-
11th October 2014, 02:47 PM
#11
Junior Member
Diamond Hubber
மதுரை முத்து ” அப்படின்னு இப்போ கூகிளில் தேடினால் "கலக்கப் போவது யாரு ?" முத்துவைத்தான்
அது காட்டுகிறது ...
ஆனால் 1970 களில் தமிழ் நாட்டையே கலக்கு கலக்குன்னு கலக்கிய ஒரு மதுரை முத்துவை நம்மில் நிறையப் பேருக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை...
எம்.ஜி.ஆரின் "உலகம் சுற்றும் வாலிபன்" வெளியான சமயத்தில் ,அந்தப் படத்தை வெளியிடாமல் தடுக்க அப்போதைய தி.மு.க.அரசு ...அசுர முயற்சி எடுத்தது....
அந்த சமயத்தில் தி.மு.கவின் மதுரை சாம்ராஜ்யம் முழுக்க அப்போதைய மதுரை மேயர் “ மதுரை முத்து ” என்பவரின் கைகளில்தான் இருந்தது...
மதுரை முத்து பகிரங்கமாக ஒரு சவால் விட்டார்...
“எம்.ஜி.ஆரின் உலகம் சுற்றும் வாலிபன் வெளிவராது...
வரவும் விடமாட்டேன்...
அப்படி, படம் ரிலீஸ் ஆகி விட்டால் , நான் சேலை கட்டிக் கொள்கிறேன்...'”...
இப்படி பகிரங்க சவால் விட்டு பதட்டத்தை உண்டாக்கினார் இந்த மதுரை முத்து....
ஆனால் எம்.ஜி.ஆரின் சமயோசித மூளையினால் ...சாமர்த்திய வேலைகளால் .... உலகம் சுற்றும் வாலிபன் படம் வெளியாகி பெரும் வெற்றியும் பெற்றது...
சவால் விட்ட மதுரை முத்துவுக்கு, சேலைகள் ஏராளமாக வந்து குவிந்தனவாம்......
சில காலம் பின் கருணாநிதியோடு மதுரை முத்துவுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட ..ஏகப்பட்ட தயக்கத்துக்குப் பின் ...எம்.ஜி.ஆருடன் வந்து இணைந்தார் மதுரை முத்து....!!!
அன்றைய மாலை பொதுக்கூட்டத்திலேயே , கருணாநிதியை கடுமையாக தாக்கிப் பேசினாராம் மதுரை முத்து....
அந்த கூட்டத்தில் எம்.ஜி.ஆர். பேசும் போது, 'வருங்கால மேயர்.. அண்ணன் முத்து அவர்களே...' என்று அழைத்ததோடு ...மதுரை மேயர் பதவியையும் வழங்கி, கவுரவித்தாராம் ...
-
11th October 2014 02:47 PM
# ADS
Circuit advertisement
Bookmarks