-
9th August 2014, 08:17 AM
#11
Senior Member
Diamond Hubber
காலை வணக்கம் ராஜேஷ் சார்,
விட்டு விடுங்கள். நாம் நம் வேலையைப் பார்ப்போம். ஆனால் ஒன்று.
எப்படி நடிப்பு என்று எடுத்துக் கொண்டால் உலக நடிகர்கள் அத்தனை பேரும் நடிகர் திலகத்திற்கு பின்னாடி கண்களுக்கெட்டாத தூரமோ, அதே போல உலகில் எந்தப் பாடகியை எடுத்துக் கொண்டாலும் அவர்கள் சுசீலா அம்மாவுக்குப் பின்னாடிதான். அனைத்திலும் முழுமை பெற்ற முதல்தரப் பாடகி அவர். ஒரு சிறிய திருஷ்டி இருந்தால்தான் நல்லது.
சரி! நம்ம அலப்பரையை ஆரம்பிப்போம்.
இன்றைக்கு இதுதான் சரியான பாட்டென்று நினைக்கிறேன். இந்தப் பாடலை இந்த ஒப்புவமை இல்லாத பாடகி பாடும் அழகே அழகு! அந்தக் குரலின் தெளிவு அப்படியே பளிங்கு.
அமைதியா.... ஆர்ப்பாட்டமா எதுவுமே கேட்ட மாத்திரத்தில் கிடைக்கும் குரலில், குணத்தில், தரத்தில் உயர்ந்த இந்த மாபெரும் இறையருள் பெற்ற இப் பாடகியிடம். நம் சுசீலாம்மா நம் இந்தியாவின் நிலையான, தலையாய பெருமை. இப்போது மீண்டும் கேட்போம் இக்குரலின் அருமை.
உலகில் எனக்குதான் அதிக ரசிகர்கள்
ஓராயிரம் நூறாயிரம்
நான் ஒருத்திதான் அவர்களின் காதலி
நேற்றோடு பதினாறு வயதானவள்
நான் பிறந்த ஆண்டு மட்டும் தெரியாதவள்
நிலவென்று பிறந்ததென்று யார் கண்டது
ஆனாலும் அதன் அழகில் ஊர் மயங்குது
உலகில் எனக்குதான் அதிக ரசிகர்கள்
ஓராயிரம் நூறாயிரம்
நான் ஒருத்திதான் அவர்களின் காதலி
கல்யாண விண்ணப்பம் பல வந்தது
காதலித்தால் போதுமென்று சில வந்தது.
ஆடும்வரை ஆட்டி வைக்கும் பெண்மை இது
ஆண்டவனார் ஆட்டி வைக்கும் பொம்மை இது
உலகில் எனக்குதான் அதிக ரசிகர்கள்
ஓராயிரம் நூறாயிரம்
நான் ஒருத்திதான் அவர்களின் காதலி
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
9th August 2014 08:17 AM
# ADS
Circuit advertisement
Bookmarks