-
5th July 2014, 09:31 PM
#11
Junior Member
Newbie Hubber

Originally Posted by
joe
ஷங்கர் சிவாஜி ரசிகர் என்ற வகையில் பொருத்தமானவர் தான் ..சென்ற முறை விருது வாங்கிய ஷாருக்கான் நடிகர் திலகத்தின் அதி தீவிர ரசிகரா என்ன ?ஆனால் இது ரசிகருக்கு கொடுக்கும் விருதென்றால் முரளி சாருக்கல்லவா கொடுத்திருக்க வேண்டும் lol .
செவாலியே சிவாஜி விருது சினிமா சாதனையாளர்களுக்கு கொடுக்கப்படுவது என்னும் வகையில் ஷங்கரும் ஒரு வகையில் சாதனையாளர் தான் .ஆனால் அவரை விட சாதனை படைத்த பலர் அதுவும் நடிகர் திலகத்தோடு நெருங்கி பணியாற்றியவர்களுக்கு இவ்விருது இன்னும் பொருத்தமாக இருக்கும் என்பது என் தனிப்பட்ட அபிப்பிராயம் .. இருந்தாலும் இது விஜய் டிவி கொடுக்கும் விருது ..நாம் என்ன சொல்லுவது ? அவர்கள் விருப்பம்

பொருத்தமானதே என்பது என் திட்டமான அபிப்ராயம். மியூசிக் போடுவதை விட படம் இயக்குவது கடினம்.அதிலும் பிரம்மாண்ட அதிக செலவு படங்கள் என்றால் இன்னும் challenging .ரமேஷ் சிப்பி முதல் மணி ரத்னம் வரை consitency இன்றி சறுக்கிய போது ,தன்னுடைய 12 படங்களில் 10 படங்களை வெற்றியாக்கி ,இந்தியாவிலேயே சிறந்த இயக்குனராக நிமிர்ந்து நிற்கும் ஷங்கர் ஐ விட தகுதி வாய்ந்தவர் யார்? அவர் அதி தீவிர சிவாஜி ரசிகர் என்பது உபரி தகவல்.
மற்ற படி முரளிக்கு கொடுப்பதில் எனக்கொன்றும் ஆட்சேபணை இல்லை ,எனக்கு கொடுத்த பிறகு என்றால்.
-
5th July 2014 09:31 PM
# ADS
Circuit advertisement
Bookmarks