-
19th April 2015, 09:43 PM
#11
Junior Member
Senior Hubber
மதுரை சென்ட்ரல் திரையரங்கில் மக்கள் தலைவர் வசூல் சக்கரவர்த்தி சிவாஜி அவர்கள் நடித்த பாவமன்னிப்பு திரைப்படம் வரும் 24.04.2015 வெள்ளி முதல் தினசரி 4 காட்சிகளாக வெளியிடப்படுகிறது. முதன்முதலில் வெளியான மதுரை சென்ட்ரல் திரையரங்கில் சுமார் 50 வருடங்களுக்கு பிறகு வெளியாகும் பாவமன்னிப்பு படத்தை ரசிகர்கள் மட்டுமன்றி பொதுமக்களும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று மதுரை சென்டரல் தியேட்டரில் போட்டோ கார்டு வைக்கப்பட்டது. அப்பொழுது சுமார் 20. 25 வயதுள்ள இளைஞர்கள் இந்த படம் என்று வருகிறது என்றும் அவசியம் பார்ப்போம் என்று சொன்னது மட்டுமன்றி தியேட்டரில் செப்டிக் டேங்க் வேலை பார்க்க வந்தவர்கள் பாவமன்னிப்பு திரைப்படம் பற்றி குறிப்பிட்டு அவசியம் வந்து பார்க்க வேண்டும் என்று கூறினார்கள். இத் திரைப்படம் மதுரை சிவாமூவீஸ் சார்பில் தமிழகம் முழுவதும் திரையிடும் உரிமை பெற்று முதலாவதாக மதுரையில்
வெளியிடப்படுகிறது.
பாவமன்னிப்பு திரைப்படத்தின் வால்போஸ்டர்கள் உங்கள் பார்வைக்கு முதன்முதலாக


சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்.
Last edited by SUNDARAJAN; 19th April 2015 at 10:16 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 5 Likes
-
19th April 2015 09:43 PM
# ADS
Circuit advertisement
Bookmarks