-
3rd September 2014, 12:26 PM
#11
Junior Member
Diamond Hubber
இதைப் படிக்கும் உங்களுக்கும் கண் கலங்கும் .... அது தான் செம்மல் .. அது தான் ''மக்கள் திலகம்'' .
----------------------------------------------------------------------------------------------மக்கள் திலகத்தின் இறுதி யாத்திரை என்கிற விடியோ காட்சியை நான் பகிர்ந்திருந்தேன் .... உண்மையில் நான் பார்த்த மாத்திரத்திலேயே அழுது விட்டேன் ...
அவருடன் பல ஆண்டுகள் பணியாற்றிய கலைமாமணி ரவீந்தர் அவர்கள் கூறிய ஒரு சம்பவம் .. உங்களுக்காக ....
" எனக்கு 1958 இல் திருமணம் நிச்சயமாகியிருந்தது , " நாடோடி மன்னன் வெளி வரும் வரை பொறுத்திரும் பிரமாதமாகச் செய்யலாம் என்றார் "
படம் வெளிவந்து பெரும் வெற்றி பெற்றதும் , மக்கள் திலகத்தின் அண்ணன் எம் ஜி சக்ரபாணி என்னை அழைத்து , " என்னைய்யா ஆச்சு உன் கல்யாணம் எப்ப வைச்சுக்கலாம் ? " என்று கேட்டார்
நான் , " தேதி குறிப்பிட்டு விட்டார்கள் , அதற்காகவே வந்தேன் " என்று சொன்னதும்
" சந்தோசம் , எவ்வளவு வேண்டும் என்று கேட்டார் "
நான் " பதினாறு ரூபாய் வேண்டும் " என்று சொன்னேன் .
பெரியவரும் சின்னவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர் ...
பின்னர் பெரியவர் தயங்கித் தயங்கிச் சொன்னார் " ரவீந்தர் , நாடோடி மன்னனில் புகழ் கிடைச்சிது , பணம் கிடைக்கலே , ஏதாவது குறைச்சு தரலாமா ? " என்று கேட்டார்
நான் புரிந்துக் கொண்டு " பதினாறாயிரம் கேக்கலே , வெறும் பதினாறு ரூபாய் தான் " என்றுச் சொன்னேன்
கலகலவென்று சிரித்து " என்னைய்யா பதினாறு ரூபாய் கல்யாணம் ? ஒரு பிளேட்டு பிரியாணிக்கு கூட ஆகாதே ? " என்று கேட்டார்
" எங்கள் தாலி ஒரு கிராம் எடையில் இருக்கும் , இப்ப அதோட விலை பதினாறு ரூபாய் , அதுக்கு மட்டும் கொடுத்தா போதும் , மத்தப்படி உங்க தயவுல என் கிட்ட இருக்குற பணம் போதும் " என்றேன் .
" அப்படியா இரும் கொண்டாறேன் , " என்று உள்ளே சென்று நான் கேட்ட பணத்தை கொண்டு வந்து பெரியவரே என்னிடம் கொடுக்கச் சொல்லிச் சொன்னார் செம்மல் .
அதை பெரியவர் என்னிடம் கொடுத்து விட்டுப் போய் விட , நான் அங்கேயே காத்திருந்தேன் , உள்ளே சென்ற செம்மல் திரும்ப வந்தார் , என்னைப் பார்த்து " ஏன், ரவீந்தர் , இன்னும் வேணுமா ? உமக்காக பத்தாயிரம் எடுத்து வச்சிருக்கேன் , தர்றேன் " என்றார்
நான் உடனே , " அதுக்கில்லே அண்ணா , அந்தப் பணத்தை உங்க கையால கொடுப்பீங்கன்னு நினைச்சேன் " என்றேன் ..
" அட முட்டாளே , என் அண்ணன் பிள்ளைக் குட்டிக் காரர் , எனக்கு அது இல்லை , அதனால் தான் அவர் கையால் கொடுக்கச் சொன்னேன் " என்றார் ...
இதைக் கேட்ட நான் அழுதுவிட்டேன் .... செம்மலும் கண் கலங்கி விட்டார் ,, என்னை அணைத்து " நல்லா இரும் " என்று வாழ்த்தினார் ... இன்று நான் 6 பிள்ளைகளுக்கு தந்தை ....
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
3rd September 2014 12:26 PM
# ADS
Circuit advertisement
Bookmarks