-
19th April 2015, 05:36 PM
#11
Junior Member
Seasoned Hubber
சிரித்து வாழ வேண்டும்
கலைஞர் கருணாநிதி அவர்களைப் பார்க்க அவரது வீட்டுக்கு திரு.சிவாஜி கணேசன் அவர்களும் திரு.வி.என்.சிதம்பரம் அவர்களும் சென்றுள்ளனர். திரு.சிதம்பரம் அவர்களைப் பற்றி உங்களுக்கு அறிமுகம் தேவையில்லை. (சென்னை கமலா தியேட்டர் உரிமையாளர். செட்டிநாட்டின் ராங்கியம் என்ற ஊரைச் சேர்ந்தவர் திரு.சிவாஜி கணேசன் அவர்களின் நெருங்கிய நண்பர். புரட்சித் தலைவருக்கும் நண்பர். புரட்சித் தலைவரால் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தக்காராக நியமிக்கப்பட்டவர் என்பது உங்களுக்கெல்லாம் தெரிந்திருக்கும்.)
அப்படி, திரு.சிவாஜி கணேசன் அவர்களும் திரு.சிதம்பரமும் கலைஞர் கருணாநிதி அவர்களை பார்க்க அவரது வீட்டுக்கு போனபோது அங்கே உலகப் புகழ் பெற்ற நரம்பியல் நிபுணரான மறைந்த டாக்டர் திரு.ராமமூர்த்தி அவர்களும் இருந்துள்ளார். அவர் திரு.கருணாநிதி அவர்களுக்கு நெருங்கிய நண்பர். (திரு.ராமமூர்த்தி அவர்களை உலகப் புகழ் பெற்ற என்று நான் கூறுவதற்கு காரணம் உண்டு. புரட்சித் தலைவர் 1984-ம் ஆண்டு உடல் நலம் பாதிக்கப்பட்டபோது ஜப்பானில் இருந்து டாக்டர் கானு என்ற நிபுணரை வரவழைத்தனர். அவர் வந்து பரிசோதித்து விட்டு, என்னை ஏன் அழைத்தீர்கள்? இங்கேயே திரு.ராமமூர்த்தி இருக்கிறாரே? என்று கேட்டார். அந்த அளவுக்கு ஜப்பானில் உள்ள டாக்டர் கானுவுக்கு திரு.ராமமூர்த்தியின் புகழ் எட்டியுள்ளது. பின்னர், அமெரிக்காவில் புரட்சித் தலைவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையின்போது கானுவும் அங்கு சென்று சிகிச்சை அளித்தார். புரட்சித் தலைவர் உடல் நலம் பெற்று திரும்பியபின், கானுவுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டு புரட்சித்தலைவர் அவருக்கு நினைவுப் பரிசு வழங்கினார். அந்தப் படம் கூட தலைவர் நினைவு இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.)
விஷயத்துக்கு வருகிறேன். கலைஞர் கருணாநிதி வீட்டில் எல்லாரும் பேசிக் கொண்டிருக்கும்போது திரு.சிவாஜி கணேசன் அவர்கள் திரு.ராமமூர்த்தியைப் பார்த்து, ‘‘நான் நடுத்தர உயரம். மூனா கானா (கலைஞரை அவர் எப்போதும் இப்படித்தான் கூப்பிடுவார்) கொஞ்சம் குள்ளம். சீனாதானா (திரு.சிதம்பரம்) எங்களை விட உயரம். நீளமான கால்கள் உயரத்துக்கு காரணம். கால்களின் நீளம் எந்த அளவு இருக்க வேண்டும்?’’ என்று கேட்டுள்ளார்.
அதற்குள் திரு.கருணாநிதி அவர்கள் குறுக்கிட்டு, ‘இடுப்பில் இருந்து தரையைத் தொடும் அளவுக்கு இருக்க வேண்டும்’’ என்று கூறிய பதிலால், நம்மைப் போலவே அங்கும் குபீர் சிரிப்பு எழுந்துள்ளது.
பின்னர், சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்து விட்டு திரு.ராமமூர்த்தி அவர்கள், தான் ஒரு நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டியிருப்பதாகவும் அங்கு போய் ‘‘தலையை காட்டி விட்டு வருகிறேன்’’ என்றும் கூறி விடை பெற்றிருக்கிறார்.
அப்போது திரு.கருணாநிதி அவர்கள் கேட்ட கேள்வி, ...‘‘ஏய்யா, ஊர்ல உள்ளவனெல்லாம் உன்கிட்ட தலையை காட்டுறான். (நரம்பியல் நிபுணர் என்பதால்) நீ எங்கே போய் தலையை காட்டப் போறே?’’
இதைக் கேட்டு திகைப்புடன் சிரித்தபடி நின்ற திரு.ராமமூர்த்தியை பார்த்து கையை நீட்டியபடி திரு.சிவாஜி கணேசன் மனம் விட்டு சிரித்தாராம்.......... துயரை மறந்து சிரிக்கும் திரு.கோபாலையும், கருத்து வேறுபாடுகளை கரைத்துவிட்டு சிரிக்கும் நண்பர்கள் திரு.ஜோ, திரு.ஆர்.கே.எஸ்.சையும் போலே.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
19th April 2015 05:36 PM
# ADS
Circuit advertisement
Bookmarks