Results 1 to 10 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part-15

Threaded View

  1. #11
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நமது நடிகர் திலகம் மீது பெருமதிப்பு கொண்ட மக்கள் கலைஞர் ஜெய்ஷங்கர் அவர்களின் இளைய புதல்வர் மற்றும் என்னுடைய பள்ளி காலத்திலிருந்து மிகவும் நெருங்கிய நண்பருமான திரு சஞ்சய் ஷங்கர் அவர்கள் விரைவில் இசை என்ற திரைப்படம் மூலம் கலை உலகில் வருவது மிகவும் சந்தோஷமான ஒரு விஷயம்.

    பத்தாம் வகுப்பு முதல் அவரின் அறிமுகம். இருவரும் ஒரே வகுப்பில். இதன் காரணமாக மக்கள் கலைஞர் திரு ஜெய் ஷங்கர் அவர்களுடன் மிகவும் நெருங்கி பழகும் வாய்ப்பும் கிடைத்தது. எனது வீட்டில் நான் அதிகம் விடுமுறை நாட்களில் இளைபாரியது கிடையாது...மக்கள் கலைஞர் வீட்டில், எனது நண்பர் சஞ்சய், அவர் தாயார் மற்றும் தனது மகன் போல என்னையும் நினைத்து தந்தையை போல, நல்ல நண்பரை போல பழகிய ஒரு சிறந்த மாமனிதர் மக்கள் கலைஞர் ஜெய்ஷங்கர், அவரது இல்லத்தை பொருத்தவரை இன்றளவும் நானும் ஒரு மகனே !

    எனது திருமணத்திற்கு (FEB 24 2000 இல்) தனது உடல் முடியாத நிலையிலும் அடாத மழையிலும் வந்து தன்னுடைய வாழ்த்தினை தெரிவித்த ஒரு மனிதரில் மானிக்க்யம் திரு ஜெய் ஷங்கர் அவர்கள்.

    முதல் பேட்டி தினமலரில் வெளியாகியுள்ளது. தந்தையை போலவே இவரும் சிறந்த பரோபகாரி மற்றும் மிகவும் வெள்ளைமனம் கொண்டவர் என்பது நம்முடைய முரளி சார் மற்றும் ராகவேந்தர் சார் அறிவார்கள்.

    அவரை ஊக்கபடுத்தும் விதத்தில் நமது கலை கடவுளின் இந்த திரியில் அவர் ஆசிவேண்டி தினமலர் பேட்டியினை பதிவு செய்கிறேன்.









    Last edited by RavikiranSurya; 3rd March 2015 at 10:30 PM.

  2. Likes Russellmai, kalnayak, RAGHAVENDRA liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •