-
6th July 2015, 09:10 PM
#1
Junior Member
Seasoned Hubber
Makkal Thilagam MGR -PART 16
ஸ்ரீ எம்.ஜி.ஆர் துணை


பசிக்கு விருந்தாக
நோயிக்கு மருந்தாக
இருப்பவர் தெய்வமடி
தன் பசியைக் கருதாது
பிறருக்குத் தருவோர்கள்
தெய்வத்தின் தெய்வமடி !!!
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் நூற்றாண்டு விழாவை கொண்டாட இருக்கும் இந்த பொன்னான தருணத்தில், இதய தெய்வம், பொன்மான செம்மல், புரட்சித்தலைவர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் மையம் திரி - பாகம் 16 யை - நாம் தெய்வத்தின் (எம்.ஜி.ஆர்) நல்லாசியோடு துவக்கி வைப்பதில் மட்டிலா மகிழ்ச்சி அடைகிறேன். மற்றும் எனக்கு இந்த பொன்னான வாய்ப்பினை வழங்கிய மையம் நிறுவனர்களுக்கும், மூத்த உறுப்பினர்களாகிய திரு. வினோத், திரு. ரவிச்சந்திரன், திரு. ஜெய்ஷங்கர், திரு. கலியபெருமாள், திரு. வேலூர் ராமமூர்த்தி, திரு. ரூப் குமார், பேராசிரியர் திரு. செல்வகுமார், திரு. லோகநாதன், திரு. யுகேஷ் பாபு, திரு. கலைவேந்தன், திரு. முத்தையன், திரு. தெனாலி ராஜன், திரு. வரதகுமார் சுந்தராமன், திரு. சைலேஷ் பாபு அவர்களுக்கும் எனது பணிவான வணக்கத்தையும், நன்றினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
காலத்தை வென்ற மாமனிதர்கள் பலர். அவர்களில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் புகழுக்கும், பெருமைக்கும் ஈடுஇணை அவர் மட்டுமே ! நாடக நடிகராக அறிமுகமாகி, சினிமாவில் பல சாதனைகள் படைத்தது, அரசியலில் அசைக்க முடியாத சகாப்தமாக விளங்கியவர் நாம் புரட்சி தலைவர். அவரை தெய்வமாக வணங்குபவர்கள், வழிகாட்டியாக கருதுபவர்கள், உயிராக நேசிப்பவர்கள் நாம்மை போன்று ஏராளம்... ஏராளம். மறைந்தும் மறையாத மாமனிதராக, தெய்வமாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் பற்றிய அறிய செய்திகளையும், புகைப்படங்களையும் தொடர்ந்து பதிவு செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
வேண்டுகோள் : எம்.ஜி.ஆர் அவர்களின் திரைப்படங்கள் பாதுகாக்க பட வேண்டும். அவரது புகழையும், பெருமையையும், சிறப்பையும் இனி வரும் தலைமுறைகளுக்கு எடுத்து சொல்லவது நமது தலையாய கடமையாக்கும்.
வாழ்க வளமுடன்
வீ. பொ.சத்யா.
Last edited by Sathya VP; 6th July 2015 at 09:24 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
6th July 2015 09:10 PM
# ADS
Circuit advertisement
Bookmarks