"எங்க வீட்டுப்பிள்ளை"யின் சென்னை நகர விநியோக உரிமையை எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் வாங்கி இருந்தது. படம் வெள்ளி விழாவைத் தாண்டி ஓடியதால், விநியோகஸ்தர்களுக்கு நிறைய லாபம் கிடைத்தது.
எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் அதிபரான எம்.ஜி.ஆர், தனக்கு அதிக லாபம் வந்ததால், ரூ.1 லட்சத்தை பட அதிபர்களுக்கு வழங்க முடிவு செய்தார். விஜயா கம்பைன்ஸ் அதிபர்களான நாகிரெட்டி- சக்ரபாணி பெயரில் ரூ.1 லட்சத்துக்கு "செக்" அனுப்பி வைத்தார். அத்துடன், "நான் பேசிய தொகைக்கு மேல் லாபம் வந்து கொண்டிருக்கிறது. எனவே இந்த ஒரு லட்சம் ரூபாயை தாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்" என்று ஒரு கடிதத்தையும் இணைத்திருந்தார்.
ஆனால் அந்தப் பணத்தை பட அதிபர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. செக்கை திருப்பி அனுப்பிவிட்டார்கள். "உங்கள் நல்ல உள்ளத்தை பாராட்டுகிறோம். எனினும், இந்தப் பணத்தை நாங்கள் ஏற்பதற்கு இல்லை. இந்தப் பணத்தை, உங்கள் விருப்பப்படி தர்மகாரியத்திற்கு பயன்படுத்துங்கள்" என்று கடிதம் அனுப்பினார்கள்.
![]()
Bookmarks