-
10th November 2014, 10:43 PM
#11
Senior Member
Seasoned Hubber
சிவாஜி செந்தில் சார்
நடிகர் திலகத்தின் திரைப் பேராண்மை... நடிப்புத் திமிங்கிலம் ... எனத் தங்களின் எழுத்தின் ராஜ்ஜியம் விரிவடைந்தே போகிறது... பாராட்டுக்கள்...
கிட்டத்தட்ட கால் நூற்றாண்டு காலத்திற்கு முன்பு வரை அந்த நாள் படம் பாடல்கள் இல்லாத படம் என்கின்ற அளவில் மட்டுமே மக்களின் நினைவில் தங்கியிருந்தது. எஸ்.பாலச்சந்தர் என்கின்ற அந்த மாமேதைக்குக் கூட வீணையில் கிடைத்த அங்கீகாரம் திரைத்துறையில் தரப்படவில்லை என்பதே என் எண்ணம். உலகத் திரைப்படத்தைப் பார்ப்பவர்கள் தமிழ் சினிமாவை ஒரு புழுவிற்கு சமமாக நடத்திய கால கட்டத்தில் இந்தியாவில் ரோஷமானுக்குக் கிடைத்த அமோக வரவேற்பும் அந்தஸ்தும் அதற்கு சற்றும் குறையாத சொல்லப் போனால் அதை விட அதிகமாகவே அருமையாக அமைந்த அந்த நாள் படத்திற்குக் கிடைக்கவில்லை. அதற்குக் காரணமும் இருந்தது. அந்தக் காரணத்தை கோபால் சார் புதியதாக தொடங்கியுள்ள தொடரின் முதல் பகுதியில் தாங்கள் புரிந்து கொள்ளலாம்.
ஆனால் இன்றைய காலகட்டத்தில் சினிமாவைப் பற்றிய பொதுஜன awareness ஆழமாகப் பெருகியுள்ள நிலையில் அந்தநாள் திரைப்படம் மிகப் பெரிய அளவில் அதற்குரிய அங்கீகாரம் பெற்று வருவது உள்ளபடியே மகிழ்வூட்டுகிறது. இதனையும் கோபால் சாரின் பதிவில் நாம் புரிந்து கொள்ளலாம்.
நேற்றுக்கூட முரசு தொலைக்காட்சியில் அந்தநாள் திரைப்படம் திரையிடப்பட்டது, எந்த அளவிற்கு மக்களிடம் இத்திரைப்படம் வரவேற்பைப் பெற்று வருகிறது என்பதைக் காட்டுவதோடு நாளுக்கு நாள் இப்படத்தின் cult classic அந்தஸ்து பெருகி வருவதை நிரூபிக்கிறது.
வரலாற்றில் சாதனைகள் மறைக்கப் படமுடியாதவை என்பதற்கான துவக்கமே அந்த நாள்.
இது இனி பல திரைப்படங்களின் வாயிலாக நடிகர் திலகத்திற்குக் கிடைக்க இருக்கும் அங்கீகாரங்களுக்கான தொடக்கம்.
தங்களுடைய இந்தத் தொடர் விரிவாக மக்களிடம் சென்று சேர வேண்டும்.. கோபால் சாரின் புதிய தொடரின் முதல் பகுதியின் கருத்துப் பரிமாற்றத்தைத் தொடர்ந்து தங்களுடையதைத் தொடரலாம் என நான் நினைக்கிறேன்.
இதைப் பற்றிய தங்கள் கருத்தையும் கூறலாம்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
10th November 2014 10:43 PM
# ADS
Circuit advertisement
Bookmarks