அஜய், பார்த்துட்டீங்களா? நான் இருக்கும் ஊரில் படம் வெளியாகவில்லை. ஆனால் உங்கள் விமர்சனத்தை படிக்கும் போது, படம் சீக்கிரம் தொலைக்காட்சிக்கு வந்து விடும் என்று தோன்றுகிறது. அப்போது இலவசமாக பார்த்துக் கொள்ளலாம் போல:-d
அனைகா சோதிக்கு ரசிகர் மன்றமே அமைத்து விடுவீர்கள் போலிருக்கிறதே:-d அந்தளவுக்கா அந்த பொன்னு நல்லா நடிச்சிருக்கு?
ரஹ்மான் தவிர யார் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தாலும் படத்திற்கு இவ்வளவு பெரிய எதிர்பார்ப்பு இருந்திருக்காது. "காயாத கானகத்தே" என்று ஹரிசரன் பாடியிருந்தால் நீங்கள் கூறியது போல் திரையரங்க உரிமையாளர்கள் பாடு கஷ்டம்தான். அந்த வகையில் ரஹ்மானின் தேர்வு மிகச் சரியானது.
நெத்தியடி.ஆனால் ஜனரஞ்சகமான, அதே நேரத்தில் இலக்கணம் மீறாத இசையை கொடுத்ததன் மூலம் ரஹ்மான் தன் முத்திரையை அழுத்தமாக பதிக்கிறார்.
காவியத்தலைவன் - காவியம் இல்லை. ஆனால் தலைவன் (ரஹ்மான்) இருக்கிறார்.![]()




Reply With Quote
Bookmarks