-
8th April 2011, 02:26 PM
#1561
Senior Member
Senior Hubber
அன்புள்ள திரு. முரளி அவர்களே,
நடிகர் திலகத்தின் "சிவகாமியின் செல்வன்" படத்தைப் பற்றிய மிகவும் சுவையான செய்திகளைப் பகிர்ந்து எல்லோரையும் அந்த நினைவுகளில் மூழ்கடித்து விட்டீர்கள்.
நடிகர் திலகத்தின் பெருந்தன்மைக்கு எடுத்துக்காட்டாக பல படங்களைச் சொல்லலாம். இந்த வரிசையில் சிவகாமியின் செல்வன், வாணி ராணி, புண்ணிய பூமி, போன்ற படங்களையும், மேலும் சில படங்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.
ஆராதனா சிவகாமியின் செல்வனாக ஆகப் போகிறது என்னும்போதே, நாங்கள் "நடிகர் திலகம் எதற்கு இது போன்ற கதாநாயகிக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்படும் படத்தில் நடிக்க ஒத்துக் கொள்கிறார்" என்று புலம்ப ஆரம்பித்தோம். அதற்கு இன்னொரு முக்கியமான காரணம் நீங்கள் குறிப்பிட்ட அந்த 35 நிமிடங்கள். தந்தை பாத்திரம் இறந்து, பின்னர், மகனாக வரும் நடிகர் திலகம் வரும் வரை. இந்தியிலும், இதே போல் வரும் என்பதால், எப்படி நடிகர் திலகம் கதாநாயகனாக நடிக்கும் படத்தில், இவ்வளவு பெரிய இடைவெளி வர ஒத்துக் கொள்ள முடியும் என்பதால் எங்களுக்குள் ஒரு apprehension (நீங்கள் சொன்னது போல்).
ஆனாலும், அவ்வளவு பெரிய இடைவெளிக்குப் பின்னர், மகனாக நடிப்பவர் அறிமுகக் காட்சியில், அந்தக் குறையை முழுவதுமாக மறக்கடிக்கிறார்ப் போல் நடிகர் திலகம் அந்த விமானத்தில் இருந்து இறங்கி வேகமாகவும், ஸ்டைலாகவும் நடந்து வரும் காட்சி. ரொம்ப நேரமாக நடிகர் திலகத்தைத் திரையில் பார்க்க முடியாத வேதனையில் அனைவரும் இருக்கும் வேளையில், அவருடைய இந்த அறிமுகக் காட்சி ஒட்டு மொத்த ரசிகர்களையும் மறக்கடிக்க வைத்தது - அரங்கமும் அதிர்ந்தது, ஆனந்தப் பேரலையில்! இந்தப் பாத்திரத்தில், அவருடைய சிகை அலங்காரமும், மீசையும் ரொம்பவே நன்றாக இருக்கும். அதிலும், பைலட்டுகள் எப்படி அந்த ஹெல்மெட்டை இடுப்பில் வைத்துக் கொண்டு நடப்பார்களோ அதை அப்படியே கனகச்சிதமாகச் செய்து, தொய்ந்து போய்க் கொண்டிருக்கும் படத்துக்கு மீண்டும் உயிர் கொடுத்திருப்பார். அதே ஜீவனுடன், படமும் முடியும். சாரதா மேடம் குறிப்பிட்டதுபோல், தமிழில், வழக்கம் போல், நடிகர் திலகம் இரு வேறு பாத்திரங்களுக்கு அற்புதமாக வித்தியாசம் காட்டியிருந்தார்.
தந்தை பாத்திரத்தில் வருபவரின் சிகை அலங்காரமாகட்டும், உடை அலங்காரமாகட்டும், கொள்ளை அழகாக இருக்கும். எங்கள் எல்லோருக்கும் மிகவும் பிடித்த பாடல் திரு. ராகவேந்தர் அவர்கள் குறிப்பிட்ட அந்த "மேளதாளம் கேட்கும் காலம் விரைவில் வருக வருக" பாடல்தான். இந்தப் படமும் அவன் தான் மனிதனைப் போல், முதல் வெளியீட்டுக்குப் பின் இன்னமும் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. அவன்தான் மனிதனை சமீபத்தில் குறுந்தகடு வடிவில் பார்த்து இன்புற்றேன். ஒட்டுமொத்த தர அடிப்படையில், அவன்தான் மனிதனை சிவகாமியின் செல்வனுடன் compare செய்யவே முடியாது என்பது வேறு விஷயம்.
இசையமைப்பைப் பொறுத்தவரை, மெல்லிசை மன்னர் ஒவ்வொரு பாடலையும் அசலை ஓட்டிப் போடாமல், சொந்த மெட்டைப் போட்டு பிரமாதப்படுத்தியிருந்தார். இதே போல் பல படங்களைச் சொல்லலாம் - ஹிந்தி பிரம்மச்சாரி தமிழில் எங்க மாமாவானபோது, ஹிந்தியை விடத் தமிழில் அற்புதமான பாடல்கள் - ஒரு பாடலைக் கூடக் காப்பியடிக்காமல் கொடுத்திருந்தார்.
"மேள தாளம் கேட்கும் காலம்" - இனிய நினைவுகளைக் கிளறிய தங்களுக்கு நன்றி.
அன்புடன்,
பார்த்தசாரதி
-
8th April 2011 02:26 PM
# ADS
Circuit advertisement
-
9th April 2011, 07:50 AM
#1562
Senior Member
Seasoned Hubber
சென்னை சாந்தி திரையரங்கில் வரும் 14.04.2011 முதல் திரையிடப் படவுள்ள திருவருட் செல்வர் திரைப்படத்தின் நிழற்படங்கள் திரையரங்கின் முகப்பில் பார்வைக்கு வைக்கப் பட்டுள்ளன. இதோ அவை நம் பார்வைக்கு

அன்புடன்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
10th April 2011, 01:30 PM
#1563
Senior Member
Seasoned Hubber
நான் விரும்பிய காட்சி - 1
எப்படிப் பாடல் காட்சிகளில் நடிகர் திலகம் பல்வேறு சூழ்நிலைகளைக் கொண்டு வந்துள்ளாரோ, அதே போன்று தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் ஏதாவது ஒரு காட்சியில் தன்னுடைய சிறப்பான முத்திரையை பதித்து விடுவார். அப்படிப் பட்ட காட்சிகளை நாம் இங்கே அலசலாம். அனைவரும் தம்முடைய அபிமான காட்சியினைப் பற்றி இங்கே தம்முடைய கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம். இதோ துவக்கமாக கோடீஸ்வரன் படத்திலிருந்து ஒரு காட்சி
அன்புடன்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
10th April 2011, 01:33 PM
#1564
Senior Member
Seasoned Hubber
மிகவும் விறுவிறுப்பாகவும் நகைச்சுவையாகவும் செல்லக் கூடிய படம் கோடீஸ்வரன். தங்கவேலுவின் மகள் பத்மினி, மகன் ஸ்ரீராம். தங்கவேலு மிகவும் கோபக் காரர், மட்டுமல்ல, பணத்திலேயே குறியாக இருப்பவர். அவருடைய எதிர்ப்பை மீறி ஸ்ரீராம் காதல் மணம் புரிந்து கொண்டு விடுகிறார். இருந்தாலும் அவர் மனைவியிடமும் வரதட்சணை வாங்கி விடுவார் தங்கவேலு. சிவாஜி பத்மினி காதலை அறிந்தால் எதிர்ப்புக் காட்டுவார் என்று, காதலர்கள் இருவரும் நாடகம் ஆடுகின்றனர். அது தொடர்பான காட்சியே இது.
அன்புடன்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
11th April 2011, 09:51 AM
#1565
Senior Member
Seasoned Hubber
காலங்கடந்து நிற்கும் நடிகர் திலகத்தின் கொள்கைப் பாடல்கள் - 5
தன்னுடைய இறுதி மூச்சு வரையிலும் தமிழகத்தைப்பற்றியும் தமிழக மக்களைப் பற்றியும் மட்டுமே கவலைப் பட்டவர் பெருந்தலைவர். அவருடைய மிக முக்கியமான லட்சியம், தமிழகம் கல்வியில் முதலிடம் பெற வேண்டும் என்பதே ஆகும். குழந்தைகள் கல்வி கற்காமல் இருப்பதற்கு அவர்களின் வறுமையும் பட்டினிக் கொடுமையும் காரணம் என்பதை உணர்ந்து ஏழைக் குழந்தைகளுக்கு மதிய உணவுத் திட்டம் கொண்டு வந்தார். அவருடைய திட்டங்களில் எந்த வித உள் நோக்கங்களோ அல்லது பிரதி பலனை எதிர்பார்க்கும் எண்ணமோ இருந்ததில்லை. அவருடைய உண்மைத் தொண்டனான நடிகர் திலகம் தானும் அதே போல் வாழ்ந்து காட்டினார். தம்முடைய படங்களில் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் பெருந்தலைவர் பற்றி சொல்லாமல் இருந்ததில்லை. அதுகூட வெறும் புகழுரைகள் மட்டுமே இடம் பெறாமல் அவருடைய கொள்கைகளைத் தன்னுடைய பாடல்கள் மூலம் மக்களுக்கு விளக்கினார்.
அப்படி ஒரு கொள்கைப் பாடல் தான் ஊருக்கு ஒரு பிள்ளை படத்தில் இடம் பெற்ற புரியாத வெள்ளாடு எனத் துவங்கும் பாடலாகும். இப் பாடல் முழுவதும் கல்வியின் மேன்மையை எடுத்துக் கூறுவதாகும். இன்றைக்கும் இந்த நிலைமை நீடிப்பது நமக்கு நிச்சயம் வருத்தத்திற்குரிய விஷயம். என்றைக்கு மக்கள் தாமாக முன் வந்து குழந்தைகளுக்கு கல்வி போதிப்பதற்கு முன்னுரிமை தருகிறார்களோ, என்றைக்கு குழந்தைத் தொழிலாளர் முறை முற்றிலும் ஒழிக்கப் படுகிறதோ, அன்றைக்கு பெருந்தலைவரின் லட்சியம் நிறைவேறியதற்கு சான்றாகும்.
இனிமையான இப்பாடலை இயற்றியவர் கவிஞர் முத்துலிங்கம். இசை மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் குரல்கள் டி.எம்.சௌந்தர் ராஜன், பி.சுசீலா. நடிப்பு நடிகர் திலகம், புன்னகை அரசி.
இதோ பாடல் வரிகள்.
பெண்- புரியாத வெள்ளாடு
தெரியாமே ஓடுது
புடிச்சாந்து கூட்டத்திலே சேர்ப்போம் - புரியாத வெள்ளாடு
சரியான பாதையில் ஒழுங்காக போகவே
புத்திமதி நாம் சொல்லி பார்ப்போம்
சரியான பாதையில் ஒழுங்காக போகவே
புத்திமதி நாம் சொல்லி பார்ப்போம்
ஆண் – பணிவுக்கு பூமியில் மதிப்பு
நல்ல பண்பாடு வாழ்வுக்கு சிறப்பு
பணிவுக்கு பூமியில் மதிப்பு
நல்ல பண்பாடு வாழ்வுக்கு சிறப்பு
உழைப்பால் உயர வேணும் கைகள்
உயர்ந்த வாழ்க்கையை உருவாக்கும் கலைகள்
இது புரியாத வெள்ளாடு ...
பெண் – உயிருக்கு தேவையெல்லாம் வயித்துக்கு சோறு
அறிவுக்கு தேவையெல்லாம் புத்தகம் பாரு
படிப்புக்கு நிகரான செல்வங்கள் ஏது
பாமரனை உலகம் என்றும் மதிக்காது கேளு
இது புரியாத வெள்ளாடு ...
ஆண் – இரவுக்கு தீபமென்று நிலவுக்கு பேரு
இதயத்தின் தீபமென்று கல்வியைக் கூறு
துணிவுக்கு கொடியேற்று துன்பத்தை வெல்லு
சோம்பல்களை நீக்கி விட்டு புகழ் வாங்க செல்லு
இது புரியாத வெள்ளாடு
பெண் – நம்பிக்கை நெஞ்சில் வைத்தால் சாதிக்கலாகும்
நல்லவர் பாதை சென்றால் வெற்றிகள் சேரும்
ஆண் – திறமைக்கு வரவேற்பு என்றைக்கும் உண்டு
தேன் கமழும் பள்ளிகள் தான் திருக்கோயில் இன்று
தேன் கமழும் பள்ளிகள் தான் திருக்கோயில் இன்று
இது புரியாத வெள்ளாடு தெரியாமெ ஓடுது
புடிச்சாந்து கூட்டத்திலே சேர்ப்போம்
இருவரும் – சரியான பாதையில் ஒழுங்காகப் போகவே
புத்திமதி நாம் சொல்லி பார்ப்போம்
இது புரியாத வெள்ளாடு தெரியாமெ ஓடுது
புடிச்சாந்து கூட்டத்திலே சேர்ப்போம்
இதில் பாமரனை உலகம் என்றும் மதிக்காது என்ற வரியில் பாமரன் என்பதற்கு கல்வி யறிவு இல்லாதவன் என்று பொருள் கொள்க. அரசியல்வாதிகள் கூறும் பாமரன் பொருள் இல்லை.
அன்புடன்
Last edited by RAGHAVENDRA; 11th April 2011 at 09:54 AM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
11th April 2011, 11:20 AM
#1566
Senior Member
Seasoned Hubber
Tribute to Sujatha

Originally Posted by
saradhaa_sn
Very nice Tribute Article about Actress Sujatha.
Thanks
-
11th April 2011, 06:11 PM
#1567
Senior Member
Senior Hubber
திரு. ராகவேந்தர் அவர்களே,
ஒவ்வொரு நடிகர் திலகத்தின் ரசிகனையும் மேலும் உற்சாகப் படுத்தும் வண்ணம், ஒரு புதிய concept -ஐ தேர்வு செய்து, அதன் மூலம் ஏராளமான எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள வழி வகுத்திருக்கின்றீர்கள். மிக்க நன்றி.
நான் விரும்பிய காட்சி (1):-
எத்தனையோ படங்களை இங்கு பட்டியலிட முடியும். முதலில், "பழனி" படத்தில் இருந்து ஒரு காட்சி. இந்தப் படமும் நான் பார்த்து கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் ஆகின்றது. ஆனாலும், இந்த ஒரு காட்சி பசுமையாக நினைவில். இத்தனைக்கும் இந்தப் படத்தை அதற்கப்புறம் இன்னும் பார்க்கவில்லை. அதுதான் நடிகர் திலகம் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஊடுருவிப் படரும் தன்மை.
படத்தில், நடிகர் திலகத்தின் சகோதரி மகளாகவும், அதே நேரத்தில், அவரது தம்பி எஸ்.எஸ்.ஆரை மணக்கப் போகிறவராகவும் வரும் தேவிகாவைப் பற்றி அவதூறாக சில வார்த்தைகள் அவரது காதில் விழ, அதிர்ச்சியில், அவரது வீட்டிற்குள் நுழைந்து அங்கிருக்கும் ஒரு பெஞ்சில் வந்து நடிகர் திலகம் உட்காருவார். உடனே, தேவிகா ஒரு குழந்தை போல் ஓடி வந்து "மாமா" என்று சொல்லி நிற்பார். தேவிகாவைப் பற்றிய தவறான தகவல்களுடன் இருக்கும் நடிகர் திலகம், குழந்தை போல் ஓடி வந்து தன் முன்னே நிற்கும் தேவிகாவைப் பார்த்து காட்டும் முக பாவம் "இவளையா இப்படி சொல்கிறார்கள்?" - வார்த்தைகளே இல்லாமல் வெறும் முக பாவனையினால்! அதுவும், தேவிகா "மாமா" என்று வந்து நின்ற அடுத்த நொடி!! இந்தக் காட்சிக்கு திரை அரங்கத்தில் அவருக்குக் கிடைத்த கைத்தட்டல் இருக்கிறதே!!!
இந்த ஒரே ஒரு விஷயம் போதும் நடிகர் திலகம் யார் என்று சொல்ல! உலகத்தில் வேறு எந்த நடிகனும், அவனுடைய நடிப்புக்கு - தன்னுடைய ரியாக்ஷனுக்கு அவர் வாங்கிய அங்கீகாரம் - அதாவது உடனடி அங்கீகாரம் - மக்களிடத்தில் இருந்து - இது வரை யாரும் அவர் வாங்கியதில் ஒரு பத்து சதம் கூட வாங்கவில்லை - இனியும் வாங்கமுடியும் என்று தோன்றவில்லை. இங்கு நான் அங்கீகாரம் என்று சொல்வது கைத்தட்டல் - ஏனென்றால் ஆர்ப்பரிப்பு, விசிலடிப்பது, கத்துவது, நடனமாடுவது இதெல்லாம், ஒரு ரசிகன் அவனுக்குப் பிடித்த கலைஞனுக்கு அன்பின் மிகுதியால் தருவது. கைத்தட்டல் ஒன்றுதான் தன்னை மறந்து தருவது. அது, ஒரு ரசிகனிடமிருந்து மட்டுமல்ல; எல்லோரிடமிருந்தும் வருவது. இந்த ஒரு விஷயம் மட்டும், பெருமளவில், நடிகர் திலகத்திற்கு மட்டும்தான் கிடைத்தது, இன்னும் கிடைத்துக் கொண்டிருக்கிறது.
இந்தக் காட்சியை இங்கு பதிவிடும் வசதி எனக்கில்லை. கூடிய சீக்கிரம் அதற்கும் முயல்கிறேன்.
தொடரும்,
அன்புடன்,
பார்த்தசாரதி
Last edited by parthasarathy; 11th April 2011 at 06:16 PM.
-
12th April 2011, 10:46 AM
#1568
Senior Member
Seasoned Hubber
டியர் பார்த்தசாரதி,
தங்களுடைய வரவேற்பு பதிவுக்கு என் உளமார்ந்த நன்றி. சிவாஜி ரசிகர்களின் எண்ண ஓட்டங்கள் ஒரே மாதிரி தான் இருக்கும் என்பதற்கு தாங்கள் பழநி படத்தில் குறிப்பிட்டுள்ள காட்சியே சாட்சி. எனக்கும் அந்த காட்சிதான் முதலில் ஈர்த்தது. இது போல் தங்களிடமிருந்து மேலும், மற்ற நண்பர்களிடமிருந்தும் பதிவுகள் எதிர்பார்க்கிறேன்.
அன்புடன்
ராகவேந்திரன்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
12th April 2011, 11:01 AM
#1569
Senior Member
Seasoned Hubber
தேர்தல் 2011
ஜனநாயகத்தின் மிகமுக்கியமான கட்டம் தேர்தல். தம்மை ஆளப்போகிறவர் யாரென்று தீர்மானிக்கும் சக்தியை மக்கள் பயன் படுத்தும் நாள் வாக்குப் பதிவு நாள். நம்மிடையே இன்று நடிகர் திலகம் இல்லை. எனவே ரசிகர்கள் யாருக்கு வாக்களிப்பது என்று நிச்சயம் யோசித்திருப்பார்கள். அப்படி ஒரு முடிவெடுக்க முடியாத ரசிகர்களுக்கு கீழ்க்காணும் கருத்துக்கள் உதவியாக இருக்கும் என எண்ணுகிறேன்.
1. தம்மிடம் ஒரு மாற்று சக்தி இருக்கிறது என்ற எண்ணத்தில் 1960-70களின் துவக்கத்தில் நடிகர் திலகத்தைப் பற்றிப் பல அவதூறுகளையும் இழிசொற்களையும் பரப்பியவர்களை நாம் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். நடிகர் திலகம் ராசியில்லாதவர், அரசியலுக்கு லாயக்கில்லாதவர், கஞ்சன் என்று பல வகையான அவதூறுகளைப் பரப்பியவர்களை பழைய சிவாஜி ரசிகர்கள் இன்றும் மறக்க வில்லை.
2. அதே மாற்று சக்தி தம்மை விட்டு விலகிய போது, அதே உதடுகள் சந்தர்ப்பவாதிகளாக, நடிகர் திலகமே மேல் என்று நாடகமாடியது.
3. அந்த இயக்கமும் நடிகர் திலகம் சார்ந்த இயக்கத்திலேயே இருந்த சிலரும் சேர்ந்து கொண்டு அவருக்கு வரவேண்டிய சிறந்த நடிகர் பட்டத்தை கிடைக்க விடாமல் செய்ததையும் நம்மால் மறக்க முடியாது.
4. காலங்காலமாக அவருடைய உழைப்பை உறிஞ்சி விட்டு, கடைசியில் சிலருடைய தவறான ஆலோசனையின் பேரில் நடிகர் திலகம் தான் சார்ந்த தேசிய இயக்கத்தை விட்டு பிரிய காரணமாக இருந்த அந்த இயக்கத்தை நம்மால் மன்னிக்க இயலாது.
5. நடிகர் திலகம் ஒரு தேசிய தலைவர், தேசப் பற்றை பல தலைமுறையிடம் வளர்த்தவர், தம் படங்களின் மூலம் இன்றும் வளர்த்துக் கொண்டிருப்பவர். அவருடைய படத்தை தம்முடைய மாநில தலைமை அலுவலகத்தில் வைப்பது அந்த இயக்கத்தின் கடமை. ஆனால் அதையே பெரிய தரும காரியம் செய்வது போல் வைத்து விட்டு பின்னர் அகற்றிவிடும் இயக்கத்தையும் நம்மால் மன்னிக்க முடியாது.
6. அரசியல் நாகரீகம் பற்றி வாய்கிழிய பேசுபவர்கள் அவர் தேர்தலில் நின்ற பொழுது அவரை தோற்கடிக்க கங்கணம் கட்டிக் கொண்டு வேலை செய்தது.
7. கடந்த காலங்களில் தாங்கள் அவருக்கு செய்த கொடுமைகளுக்கு பிராயசித்தமாக ஒரே ஒரு காரியம் செய்து அதையே பெரிய சாதனையாக சொல்லிக்கொள்வது.
இவர்களையெல்லாம் நாம் சரியாக அடையாளம் கண்டு கொண்டால், சிவாஜி ரசிகர்கள் யாருக்கு தங்கள் வாக்கினை அளிப்பது, என்பதில் குழப்பம் இருக்காது என எண்ணுகிறேன். இது பற்றி மற்ற ரசிகர்களும் தம் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம். தங்களுடைய கருத்துக்களை சொல்லும் போது வழிமுறைகளை மட்டும் கூறி விட்டு தனிப்பட்ட மனிதர்களையோ அல்லது இயக்கத்தையோ குறிப்பிடாமல் இருத்தல் நலம்.
அன்புடன்
Last edited by RAGHAVENDRA; 12th April 2011 at 11:06 AM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
12th April 2011, 11:47 AM
#1570
Senior Member
Diamond Hubber

Originally Posted by
RAGHAVENDRA
இவர்களையெல்லாம் நாம் சரியாக அடையாளம் கண்டு கொண்டால், சிவாஜி ரசிகர்கள் யாருக்கு தங்கள் வாக்கினை அளிப்பது, என்பதில் குழப்பம் இருக்காது என எண்ணுகிறேன்.
கண்டிப்பாக எனக்கு குழப்பம் இருக்கிறது ராகவேந்திரா சார் . நீங்கள் யாரை வேண்டாமென்று சொல்கிறீர்கள் என எனக்கு புரிகிறது ..கருணாநிதியையும் , திமுக-வையும் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும் என சொல்வது புரிகிறது ..ஆனால் யாருக்கு வாக்கை அளிப்பது என்பதை இன்னும் தெளிவாக சொல்லியிருக்கலாம் .. அதிமுக-வுக்கும் நடிகர் திலகத்தை மிகவும் போற்றி மதித்த ஜெயலலிதாவுக்கும் வாக்களிக்க வேண்டுமா ? வெளிப்படையாக சொல்லிவிடுங்கள்.
Bookmarks