Results 1 to 10 of 220

Thread: KARUPPU TAJMAHAL

Threaded View

  1. #11
    Senior Member Veteran Hubber VENKIRAJA's Avatar
    Join Date
    Mar 2006
    Location
    Madras
    Posts
    3,285
    Post Thanks / Like
    சற்றேற்குறைய
    அந்தி கவியும் நேரம்,
    மந்திகள் எனைச்சூழும் தூரம்,
    சிந்திய தேனீர்த்துளி சட்டைமேல்,
    விந்தியம்போல் இமைகளோ நிரம்பமேல்.

    சற்றேற்குறைய
    கடவுள் அங்கே வீற்றிருந்தார்,
    அடவுன் கடையாசை என்னவென்றார்,
    அடியேன் மனைவியின் புன்னகைதான்
    குடியே!கேட்டுக்கொள்ளதையென வரந்தந்தான்.

    சற்றேற்குறைய
    கண்ணாடி அவிழ்ந்து உடைய
    என்னகரம் மேகச்சாறுகளால் சிதைய
    மெல்ல பட்சியினிறகு உதற
    சில்லறையாய் உயிர் சிதற

    சற்றேற்குறைய
    மரணம் மேகங்களின் அழுகையோடு.

    ________________________________________________

    உணர்வுகளின்றி
    உச்சாணிக்கொம்பினில்
    உணவால்
    உள்ளத்திற்கு
    உரம்சேர்த்துக்கொண்டிருக்கையில்
    உடைந்த
    உறுமுகில்கள்
    உப்பினைக்கொண்டு
    உயிரீயும்
    உன்னதம்
    உளத்தாலறியவியலாது
    உப்பளமன்ன
    உருண்டையாய்
    உபயோகமின்றி
    உம்மணாமூஞ்சியாக
    உட்கர்ந்திருந்தேனிந்த
    உட்டாலக்கடி.

    ______________________________________________

    'கும்'மென பூத்திருந்த
    காந்தி
    சொன்னதாம்
    சூரியனுக்காக காத்திருக்கிறேன்,
    அவனுக்கு பொருத்தமான துணியில்!

    'ஜம்'மென விரிந்திருந்த
    செம்பருத்தி
    சொன்னதாம்
    வண்டுக்காக காத்திருக்கிறேன்,
    அவனுக்கு விருப்பமான மணத்தில்!

    'கம்'மென அகழ்ந்திருந்த
    அல்லி மட்டும்
    சொன்னதாம்
    நிலா எனக்காக காத்திருக்கிறான் பார்,
    எனக்கு பொருத்தமான உடையொப்பனையில்!

    நீதி:தன்னம்பிக்கையே தனக்கு உதவி.

    __________________________________________________ __
    வாரீர் என
    வாரியணைக்கும்
    வங்காளக்கடல் போன்ற
    வரையா மரபு
    விரிகாலமாய் இருப்பினும்
    விசாலமான அறிவின்றி
    வீணணாய்ப் போனேனே
    விதண்டாவாதம் செய்யும்
    வேலையற்ற வேளையிலே
    வெங்காயங்கொணர்வதொப்ப
    வேண்டாம் என்னால்
    விழியின் விழுதாய் நீர்.
    __________________________________________________ __
    எனக்கே பிடிக்காத என் படைப்புகள் இவை.இருப்பினும் ஒரு அல்ப ஆசை,யாராவது ஓரே ஒருவர் ஏதோ பரவாயில்லை என்று சொல்வார்களென்ற எதிர்பார்ப்பிலே.........

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Similar Threads

  1. Is Karuppan a God or a split-personality? in V Karuppu.
    By kandeeban in forum TV,TV Serials and Radio
    Replies: 2
    Last Post: 20th October 2008, 09:10 PM
  2. song from tajmahal needed
    By kokarako in forum Current Topics
    Replies: 1
    Last Post: 11th August 2006, 11:02 PM
  3. Karuppu Roja
    By Shakthiprabha. in forum Poems / kavidhaigaL
    Replies: 19
    Last Post: 2nd November 2005, 10:01 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •