-
20th September 2015, 08:58 PM
#11
Senior Member
Senior Hubber
**
இசையும் கதையும்..
*
சின்னக் கண்ணன்.
*
கலர்ஸ்..
*
2. அவள்
****************.
(தொடர்ச்சி)
**
திரும்பினேன்..
அவள்….
முதன் முதலில் அவளை அப்போது தான் பார்க்கிறேன்.. பச்சை தாவணி, மஞ்சள் ரவிக்கை,வட்ட முகம் சற்றே கலைந்த தலை.. ஒழுங்காக வாராமல் கொஞ்சம் பஃப்பென முடிந்து வைட்டிருந்தாள்... கண்களில் கொஞ்சம் மிச்சத் தூக்கம், கொஞ்சூண்டு வெரி வெரி லைட்டாக மேக்கப் போலும்.. ஒரே ஒரு டாட் டாய் நெற்றியில் சாந்துப் பொட். கண்ணிமைகள் கண்கள் கருகரு நாவற்பழத்தின் கருமை.. காண்ட்ரவர்ஸியாய் முகத்திலேயே வெரிலைட் செவ்வண்ண இதழ்.. நிறமோ மா நிறத்துக்குச் சற்று மேலான பளீர்…
பட் இவையெல்லாம் நான் பார்த்தது – ஆயிரம் தாமரை இதழ்களை ஒன்றாக அடுக்கி வைத்து அதன் மீது ஒரு ஊசியைச் சொருகினால், அந்த ஊசியானது ஒரு இதழுக்கும் இன்னொரு இதழுக்கும் செல்லும் நேரம்- அது தான் ஷணம் என்பார்கள் – ஒரு கணம் தான்..
யெஸ்..
நீங்க… வித்யாக்காவிற்கு..
வித்யா – கல்யாணம் செய்துகொள்ளப்போகும் என் இரண்டாவது சகோதரியின்பெயர்..
ஒங்களுக்கு எப்படித்தெரியும்..
எங்க அக்கா உங்க அக்காக்கு ஃப்ரெண்ட்..சரி..ஒங்களுக்குப் பால் வேண்டுமா.. நான் வேணும்னா என் ரிஸோர்ஸஸ் கிட்ட ட்ரை பண்ணட்டா..
என்றவளைக் கொஞ்சம் அல்பமாகப் பார்த்துவிட்டு பால்பூத் காரனிடம்..”ஏண்ணே பொன்னகரம் பால்பூத்கிட்டக்க ட்ரை பண்ணட்டா..” எனச்சொல்லிவிட்டு சைக்கிளை எடுக்கப் போகையில் ஹல்ல்லோ
என்றாள் மறுபடி..
உங்களுக்குப் பால் வேணும்னா ஹெல் ப் பண்றேன்
எப்படி…என்றேன்..அவளுடைய அக்காவின் பேர் என்னவென்றெல்லாம் கேட்காமலேயே..
ஒரு நிமிஷம் இருங்க… நீங்க காலேஜா
ஆமாம் (என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை)
தம்மடிப்பீங்களா..
ம்ஹூஹும்.. (கோபம் வந்தது..என்னபண்ண பால் பொங்கி கோபத்தை அணைத்தது)
சரி அப்போ நூறுலருந்து தலைகீழா ஒரு நம்பர் குறைச்சு எண்ணிக்கிட்டிருங்க தோ வந்துடறேன்.இங்ஙனக்குள்ளதான் வீடு..
நீங்க சிவகங்கையா..
ம்.. எப்படிக் கண்டுபிடிச்சீங்க எனக் கேட்டு பதில் கேட்காமல்.
தாவிக்குதித்து ரெட்டைத்தெருவில் வாங்கிய பால் பாக்கெட்டுகளுடன்மறைந்து போனாள்
சரியாய் எண்பத்தெட்டு எண்ணிய போது வந்து விட்டாள்.. சற்றே முகம் திருத்தியிருந்தாள்..கூந்தலை வாரியிருப்பாள் போல .. நெற்றியில் கொஞ்சம் சுருளாய் முடிகள்..முகத்தில் சிரிப்பு
வாங்க போகலாம்
சைக்கிளை உருட்ட ஆரம்பித்தேன்..கூட நடந்தவாறே “ உங்க அக்காக்கு இன்னிக்குத் தானே கல்யாணம்..”
ஆமாம்..
வாட்ச் பாத்தீங்களா மணி அஞ்சேகால்.. பால்வேணும்ல..
ஆமா..
சரி சைக்கிள் எடுங்க நான் பின்னால உக்கார்றேன்..
தாவணியை இடுப்பில் முடிந்து தயாரான அவளை வியப்புடன் பார்த்தேன்.. சைக்கிள்ல ஏறத்தெரியுமா
மொபெட்டே ஓட்டியிருக்கேன்..
என்ன படிக்கறீங்க
சைக்கிள் மிதித்தவண்ணம் கேட்க, ப்ளஸ்டூ.. நீங்க
பி.எஸ்.ஸி மேத்ஸ் தர்ட் இயர்..எங்க போறோம்
இதோ இங்கன..இங்கிட்டுத்தான் விபி சதுக்கம் ரெண்டாவது தெரு ..இதோ திருப்புங்க.. இதோ நிப்பாட்டுங்க..
விபி சதுக்கத்தில் அந்தத்தெரு இன்னும் விடியாமலிருக்க நான் சைக்கிளை நிறுத்திய இடத்தின் முன்னால் கட்டப்பட்டிருந்த நாலைந்து எருமை மாடுகள் என்னை யார்யா நீ என்பது போல் பார்த்து தலைகுனிந்து அசைபோட ஆரம்பிக்க அவள் வாசலிலிருந்து “செல்வியம்மா”
கொஞ்சம் நரைக்க ஆரம்பித்த தலை சற்றே குண்டான உருவத்துடன் ஒரு அம்மா வந்து “யாரு மையூவா.. செல்லி இன்னும் முழிக்கலையே என்ன காலங்கார்த்தால. வந்திருக்க
செல்வியம்மா..இவங்க என் அக்காவோட ஃப்ரெண்டோட தம்பி எனச்சொல்லி விஷயம் விளக்கி பால் வேணுமே..
ஹச்சோ நேத்திக்கே சொல்லியிருக்க மாட்டியோ..எத்தினி வேணும்
பத்துப் பதினஞ்சு லிட்டரு..
ஒரு நிமிஷம்..டீக்கடைக்கு கறந்து வச்சுருந்தேன். கொண்டுபோகணும் என்கிட்ட நாலஞ்சு லிட்டர் தேறும் பரவால்லியா..
இன்னும் நாலுக்கு எங்கிட்டுபோவேன்.. செல்லியம்மா பத்தாவது கொடுங்க..
சரி கொஞ்சம் இரு.. ஏந்தம்பி கேன்லாம் கொண்டுவல்லியா வெறும் பைலயா பாலைத்தூக்கிட்டுப்போவ..
பாய்ண்ட் என நான் மலைக்கையில் சரி என் கேன் தர்றேன்..பத்துஅட்சஸ்ட் பண்றேன் பாஞ்சு நிமிஷம் வெய்ட் பண்ணு..
எனச் சொல்லி எப்படி அட்ஜஸ்ட் பண்ணினார் எனத்தெரியாது- கேன் பத் லிட் பால் ரெடியாகவர செல்லியம்மா வைத்திருந்த அஸிஸ்டண்ட் கேனை கேரியரில் கட்ட நான் ஏறிக்கிளம்ப..படக்கென நினைவு வந்து “ நீங்க”
நான் நடந்து போய்க்கிறேங்க.. அவள் சிரித்தாள்.. நீங்க உங்க கல்யாண வேலைகளைப்பாருங்க..
வேகவேகமாகச் செல்லுகையிலும் எனக்கு அவள் நினைவு எழவில்லை..காலத்தினாற் செய்த உதவி என்ற குறளெல்லாம் ஏட்டோடு போய் அக்காவின் சம்பந்திவீட்டார்க்கான மில்க் ஸ்வீட்டே மனதில் பாகு பதத்தில் கொதித்துக்கொண்டிருக்க கல்யாணமண்டபம் விரைவில் அடைந்து இறங்கி, கேனை இறக்கி சமையல்கட்டிற்குக்கொண்டு போனால்…பலபலவென விடிய ஆரம்பித்துக் காலைக்காப்பியெல்லாம் முடிந்து டிஃபன் வேலைகள் ஆரம்பித்திருந்தன..
கிருஷ்ணய்யங்கார் முகமெல்லாம் பல்லாக “வாராசா வா.. என் வயத்துல பால் வார்த்த” என்றார் சிம்பாலிக்காக.. இருக்கறத வச்சு போட்டுட்டேன்..பத்து தான் கெடச்சுதா பரவாயில்லை என் ரிஸோர்ஸஸ்கிட்ட சொல்லிவச்சுருந்தேனா அவாளும் பத்துமணிக்கு பத்துலிட்டர் தர்றேன்னுருக்கா சரிபண்ணிடலாம் என்கையில் தான் நினைவுக்கு வந்தது..ரிஸொர்ஸஸ் இதை இரண்டாம் முறை கேட்கிறோமா.. ஹச்சோ உதவி செய்த அந்தப் பெண்ணின் பெயரையோ அவள் அக்காவின் பெயரையோ கேட்கவில்லையே செல்வியம்மா மையூ என்றார்களே மெய்யூவா மெய்யழகியா..செட்டியார் பொண்ணா கலர் பார்த்தால் அப்படித்தெரியவில்லையே - என ஒரு நொடி நொந்து சுடச்சுடக் காப்பியை வயிற்றில் வார்த்ததும் மறந்தும் போனேன்..
ஒருவழியாய் வித்யாக்காவின் கல்யாணம் முடிந்து ஈவ்னிங்க் ரிஷப்ஷன் வரை அவள் நெஞ்சில் தலைதூக்கவே இல்லை..
ரிசப்ஷனில் தான் அவளைப் பார்த்தேன்..அவளுடைய அக்காவுடன் வந்திருந்தாள்.. லைட் எல்லோ வித் ரெட் பார்டர் போட்டபுடவையில் கொஞ்சம் வயதைக்கூட்டுவது போல் தோன்றினாலும் முகத்தில் இளமைத்துள்ளல் கண்களில் நட்சத்திர மின்னல், அவள் அக்கா ப்ளூ கலர் பட்டுப்புடவையுடன் வந்து ”சுந்தரா” என்று புன்னகைக்க அடையாளம் தெரிந்தது.. பூவிழி அக்காவின் ஃப்ரெண்ட்..இது என் தங்கை மைவிழி சிவகங்கைல படிச்சுக்கிட்டிருந்தா இங்க ப்ளஸ்டூ செய்ண்ட்ஜோசப்ல பாட்டிவீட்ல தங்கிப் படிக்கிறா என இண்ட்ரோ செய்ய நான் அவளைப்பார்க்க அவள் என்னைப்பார்க்க நான்கு விழிகள் கலந்தன..இரண்டு உயிர்கள் எக்ஸ்சேஞ்ச் ஆகின
ஏன் உங்க தங்கை இவ்ளோ ஐடெக்ஸ் போட்டிருக்காங்க..
சிரித்தாள் பூவிழி.. அவ கண்ணே அப்படி.. கருகருன்னு.. பொறக்கறச்சேயே இருக்கறதப்பார்த்து அப்பா வெச்ச பேருதான் அது.. எனப் பெயர்விளக்கம் சொன்னாள்.. மையூ கொஞ்சம் வெட்கிச்சிரிக்கையில் குட்டியாய் ஒற்றைக்கன்னக் குழி உற்பத்தியாகி என்னைக் குழியில் தள்ளியது. ஒரு ஓரவிழிப்பார்வை அக்கா அறியாமல் என்னைப் பார்த்து லிப்ஸ்டிக் போடாத லைட் பிங்க் இதழினால் மென்முறுவலிக்க எனக்குள் கிளர்ந்தது..
.
கள்ளப்பார்வை கண்ணுக்கு இன்பம்
கள்ளச்சிரிப்பு நெஞ்சுக்கு இன்பம்…
இரண்டாம் முறை பார்த்தாலும் முதன் முறை பார்ப்பதுபோலவே இருக்க என் மனதில் பாடல் ஒலிக்க ஆரம்பித்தது..
உன்னை நான்பார்த்தது வெண்ணிலா வேளையில்
என் வண்ணங்கள் கண்ணோடு தான்
என் எண்ணங்கள் உன்னோடு தான்..
அடுத்த எபிசோடில் எங்கள் காதல் வளர்ந்த கதையும் பிரச்னைகள் உருவான கதையும் சொல்லட்டா..
நான் வாரேன்… 
தொடரும்..
**
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
20th September 2015 08:58 PM
# ADS
Circuit advertisement
Bookmarks