-
18th March 2015, 11:10 PM
#11
Senior Member
Seasoned Hubber
உடுப்பி லக்ஷ்மிநாராயணன் அவர்கள் நமது நடிகர் திலகத்தின் பொற்கரங்களால் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டு அவரது ராசியாலும் தன்னுடைய அசாத்தியமான திறமையாலும் திரையுலகில் உன்னத நிலையை அடைந்தவர். நடிகர் திலகத்தின் பல படங்களுக்கு நடன அமைப்பில் ஈடுபட்டவர்.
அவருடைய நினைவினைப் போற்றும் வகையிலும்,
முரளி சாருக்கே உரிய மிகச் சிறப்பான நடையில் இடம் பெற்ற பழநி திரைப்படத்தின் நினைவூட்டல் மற்றும் திறனாய்வு பதிவினைப் போற்றும் வகையிலும்,
அசராமல் தொடர்ந்து நடிகர் திலகத்தின் மிக அபூர்வமான நிழற்பட அணிவகுப்பினைத் தரும் செந்தில் அவர்களின் பங்களிப்பைப் போற்றும் வகையிலும்..
இனிவரும் நம் பதிவுகள் இருக்கட்டுமே..
நமது நண்பர்களுக்கு நினைவூட்டும் வகையில் வசந்த மாளிகை திரைக்காவியத்தில் இடம் பெற்ற உரையாடல்.. 21.01ல் பாருங்கள்..
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
18th March 2015 11:10 PM
# ADS
Circuit advertisement
Bookmarks