Quote Originally Posted by thozhar View Post
ஆனால் இளையராஜாவை நாயன்மார்களில் ஒருவராக தாங்கள் கூறியது சைவ மதத்தை ஏற்றிருக்கும் என்னை போன்றோருக்கு வேதனை அளித்திருக்கிறது என்பதும் உண்மை. இளையராஜா மிகச் சிறந்த இசையமைப்பாளர் என்பதில் ரஹ்மானின் இந்த ரசிகனுக்கு கருத்து வேறுபாடில்லை. ஆனால் நான் அனு தினமும் உளமாற வணங்கும் தெய்வத்தின் திருத்தொண்டர்கள் பட்டியலில் இளையராஜாவையும் இணைத்தது ஏற்புடையதன்று. ஒரு சிறந்த இசையமைப்பாளர் ஒரு சிறந்த மனிதராகவும் இருக்க வேண்டிய அவசியமில்லை. அந்த பெருமை மிக்க பட்டியலில் சேர சிறந்த இசையமைப்பாளர் என்ற தகுதி மட்டும் போதுமா? நீங்களே உங்கள் மனசாட்சியை கேட்டுப்பாருங்கள். வேறு மதத்தில் கடவுளுக்கு அடுத்ததாக போற்றப்படுவோரின் பட்டியலில் ஒரு திரை இசையமைப்பாளரை சேர்க்க முடியுமா?
// சிவனின் நேரடி ஏஜென்ட்// என்னடா நம்மீது இப்படி ஒரு பதிவா இதன் காரணம் எதுவாக இருக்கும் என ஒரளவுக்கு கணித்தது சரிதான் போல. நாயன்மார்கள் வரிசையில் இளையராஜாவை சேர்க்கலாமா வேண்டாமா என்ற எனது அபிப்ராயத்தை உணர்வுப் பூர்வமான தளத்தில் விவாதிக்கப்படவேண்டிய விஷயமாகக் கருதுகிறேன். இன்னொரு அன்பருக்கு அத்திரியிலேயே சொன்னதுபோல கொஞ்சம் கொஞ்சமாக எனது பார்வைகளை அங்கே பதிய வைக்க உள்ளேன். நாயன்மார்கள் ஒவ்வொருவரும் எப்படிப்பட்டவர்கள் என்பதை நாம் நூல்கள் மூலமே வாசித்திருக்கிறோம். தர்க்கத்திற்கு இடம்கொடுக்காமல் அதை அப்படியே பக்திபூர்வமாக ஏற்றுக்கொண்டு உயர்ந்த இடத்தில் வைத்துவிடுகிறோம். அதுபோலவே ராஜாவின் பக்திப் பாடல்கள் என வரும்போது இசை என்ற தளத்தில் மட்டுமே நின்றுகொண்டு மற்ற பிற தர்க்கங்களுக்கு இடம்கொடுக்காமல் உரையாடலாம். நாளைக்கே ( எப்போது எனத் தெரியா!) ரஹ்மானும் தன்னை மிகவும் தொடர்புபடுத்திக் கொள்ளும் இஸ்லாமிய பக்திமார்க்கத்திற்கு பலவித இசைப் பாடல்களை உருவாக்கும்போது அவரையும் இதுபோலவே உயர்ந்த இடத்தில் இன்னொருவர் வைத்து அழகுபார்க்க முடியும். காலமும் ஆக்கங்களும் மலரட்டும். ரஹ்மான் திரியில் ராஜாவைப் பற்றி மேலும் எழுதவேண்டாமென்று நினைக்கிறென்.