-
9th May 2014, 04:51 PM
#10
Junior Member
Diamond Hubber

பல வருடங்களாக இலங்கைத்திரு நாட்டில் புரட்சித்தலைவர் மக்கள் திலகத்தின் கொள்கையின் அடிப்படையில் மக்கள் சேவையை முன்னெடுத்தவர் மர்ஹ{ம் ஏ. நெய்னார்.
இவரது தொண்டுள்ளத்தைப் புரிந்து கொண்ட முதலமைச்சரான எம். ஜி. ஆர். ஜனாப் நெய்னாரை அ. தி. மு. கவின் இலங்கை மாநில செயலாளராக நியமித்தார்.
அ. தி. மு. கவின் இலட்சிய நோக்கோடு செயற்பட்ட நெய்னாரோடு பல புரட்சித்தலைவரின் அபிமானிகளும் விசு வாசிகளும் இணைந்து தொண்டாற்றினார்கள்.
நெய்னார் அமரத்துவம் அடைந்தவுடன் அவரது வழியில் செயல்பட ஆரம்பித்தார் அவரின் புதல்வரான இம்ரான் நெய்னார். இலங்கை நெய்னார் சமூக நல காப்பகம் என்ற அமைப்பை நிறுவி சமூக சேவையை தொடர்ந்தார்.
எதிர் வரும் ஏப்ரல் மாதம் இரண்டாம் வாரம் இலங்கை நெய்னாரோடு எம். ஜி. ஆர். கொள்கைகளோடு மக்கள் பணியாற்றிய ஏழு பேருக்கு பாராட்டும் கௌரவமும் வழங்குவதோடு ‘பொன்மனச்செம்மல்’ எனும் பட்டத்தையும் வழங்க உள்ளார். இவ்விழாவில் இன்றைய இலங்கை அ.தி.மு.க செயலர் எஸ். எச். எம். இத்ரீஸ், புரட்சித்தலைவர் எம். ஜி. ஆர். மன்றத்தலைவர் எம். எம். நவாஸ்டீன், புத்தளம் செல்வராஜ், கவுஸ் ஹ{சைன் ஆகியோரும் அடங்குவர்.
Posting Permissions
- You may not post new threads
- You may not post replies
- You may not post attachments
- You may not edit your posts
-
Forum Rules
Bookmarks