-
17th May 2015, 10:06 PM
#11
Senior Member
Seasoned Hubber
கோபால்.
ராஜபார்ட் ரங்கதுரையைப் பொறுத்த மட்டில் நீங்கள் சொன்னதில் பெரும்பாலானவற்றில் எனக்கு உடன்பாடு உண்டு.
மெல்லிசை மன்னரின் பங்களிப்பினைப் பற்றி என் கருத்து தங்களிடமிருந்து மாறுபடும்.
பெரும்பாலான காட்சிகளை, அதுவும் தாங்கள் குறிப்பிட்ட தொய்வான சில காட்சிகள் கூட திரையரங்கில் நம்மை உட்கார வைப்பது மெல்லிசை மன்னரின் பின்னணி இசையே. கதை நாடகக்காரனைச் சுற்றி அமைக்கப்பட்டிருப்பதால் எல்லாமே நாடகத்தன்மை வாய்ந்த பாடல்களாகவே அவர் அமைத்திருக்கிறார். மதன மாளிகை பாடல் கூட ஒரு வகையில் நாடக பாணி பாடலாகத்தான் அமைக்கப் பட்டிருக்கும். சரணங்களில் வரும் தாளம் இதற்கு சரியான உதாரணம்... குறிப்பாக சரணம் துவங்கும் போது வரும் தாளக்கட்டு தெருக்கூத்தின் அடிப்படையை ஒத்திருக்கும். தெருக்கூத்துக் காரர்கள் மேடையில் நுழையும் போது கால்களை மேலே தூக்கி வைத்து நடப்பார்கள். அந்த தாளக்கட்டை அடிப்படையாக வைத்தே மதன மாளிகை பாடலை அமைத்திருப்பார். இது ஒரு உதாரணமே..
இந்த மாதிரி படங்களில் கே.வி.எம். அவர்களையே ரசித்துப் பழகி விட்ட காரணத்தால் அவருடைய பாணியிலிருந்து மாறுபட்ட, மெல்லிசை மன்னரின் இசையமைப்பு தங்களைக் கவராததில் வியப்பேதும் இல்லை.
கே.வி.எம். அவர்களை மறந்து விட்டு ராஜபார்ட் ரங்கதுரை இசையைக் கவனித்தீர்களானால் நிச்சயம் மெல்லிசை மன்னரின் இசை தங்களுக்குள் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது என் தீர்மானம்.
அதே போல் இயக்குநர் மாதவனைப் பற்றியும் சொல்ல வேண்டும்..
ஆயிரம் தான் சொல்லுங்கள்... சிவாஜி ரசிகர்களின் PULSE அறிந்து அவர்களுக்காகப் படம் பண்ணிய வகையில் திருலோக், மாதவன், சிவிஆர் இவர்களையெல்லாம் ரசிகர்கள் காலமெல்லாம் மறக்கவே மாட்டார்கள்..
அதுவும் மாதவன்... Exploited Maximum from NT for the Sivaji Fans Benches...
கிடப்பதெல்லாம் கிடக்கட்டும் கிழவியைத் தூக்கி மணையில் வை ... என்பது போல... இதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும்..
இந்தக் காட்சியைப் பாருங்கள்..
புருவத்தைத் தூக்கி கண்களைச் சுழற்றி நம்மைக் கிறங்கடிக்கும் அந்த வசீகரத்தை... அந்த புன்னகை தவழும் மதிமுகத்தை எத்தனை முறை பார்த்தால் தான் என்ன..
நடிகர்கள் பலர் வரலாம் போகலாம்.. ஆனால்
பார்த்து ரசிப்பதற்கும் ரசித்துப் பார்ப்பதற்கும் .. இறைவன் படைத்த ஒரே படைப்பு...
நடிகர் திலகம் மட்டுமே...
Last edited by RAGHAVENDRA; 17th May 2015 at 10:14 PM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 1 Thanks, 4 Likes
-
17th May 2015 10:06 PM
# ADS
Circuit advertisement
Bookmarks