-
16th July 2015, 10:32 AM
#11
Junior Member
Newbie Hubber

Originally Posted by
venkkiram
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வியின் மறைவு மையத்தை அதுவும் மக்கள் மற்றும் நடிகர் திலக ரசிகர்களுக்கு அந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றே நினைக்கத் தோன்றுகிறது. முக்கியமான பதிவர்களின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டால் கூட, சொற்பமான அளவிலேயே அஞ்சலி பதிவுகள் வந்திருக்கின்றன. குறைந்தது ஒருவாரத்திற்காவது இரு நடிகர்களது ரசிகர்களும் எம்.எஸ்.விக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் விதத்தில் தங்களக்கு பிடித்த பாடல்கள் மற்றும் சுவையான நிகழ்வுகளை பகிரவேண்டாமோ! ஆச்சர்யமாக இருக்கு. நீங்கள் செய்யவில்லை என்றால் வேறு யார் செய்வது?
திரிகளின் தரம் உயர்த்த முயன்று ,தோல்வி கண்டு விட்டேன். நிறைய எழுத ஆசை. மெல்லிசை மன்னரை பற்றி நான் எழுத ஆரம்பித்து முற்று பெறாமல் இருக்கும் தொடரை பற்றி அறிவீர்களே? அங்கும் சில கவனம் வேண்டும் ,பதிவுகளை ,கவனிங்கடா ..... மு ........ என்று சொல்ல போக, சம்பந்தமில்லாத நபர்கள் தலையிட, கூத்தாகி விட்டது. நடிகர்திலகத்தின் 25 படங்கள் விஸ்வநாதன் -ராமமூர்த்தி இசையிலும்(1952-1965), நெஞ்சிருக்கும் வரை,ஊட்டி வரை உறவு,இரு மலர்கள்,உயர்ந்த மனிதன் ,சிவந்த மண்,அவன்தான் மனிதன் போன்றவை விஸ்வநாதன் இசையிலும் அற்புதமாக மிளிர்ந்தவை. எழுத நிறைய இருக்கிறது. இளையராஜா திரி போல ,மற்ற திரிகளில் உயர் பங்களிப்புகள் வரவேற்க படுவதில்லை. நானோ வியாபாரி. இங்கு போடும் நேரத்தை, வியாபாரத்தில் செலுத்தினால் கோடி கணக்கில் லாபம்.அத்துடன்,என் தங்கை என்னை பிற விஷயங்கள் எழுத தூண்டுகிறாள்.
அதனால், என்னை பொறுத்த வரை ஆசை இருப்பினும் ,சோர்ந்து விட்டேன். மன்னிக்கவும்.
-
16th July 2015 10:32 AM
# ADS
Circuit advertisement
Bookmarks