எதிரொலிகளையும் நான் என்றும் தடுக்க முயலாதவன் என்பதோடு, அத்தகைய எண்ணத்திற்கும், எனக்கும் வெகுதூரம என்பதனாலும்தான்.
அரசியல்வாதிகள் ஒரு நாட்டுக்குத்தான் சொந்தம்; கலைஞர்கள் உலகத்திற்கே சொந்தமானவர்கள்.
செய்யும் தொழிலே தெய்வம் என்கிற உணர்வோடு முயற்சி திருவினையாக்கும் என்கிற நம்பிக்கயோடு பாடுபட்டால் வெற்றி நிச்சயம்.
மாணவர்களே உங்களுடைய தேவைகளுக்காக பெற்றோர்கள் துன்புறத்துக்கூடாது. உங்கள் ஆசைகளுக்காக அவர்கள் கஷ்டப்படுத்தக்கூடாது. நீங்களே உழைத்து உங்களது விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும்.
கருணையே இல்லாத இடத்தில் எவ்வளவு நிதி இருந்தாலும் பயனில்லை.
சோதனைகள் வந்தால் பின்னாலேயே சுகம் தேடி வரும். சிரமங்களைக்கொண்டு மனம் இடிந்து விடக்கூடாது. தைரியமாக இரு. எதுவாக இருந்தாலும், என்ன நடந்தாலும் கவலைப்படாதே. நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று நினைத்துக்கொள்.
ஒரு மனிதன் இறந்தபிறகு அவனை அந்த நாடு மறக்காமல் போற்றினால்தான் அவன் புகழ்
கிறார்கள்.
.
நல்ல நண்பர்களை பெற வேண்டும். எவ்வளவு சொத்து இருக்கிறது அவருக்கு என்று பார்த்து நண்பனைத் தேடினால் அது நட்பைத் தேடுவதாக அமையாது.
Last edited by esvee; 27th March 2014 at 06:11 AM.
-
27th March 2014 05:52 AM
# ADS
Circuit advertisement
Bookmarks