-
29th November 2014, 05:54 PM
#11
Senior Member
Seasoned Hubber
வாசு சார் முரளி சார்
இருவருமே 1978 1979 கால கட்டத்தை மிகச் சிறப்பாக நினைவில் கொண்டு வந்து விட்டீர்கள். நடிகர் திலகத்தின் திரையுலக வாழ்க்கையில் இன்னொரு வெற்றி இன்னிங்ஸ் தீபம் மூலம் தொடங்கிய கால கட்டம். நடிகர் திலகத்தின் படம் என்ற வகையில் தீபத்தின் வெற்றி சந்தோஷத்தைத் தந்தாலும், நம்மைப் போன்ற ரசிகர்களின் லட்சியப் படமான அவன் ஒரு சரித்திரத்திற்கு வில்லனாக வந்தது மன்னிக்கவே முடியவில்லை. இன்று வரை நம் நினைவில் இதை நினைத்தால் ஒரு லேசான சோக இழை ஓடுகிறது.
இந்தக் கால கட்டங்களில் புதிய தலைமுறை ரசிகர்கள் நடிகர் திலகத்திற்கு உருவானதை நான் நேரடியாக பார்த்திருக்கிறேன். உணர்ந்திருக்கிறேன். அது விஸ்வரூபம் எடுத்தது திரிசூலம் படம் மூலம் தான்.
அந்தமான் காதலி படத்தைப் பொறுத்தமட்டில் சென்னை நகர விநியோகஸ்தர்களின் அலுவலகத்திற்கு நாங்கள் நடந்த நடையை அளந்தால் சென்னையிலிருந்து டில்லிக்கு நடையாகவே சென்று திரும்பியிருக்கலாம். ஆனால் அவர்களை மிகவும் பாராட்ட வேண்டும். எங்களுக்கு மிக நன்றாக ஒத்துழைப்புத் தந்து விளம்பரங்களைப் பதிவிட்டார்கள். அது மறக்க முடியாத அனுபவம். சென்னைப் பதிப்பில் வரும் விளம்பரமே எல்லா ஊர்களுக்கும் வரும் என்பதால் எங்களுக்கு பன்மடங்கு மகிழ்ச்சி. இனனும் சொல்லப் போனால் ஒரு சந்தர்ப்பத்தில் வாசகங்களைக் கூட நாங்களே அவர்களின் அலுவலகத்தில் எழுதிக் கொடுத்து அது பிரசுரமானதும் நடைபெற்றுள்ளது.
இதை எழுதும் இந்த ரசிகருக்கும் தீவிர சிவாஜி பைத்தியம் தொற்ற ஆரம்பித்ததும் இக்காலகட்டத்தில் தான்.
இது போன்ற மலரும் நினைவுகளை இன்னும் விஸ்தாரமாக கீற்றுக் கொட்டகையில் பகிர்ந்து கொள்வோம்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
29th November 2014 05:54 PM
# ADS
Circuit advertisement
Bookmarks