-
30th October 2015, 08:29 AM
#11
Junior Member
Senior Hubber

திகட்டாத 16 பூர்த்தியாகி,
தித்திக்கும் 17 துவக்கமாகி
இருக்கிறது.
பலத்த காற்றில் படபடத்து
விரிந்து மூடிக் கொள்கிற
புத்தகத்தின் பக்கங்கள் போல்,
பதினாறாம் திரியின் பக்கங்கள்
பரபரப்பாகவே நிறைந்து
பூர்த்தியாயின.
பதினாறென்ன..?
பதினேழென்ன..?
இலட்சம் திரிகளில் எழுதினாலும் தீராத புகழை
தன்னுடையதாக்கிக் கொண்ட
தனக்குவமை இல்லாத கலைஞன் அய்யா நடிகர் திலகம்.
அவரது பெருமை போற்றிய
பதினைந்து திரிகளில் நான்
இல்லையே என்கிற என்
கவலையை, இந்தப் பதினாறாம்
திரி தீர்த்தது.
மூன்று மாத கால மகிழ்வே
இத்தனை பரவசம் தருகின்றதென்றால்..
துவங்கியிருக்கிற இந்தப்
பதினேழாம் திரி முழுதும்
நான் பங்குபெறப் போகிற
சந்தோஷம்...
எனக்கு மோட்சமே தரும்.
------------
மக்கள் தலைவர் அய்யா
நடிகர் திலகத்தின் பெருமை
பேசி நான் 16-ம் திரியில்
எழுதிய ஒவ்வொன்றையும்
எழுத்து,எழுத்தாய் ரசித்து
என்னை வியந்தவர்கள்,
அன்போடு ஆலோசனை
தந்தவர்கள், பாராட்டியவர்கள்..
தரமான பதிவுகளால் திரியை
நிறைத்தவர்கள்...
அத்தனை பேருக்கும் திரி-16
நிறைவடைந்த இந்த நேரத்தில்
நெஞ்சார நன்றி சொல்கிறேன்.
திரி-16 எனும் இப்போது
நிலை சேர்ந்த தெய்வத் தேரோட்டத்தை அன்றொரு
தினம் தொட்டுக் கொடுத்துத்
துவக்கிய உயர்திரு.சிவாஜி செந்தில் அவர்களுக்கு எனது பணிவான நன்றிகள்.
திரி-17 எனும், அதே கடவுளை
உள்ளமர்த்திய அடுத்தவொரு
தெய்வத் தேருக்கு வடம்
பிடிக்க வந்திருக்கும் அன்புத்
தோழர்.திரு.செந்தில்வேல்
அவர்களுக்கு எனது இதயத்தின்
ஆழத்திலிருந்து நல்வாழ்த்துகள்.
திரு.செந்தில்வேல் அவர்களின்
ஆசைப்படியே பழைய திரிகளைப் பெருமை செய்த
பெரியோரெல்லாம் மீண்டும்
களமிறங்கட்டும்.
கலைக் கடவுளுக்கான நமது
புகழ் மந்திரங்கள் எல்லாத்
திசைகளிலும் ஒலிக்கட்டும்.
புனிதர் நடிகர் திலகத்தின்
புகழெழுதப் பேனாக்கள்
திறக்கட்டும்.
பதினேழு(ம்) சிறக்கட்டும்.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
30th October 2015 08:29 AM
# ADS
Circuit advertisement
Bookmarks