-
6th April 2011, 11:39 PM
#11
ராகவேந்தர் சார்,
பாடல்களுக்கு நன்றி. குறிப்பாக பலே பாண்டியா மற்றும் அவன் ஒரு சரித்திரம் படப் பாடல்களுக்கு. ஒரு மாவட்ட ஆட்சி தலைவர் நேர்மையாக நடந்து கொண்டால் என்ன நடக்கும் என்பதை அன்றே நமது நடிகர் திலகம் திரையில் வடித்திருக்கிறார். அது போல சிறையில் உள்ளே இருப்பவர்கள் கம்பி எண்ணிக் கொண்டிருக்க வெளியே சிலர் தங்களை பணத்தை எண்ணும் காட்சியும் இன்றைக்கு சுமார் 49 வருடங்களுக்கு முன்பே சுட்டிக் காட்டப்பட்டு விட்டது என்பது ஆச்சரியமான விஷயமே.
சுவாமி,
திருவருட்செல்வர் பற்றிய நல்ல தகவலுக்கு நன்றி. தகவல் உறுதியாகும் என நம்புவோம்.
சாரதி,
ஆண்டவன் கட்டளை பற்றிய செய்திகள் உணர்வு பூர்வமாக இருந்தது. நான் உங்களிடம் குறிப்பிட்டது போல் எனக்கு மிகவும் பிடித்த நடிகர் திலகத்தின் படங்களில் ஒன்றாக ஆண்டவன் கட்டளையை குறிப்பிடுவேன். அதன் காரணமாகவே படத்திற்கு ஒரு முறை விமர்சனமும், பிறகு சென்ற அக்டோபரில் நடராஜ் தியேட்டரில் பார்த்த போது தோன்றியதையும் மீண்டும் ஒரு பதிவு செய்தேன். ராகவேந்தர் சார் கூட ஒரு முறை வேறொருவரிடம் பேசும் போது என் எழுத்துக்களின் மூலமாக பல பேரை ஆண்டவன் கட்டளை படத்திற்கு ரசிகர்களாக மாற்றி விட்டேன் என சொன்னார். இந்த படம் முதல் வெளியீட்டில் 100 நாட்கள் ஓடவில்லை என்ற வருத்தம் எனக்கு இப்போதும் உண்டு [அதன் காரணங்களை, பாரகனில் புதிய பறவை ரிலீஸ் போன்றவற்றை பற்றி நான் எழுதியதையும் படித்திருப்பீர்கள்].
அண்மையில் மகாலட்சுமி அரங்கில் நண்பகல் காட்சியாக வெளியான போதும் நல்ல வரவேற்பு என்று சுவாமி சொன்னார். இதை பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது சுவாமி ஒரு முறை ஒரு விஷயம் சொன்னார். பி.எஸ்.வீரப்பா தயாரித்த ஆலயமணி மற்றும் ஆண்டவன் கட்டளை படங்களை எடுத்துக் கொண்டால் ஆலயமணிதான் பெரிய வெற்றிப் படம். ஆனால் மறு வெளியீடு என்று பார்த்தால் சென்னையில் ஆண்டவன் கட்டளை வெளியான, வெளியாகிற அளவில் நான்கில் ஒரு பங்கு கூட ஆலயமணி மறு வெளியீடு கண்டதில்லை என்பதை சுட்டிக் காட்டினார். முதல் தடவை கொடுக்க தவறிய ஆதரவை வட்டியும் முதலுமாக சேர்த்துக் கொடுகிறார்கள் மக்கள் என நான் அவருக்கு பதிலளித்தேன். சென்னை என்றல்ல அனைத்து ஊர்களிலுமே ஆண்டவன் கட்டளைக்கு கிடைக்கும் வரவேற்பே தனி.
அன்புடன்
-
6th April 2011 11:39 PM
# ADS
Circuit advertisement
Bookmarks