பரத்வாஜ் ரங்கன் ராஜாவை விட ரஹ்மானிற்கே முக்கியத்துவம் கொடுக்கிறார், எப்போதெல்லாம் ராஜாவின் ரசிகர்கள் அவரது இசை அறிவின் ஆழமின்மையை அம்பலப்படுத்துகின்றனரோ, அப்போதுதான் அவர் தன்னை ராஜா ரசிகர் என்று அறிவிக்கின்றார் என்று தாங்கள் கூறிய கருத்து எனக்கு அந்த* அதிமேதாவியின் கருத்தை ஆமோதிப்பது போல் ஒரு தோற்றத்தை உருவாக்கியது. அப்படி நீங்கள் செய்யாத பட்சத்தில் நான் எனது பகிரங்க மன்னிப்பையும் இங்கே பதிவு செய்கிறேன். மன்னியுங்கள்.
அவசியமே இல்லை. அந்த நபரின் கருத்தை பற்றி எனக்கு பெரிதாக அக்கறை இல்லை. ஆனால் நீங்கள் ராஜா ரசிகராக இருந்தாலும் ரஹ்மானின் இசையையும் கேட்பவர். உங்களுக்கு பிடித்திருந்தால் அதையும் பதிவு செய்பவர். தங்களுக்கு காவியத்தலைவன் பாடல்கள் திருப்தி தரவில்லை என்பது உங்கள் தனிப்பட்ட கருத்து. அந்த கருத்தை, எனது கருத்துக்கு மாறுபட்டு இருந்தாலும், நான் மதிக்கிறேன்.என்னை மீண்டும் மீண்டும் நிறுவவேண்டிய அவசியமில்லை எனக் கருதுகிறேன்.
ஆனால் இளையராஜாவை நாயன்மார்களில் ஒருவராக தாங்கள் கூறியது சைவ மதத்தை ஏற்றிருக்கும் என்னை போன்றோருக்கு வேதனை அளித்திருக்கிறது என்பதும் உண்மை. இளையராஜா மிகச் சிறந்த இசையமைப்பாளர் என்பதில் ரஹ்மானின் இந்த ரசிகனுக்கு கருத்து வேறுபாடில்லை. ஆனால் நான் அனு தினமும் உளமாற வணங்கும் தெய்வத்தின் திருத்தொண்டர்கள் பட்டியலில் இளையராஜாவையும் இணைத்தது ஏற்புடையதன்று. ஒரு சிறந்த இசையமைப்பாளர் ஒரு சிறந்த மனிதராகவும் இருக்க வேண்டிய அவசியமில்லை. அந்த பெருமை மிக்க பட்டியலில் சேர சிறந்த இசையமைப்பாளர் என்ற தகுதி மட்டும் போதுமா? நீங்களே உங்கள் மனசாட்சியை கேட்டுப்பாருங்கள். வேறு மதத்தில் கடவுளுக்கு அடுத்ததாக போற்றப்படுவோரின் பட்டியலில் ஒரு திரை இசையமைப்பாளரை சேர்க்க முடியுமா?





Reply With Quote
Bookmarks