Results 1 to 10 of 3997

Thread: மனதை மயக்கும் மதுர கானங்கள்

Threaded View

  1. #11
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like

    நீலகிரி எக்ஸ்பிரஸ் 1968
    இயக்கம் திருமலை மகாலிங்கம்
    ALS Production
    இசை மெல்லிசை மாமன்னர் ராமமூர்த்தி
    ஜெய் சங்கர்,சோ,விஜய நிர்மலா,விஜயலலித,அசோகன்,ராமதாஸ் ,ராகவன் மற்றும் நிறைய சண்டை பயிற்ச்சி நடிகர்கள்

    கதை களம் சென்னையில் இருந்து கோயம்புத்தூர் செல்லும் நிலகிரி எக்ஸ்பிரஸ்.பட ஆரம்பத்தில் ராகவன் 50000 பெறுமானமுள்ள நகைகள் உடன் அந்த ரயிலில் பயணம் செய்கிறார் அவருடன் பயணம் செய்யும் சக பயணி சோ ,விஜயலலிதா.விஜயலலிதா சோவை மயக்கி அரக்கோணம் நிலையத்தில் இறக்கி உணவு வாங்க சொல்லி விட்டு காணமல் போய் விடுகிறார் இதற்கு நடுவில் ராகவன் கொலை செய்யபடுகிறார். வழக்கம் போல் CID சங்கர் இதை துப்பு துலக்கி சோ வெகுளி .அவர் கொலை செய்யவில்லை என்று தெரிகிறது
    இறுதியில் உண்மை குற்றவாளி யார் என்று கண்டு பிடிக்கிறார்

    5 பாடல்கள் படத்தில்

    1."வாலிபம் ஒரு வெள்ளி தட்டு ' கல்லூரி மாணவர்கள் பாடும் ரயில் பாடல் (நமது சு எ சு பாடல் போன்று ) - பாடகர் திலகம் மற்றும் ஈஸ்வரி குரல்களில்

    2.அருமையான பரத நாட்டிய பாடல் - ஸ்ரீவித்யா பானுமதி நடனம்
    'திருத்தணி முருக தென்னவ தலைவா ' சூலமங்கலம் மற்றும் சுசீலா குரல் என்று நினைக்கிறன்

    3.'நான் கலைஞனல்ல உன்னை சிலையாகக ' பாடகர் திலகம் உடன் ஈஸ்வரி ஹம்மிங் மட்டும் (ஜெய் டூயட் சாங் )

    4.'கல்யாண பெண்ணை கொஞ்சம் முன்னும் பின்னும் பாரு '
    சோ பெண் வேடம் அணிந்து நடனம் ஆடுகிறார் - சுசீலா மற்றும் ஈஸ்வரி குரல்களில்

    5. இறுதி பாடல் cabarat டான்ஸ் 'கடவுள் மதுவை கண்களில் ஆட வைத்தான் ' ஈஸ்வரி குரல்

    சோவின் நகைச்சுவை கொஞ்சம் நன்றாக இருந்தது

    இதே படம் ஹிந்தியில் 1970 இல் ராஜேஷ் கண்ணா ஹீரோஆக நடித்து
    தி ட்ரைன் என்று வெளியானது
    நீலகிரி எக்ஸ்பிரஸ் படமே மலையாள கொச்சின் எக்ஸ்பிரஸ் 1967 (பிரேம் நசிர் ஹீரோ) ரீமேக்





    நேற்று சன் லைப் தொலை காட்சி இந்த திரை படத்தை ஒளிபரப்பினார்கள்
    நாம் இதன் பாடல்களை அலசவில்லை என்று நினைவு
    Last edited by gkrishna; 25th July 2014 at 10:58 AM.
    gkrishna

  2. Thanks Russellmai thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •