சி.க, ரவி, நாயக்
உங்கள் அனைவரது பதிவுகளையும் படித்து முடித்து விட்டேன். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக திரிக்கு அழகு சேர்க்கின்றன. ரவி சூரிய கதிர்களால் கலக்குகிறார் என்றால் உடனே சி.க சந்தனம் தடவுகிறார். (சி.க பலே ஆள் அய்யா நீங்கள்!) கல்நாயக் அமாவாசை முடிந்து விட்டதா? மீண்டும் குளிர்ச்சி எப்போது?
ராஜ் ராஜ் சார்!
எக்ஸலண்ட். ஜுகல் பந்தியில் மிக அபூர்வமான 'mera naam chin chin chu ...... போட்டு கலக்கி விட்டீர்கள். எதிர்பார்க்கவே இல்லை. என் உள்ளம் கொள்ளை கொண்ட அருமையான பாடல். ஒரு காலத்தில் இப்பாடலை கேட்காத நாளே கிடையாது. நீண்ட நாள் சென்று பார்க்கும் போது பரவசம் அடைந்தேன். ஜுகல் பந்தியில் இது டாப். 'மேலே பறக்கும் ராக்கெட்டு' போல.
ராஜேஷ்ஜி!
என்ன சுசீலாவுடயது ஒன்றையும் காணோம்?
ஆதிராம் சார்,
நீங்கள் 'செந்தமிழ் பாடும் சந்தனக் காற்றை' ஞாபகப்படுத்தியவுடன் நம் நடிகர் திலகம் திரியில் குதூகலமாக 'வைர நெஞ்சம்' கொண்டாடியது நினைவுக்கு வந்து விட்டது. என்ன இனிமையான நாட்கள்!
இன்னும் அதிகமான பங்களிப்பைத் தந்து ஜமாயுங்கள். நன்றி!
Bookmarks