Results 1 to 10 of 4013

Thread: Makkal Thilakam MGR -PART 15

Threaded View

  1. #11
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    நல்ல நேரம் :

    அன்று எனக்கு மட்டுமே விடுமுறை - மற்ற நாட்களிலும் பெரிதாக ஒன்றும் சாதிப்பதில்லை - அன்று மட்டும் என்ன செய்து விடப்போகிறேன் என்று எனக்குள்ளேயே சொல்லிகொன்டு மீண்டும் கலைந்த போர்வைக்குள் photobucket க்குள் திரு முத்தையன் அம்மு புகைப்படத்தை சொருகுவதுபோல் என் உடம்பை இழுத்துக்கொண்டேன் - தூக்கம் வர மறுத்தது - ஆனால் சோம்பேறித்தனதிற்க்கு அளவே இல்லை . என் மனைவியின் குரல் , நேப்பாளில் ஏற்ப்பட்ட நில நடுக்கத்தை விட பல மடங்கு அதிகமாக இருந்தது - கட்டில் அதிர எழுந்தேன் - இப்படி நிலைமை இருந்தால் அவள் பொறுமையுடன் நிலவரத்தை கையால்கிறாள் என்று அர்த்தம் . " உங்களைத்தானே ! இன்று வர்ஷாவிற்கு ( பெயர் திரு யுகேஷ் இடமிருந்து கடன் வாங்கியது ) காலேஜ் பீஸ் கட்ட வேண்டும் - நல்ல நேரம் இன்று எப்பொழுது என்று காலண்டரை பார்த்து சொல்லுங்கள் --

    " ஏன் நீயே பார்க்க கூடாதா ?" - சொல்ல தையிரியம் இல்லை - அடுத்த வேலை உணவுக்கு வழி வகுக்காமல் கேள்விகளை கேட்டு விட முடியுமா ?? - இதோ ஒரு நொடியில் பார்த்து சொல்கிறேன் - இதை விட வேறு என்ன வேலை எனக்கு ( இரு திலகங்களின் படங்களை பார்க்கும் எனக்கு கொஞ்சம் கூட நடிப்பு வராதா என்ன ?) - காலண்டரை பார்க்க வில்லை - சட்ட் என்று சொன்னேன் - காலை 11மணியிலிருந்து இரவு 10.30 வரையில் - நடுவில் சற்றே எம கண்டம் - என்ன ? நல்ல நேரம் -இவ்வளவு நேரமா இன்று ?? என்றுமே என்னை நம்பாதவள் அன்று மட்டுமா நம்பி விடப்போகிறாள் ?

    காலண்டரை அவளே பார்த்து " ஏன் இப்படி உளறுகிண்டீர்கள் ( நான் பேசுவதாக என்றுமே அவள் ஒருநாளும் சொன்னதில்லை ) வேறு நேரம் தானே காலண்டரில் சொல்லப்பட்டுள்ளது ? . மனைவியிடம் தாழ்ந்த குரலில் ( என்றும் உள்ள அதே குரலில் தான் !) - இன்று sunlife இல் நல்ல நேரம் 11 மணியிலிருந்து பிறகு "நான் ஆணையிட்டால் " - அதற்குள் அவள் என்னைப்பார்த்து " என்ன தையிரியம் " நீங்கள் ஆணை இடப்போகிறீர்களா ? என்னிடமா ??"

    முட்டைக்குள் . பிறந்த கோழிக்குஞ்சை மீண்டும் அதற்குள் திணிப்பதுபோல , என் முகத்தை இரு கைகளாலும் மூடிக்கொண்டேன் - ஜன்னியே வந்துவிட்டது அந்த கோடை வெயிலில் ----

    மீண்டும் எல்லா தெய்வங்களையும் ஒருமுறை மனதில் நினைத்துக்கொண்டு சொன்னேன் - இன்று மக்கள் திலகத்தின் படம் நல்ல நேரம் - அவரின் படங்கள் போடும் எல்லா நாட்களுமே நல்ல நாட்கள் , நல்ல நேரமும் தானே - நீயே பார் , நம் வர்ஷா வின் எதிர் காலம் எப்படி இருக்கப்போகின்றது என்று - என் கண்களில் தெரிந்த அந்த ஒளி மயமான எதிர்காலத்தை அவள் கண்களிளிலும் ஏற்றினேன் - அவள் கண்கள் பணிந்தன .........

    சரி சரி படத்தை பற்றி சொல்லாமல் உங்கள் வீட்டு கதையெல்லாம் எங்களுக்கு எதற்கு - நீங்கள் அப்படி அலுத்துகொள்வதர்க்குள் , படத்திற்கு வந்து விடுகிறேன்

    கதையின் சுருக்கம்

    ராஜு மனித நேயம் மட்டும் அல்ல , மிருக நேயமும் உடையவன் . அந்த வாயில்லாத மிருகங்கள் , வாய் இருந்தும் விஷத்தை கக்குபவர்கலளாக , பேச்சுத்திறமை இருந்தும் , எப்படி பேசுவது , மனம் நோகாமல் என்ற கலையை தெரியாதவர்களாக இருக்கும் மனிதர்களை காட்டிலும் 1000 தடவைகள் மேல் என்பதை நன்றே உணர்ந்திருந்தான் - மாந்தர்களின் கண்ணீரில் வெறும் உப்பு தான் இருக்கின்றது - ஆனால் அந்த வாய் இல்லாத ஜீவன்களின் கண்ணீரில் வெறும் நன்றி உணர்வுகள் மட்டுமே உள்ளது என்பதையும் சரியாக புரிந்து கொண்டவன் ராஜு ..

    ராஜுவிடம் இருந்த யானைகள் அவன் வயிற்றை தினமும் கழுவ உதவின - ஓடி ஓடி உழைத்தான் - ஊருக்கெல்லாம் கொடுத்தான் - ஆடி பாடி பிழைத்தான் - அன்பை நாளும் விதைத்தான் - நாட்கள் நகர்ந்தன --
    விஜயா என்ற பெண் அவள் வாழ்வில் வந்தாள் - அவனுக்கு ஒரு தேவதையாக - ஆனால் அவன் வளர்க்கும் யானைக்கு ஒரு எமனாக !!

    அவள் வாழ்வில் நடந்த ஒரு கொடுமை அவள் யானைகளை வெறுக்க வழி வகுத்தது . ராஜுவின் நேரத்தை பறித்துக்கொள்ளும் அந்த மிருகங்களை கண்டு பொறாமை கொண்டாள் . ராஜு வளர்த்த யானை (ராமு)தன் உயிரை கொடுத்து அவளை விட , மனித இனங்களை விட அவைகள் தான் உயர்ந்தவை என்பதை நிருபித்து ராஜுவிடம் இருந்து விடை பெற்றது .

    நடிப்பு : மக்கள் திலகத்தை தவிர இந்த படத்தில் நன்றாக நடித்தவர்கள் அந்த யானை கூட்டம் ஒன்றே !

    மக்கள் திலகத்தின் நேய உணர்வுகளை அருமையாக படம் பிடித்து காண்பித்த படம் இது .

    பாடல்கள்

    1. ஆகட்டும்டா தம்பி ராஜா
    2. நீ தொட்டால்
    3. ஓடி ஓடி உழைக்கணும்
    4. டிக் டிக் டிக் டிக்


    எல்லா பாடல்களும் தேனில் தோய்த்து எடுத்த பலா சுளைகள் - "விவசாயி "க்கு பிறகு அதாவது 5 வருடங்கள் இடைவெளிக்கு பிறகு .K .R விஜயா மக்கள் திலகத்துடன் ஜோடி சேர்ந்த படம் - சின்னப்பா தேவர் -MGR இணைந்து வெளிவந்த கடைசி படம் , முதலாவது கலர் படமும் இதுவே - தேவரின் 16 படங்களில் MGR நடித்திருக்கிறார் - ஹிந்தி படத்தின் தமிழாக்கம் .

    ஒரு விடுமுறை நன்றாக செலவழித்ததில் ஒரு பெருமை - வர்ஷாவிற்கு காலேஜ் பீஸ் இந்த நல்ல நாளில் , நல்ல நேரத்தில் கட்டி என் மனிவியிடமும் நல்ல பெயரை வாங்கிக்கொண்டேன் .

    அன்புடன்

    ரவி
    Last edited by g94127302; 26th April 2015 at 08:46 PM.

  2. Likes ainefal liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •