Results 1 to 10 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part-15

Threaded View

  1. #11
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    ராகவேந்தர் சார்,

    குங்குமம் பட பாடல் பற்றிய அலசலை வெகு நேர்த்தியாக செய்திருகிறீர்கள். தூங்காத கண்ணென்று ஒன்று பாடல் மனதுக்கு மிக நெருக்கமான ஒன்று. சிறு வயது முதலே மனதில் இனம் புரியாத இன்பத்தை விதைத்த பாடல் இது. குறிப்பாக உயர்நிலைப் பள்ளி, கல்லூரி காலங்களில் மிகவும் ரம்மியமாக மனதிற்கு தோன்றிய பாடல். சிறு வயதில் இந்தப் படத்தை பார்த்திருந்த நான் சற்றே விவரம் தெரிந்தவுடன் பார்த்தபோது இந்த பாடல் எப்போது வரும் என்றுதான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். பாடலை அந்த ஸ்டைலை ரசித்துப் பார்த்தேன். நீங்கள் பாடல் பற்றி முழுவதும் எழுதி விட்டதால் அதைப் பற்றி நான் மேலும் சொல்ல ஒன்றுமில்லை. பாடலின் சரணங்களின் இடையில் வரும் நாகேஷ் மனோரமா ஏ கருணாநிதி தோன்றும் காட்சிகளை தவிர்த்திருந்தால் பாடல் காட்சி இன்னமும் பெரிய காவிய அந்தஸ்து பெற்றிருக்கும்.

    படம் தணிக்கையில் எதிர்பாராத சிக்கலை சந்திக்க கதையின் முக்கிய திருப்பத்தினால் தணிக்கை அதிகாரிகள் காட்சிகளில் போட்ட கத்திரிகள் அதனால் படத்தின் கோர்வையான திரைக்கதையில் உண்டான jump, ரீ ஷூட் பண்ணுவதற்கும் வழியில்லாமல் ஜெய்பூரில் கர்ணன் படத்திற்காக இரண்டு மாதங்களுக்கு மேலாக நடிகர் திலகம் சென்று விட்டது பற்றியெல்லாம் நாம் இங்கே பேசியிருக்கிறோம். படத்தின் வெட்டப்பட்ட காட்சிகள் மீண்டும் படமாக்கப்பட்டு சேர்க்கப்பட்டிருந்தால் குங்குமம் பெரிய வெற்றி பெற்றிருக்கும் என்பதில் ஐயமில்லை.

    1979 ஆகஸ்ட் 10 வெள்ளியன்று நான் வாழ வைப்பேன் வெளியாகிறது. மதுரையில் ஸ்ரீதேவியில் ரிலீஸ். எத்தனையோ மறு வெளியீடு கண்ட குங்குமம் அவற்றில் ஒன்றாக அதே நாளன்று மதுரை அலங்காரில் வெளியானது. ஆகஸ்ட் 12 ஞாயிறு அன்று நான் வெகு நாட்களாக வீட்டில் போய் பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்த ஒருவரை அவர் வீட்டில் சென்று சந்தித்தேன். பகலில் அதை முடித்து விட்டு மாலைக்காட்சி அலங்காருக்கு சில நண்பர்களாக சென்றோம். அங்கே ஸ்ரீதேவியில் புது படம் வெளியாகியும் கூட இங்கே சரியான கூட்டம். அது மட்டுமா அதே நேரத்தில் வெற்றிகரமான 4வது வாரமாக இமயம் மதுரை சென்ட்ரலில் ஓடிக் கொண்டிருக்கிறது. 79 நாட்களை சென்ட்ரலில் நிறைவு செய்து இமயத்திற்காக மாறிக் கொடுத்த நல்லதொரு குடும்பம் ஷிப்ட் செய்யப்பட்ட திரையரங்கமான வெள்ளைக்கண்ணுவில் [மிட்லண்ட்?] 100 நாட்களை நிறைவு செய்கிறது. எல்லாவற்றிருக்கும் மேலாக அன்றைய தினம் [ஆகஸ்ட் 12,1979] திரிசூலம் 198-வது நாளாக மதுரை சிந்தாமணியில் ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த சூழலிலும் குங்குமம் ஹவுஸ் புல். எத்தனை நடிகர் திலகத்தின் படங்கள் எத்தனை அரங்குகளில் திரையிடப்பட்டாலும் அவை அனைத்தும் மக்கள் ஆதரவோடு வெற்றி நடை போடுவது பல்லாண்டுகளாக நாம் பார்த்து வருவதுதானே! அதுதான் குங்குமம் .படத்திற்கும் நடந்தது.

    பூந்தோட்ட காவல்காரா மற்றும் சின்னஞ்சிறிய வண்ணப்பறவை பாடல்களுக்கு பெரிய அலப்பரை என்றால் தூங்காத கண்ணொன்று உண்டு பாடலுக்கு உண்டு இல்லை என்று பண்ணி விட்டார்கள். அதிலும் அந்த அறை கதவை திறந்துக் கொண்டு ஸ்டைல் நடை நடந்து முற்றாத இரவொன்றில் என்று வாயசைத்தபோது அரங்கமே இரண்டுபட்டதை அந்த சந்தோஷத்தை உடல் சிலிர்த்ததை 36 வருடங்களுக்கு பிறகு இப்போது எழுதும்போது கூட அப்படியே நினைவுக்கு கொண்டு வர முடிகிறது.

    ஆனால் நீங்கள் குறிக்காமல் விட்ட பாடலுக்கு என்ன வரவேற்பு தெரியுமா?

    திரை மூடிய சிலை நான்

    துன்ப சிறையில் மலர்ந்த மலர் நான்


    என்ற வரிகளுக்கும்

    நானே எனக்கு பகையானேன்

    என் நாடகத்தில் நான் திரை ஆனேன்

    தேனே உனக்கு புரியாது அந்த

    தெய்வம் வராமல் விளங்காது


    போன்ற வரிகளுக்கெல்லாம் பயங்கர அமர்க்களம்தான்!

    கடற்கரை மணலில் நடந்துக்கொண்டே [என்ன ஸ்டைல்!] நடிகர் திலகம் பாடும்

    மயக்கம் எனது தாயகம்

    மௌனம் எனது தாய்மொழி


    பாடலைத்தான் குறிப்பிடுகிறேன் என்பது உங்களுக்கு புரிந்திருக்கும்.

    இயக்குனர் நடிகர் ஆர். சுந்தர்ராஜன் இந்தப் பாடலின் பரம ரசிகர். எந்தளவிற்கு என்றால் தான் இயக்கிய ஒரு படத்திற்கு தூங்காத கண்ணின்று ஒன்று என்று பெயர் சூட்டுமளவிற்கு! அவரது இயக்கத்தில் பிரபு முதன்முதலாக காலையும் நீயே மாலையும் நீயே படத்தில் நடித்தபோது கல்லூரி மாணவனான பிரபுவும் ரேகாவும் கல்லூரி விழாவில் மேடையில் இந்த தூங்காத கண்ணின்று ஒன்று பாடலை பாடுவது போல் காட்சி அமைக்குமளவிற்கு!

    பல சுவையான மலரும் நினைவுகளை அசை போட வாய்பளித்தற்கு நன்றி ராகவேந்தர் சார்!

    அன்புடன்

  2. Thanks adiram thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •