-
8th October 2014, 11:35 AM
#11
Senior Member
Seasoned Hubber
நடிகர்திலகம் சிவாஜி அவர்களின் 87-வது பிறந்தநாளையொட்டி, 11-10-2014 அன்று திருநெல்வேலியில், நெல்லை மாவட்ட நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை சார்பில், பேராசிரியர் திரு.கு. ஞானசம்பந்தம் தலைமையில் ஒரு சிறப்பு பட்டிமன்றத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பட்டிமன்றத் தலைப்பு -
சிங்கத் தமிழன் சிவாஜி அவர்களின் மங்காப் புகழுக்கு பெரிதும் காரணம்
புராணப் படங்களே!
சரித்திரப் படங்களே!
சமூகப் படங்களே!
நடிகர்திலகத்தின் நடிப்பை விவாதப் பொருளாக்கவேண்டாம் என்று நினைத்து, முதலில் கருத்தரங்கமாகத்தான் ஏற்பாடு செய்ய நினைத்தோம். பின்னர் ஒரு விவாத மேடையாக இருந்தால்தான், பொதுமக்களுக்கும் சுவாரசியமாக இருக்கும் என்பதால் பட்டிமன்றமாக அமைக்கப்பட்டிருக்கிறது.
நடிகர்திலகத்தின் புகழுக்கு மூன்று தலைப்புகளுமே காரணம் என்றாலும், பெரிதும் காரணம் எது என்பதாக தலைப்பு உள்ளது.
பட்டிமன்ற நிகழ்ச்சி நிறைவுற்றவுடன், அதுபற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொள்கிறேன்.
Last edited by KCSHEKAR; 8th October 2014 at 11:58 AM.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
8th October 2014 11:35 AM
# ADS
Circuit advertisement
Bookmarks