-
12th April 2011, 11:01 AM
#11
Senior Member
Seasoned Hubber
தேர்தல் 2011
ஜனநாயகத்தின் மிகமுக்கியமான கட்டம் தேர்தல். தம்மை ஆளப்போகிறவர் யாரென்று தீர்மானிக்கும் சக்தியை மக்கள் பயன் படுத்தும் நாள் வாக்குப் பதிவு நாள். நம்மிடையே இன்று நடிகர் திலகம் இல்லை. எனவே ரசிகர்கள் யாருக்கு வாக்களிப்பது என்று நிச்சயம் யோசித்திருப்பார்கள். அப்படி ஒரு முடிவெடுக்க முடியாத ரசிகர்களுக்கு கீழ்க்காணும் கருத்துக்கள் உதவியாக இருக்கும் என எண்ணுகிறேன்.
1. தம்மிடம் ஒரு மாற்று சக்தி இருக்கிறது என்ற எண்ணத்தில் 1960-70களின் துவக்கத்தில் நடிகர் திலகத்தைப் பற்றிப் பல அவதூறுகளையும் இழிசொற்களையும் பரப்பியவர்களை நாம் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். நடிகர் திலகம் ராசியில்லாதவர், அரசியலுக்கு லாயக்கில்லாதவர், கஞ்சன் என்று பல வகையான அவதூறுகளைப் பரப்பியவர்களை பழைய சிவாஜி ரசிகர்கள் இன்றும் மறக்க வில்லை.
2. அதே மாற்று சக்தி தம்மை விட்டு விலகிய போது, அதே உதடுகள் சந்தர்ப்பவாதிகளாக, நடிகர் திலகமே மேல் என்று நாடகமாடியது.
3. அந்த இயக்கமும் நடிகர் திலகம் சார்ந்த இயக்கத்திலேயே இருந்த சிலரும் சேர்ந்து கொண்டு அவருக்கு வரவேண்டிய சிறந்த நடிகர் பட்டத்தை கிடைக்க விடாமல் செய்ததையும் நம்மால் மறக்க முடியாது.
4. காலங்காலமாக அவருடைய உழைப்பை உறிஞ்சி விட்டு, கடைசியில் சிலருடைய தவறான ஆலோசனையின் பேரில் நடிகர் திலகம் தான் சார்ந்த தேசிய இயக்கத்தை விட்டு பிரிய காரணமாக இருந்த அந்த இயக்கத்தை நம்மால் மன்னிக்க இயலாது.
5. நடிகர் திலகம் ஒரு தேசிய தலைவர், தேசப் பற்றை பல தலைமுறையிடம் வளர்த்தவர், தம் படங்களின் மூலம் இன்றும் வளர்த்துக் கொண்டிருப்பவர். அவருடைய படத்தை தம்முடைய மாநில தலைமை அலுவலகத்தில் வைப்பது அந்த இயக்கத்தின் கடமை. ஆனால் அதையே பெரிய தரும காரியம் செய்வது போல் வைத்து விட்டு பின்னர் அகற்றிவிடும் இயக்கத்தையும் நம்மால் மன்னிக்க முடியாது.
6. அரசியல் நாகரீகம் பற்றி வாய்கிழிய பேசுபவர்கள் அவர் தேர்தலில் நின்ற பொழுது அவரை தோற்கடிக்க கங்கணம் கட்டிக் கொண்டு வேலை செய்தது.
7. கடந்த காலங்களில் தாங்கள் அவருக்கு செய்த கொடுமைகளுக்கு பிராயசித்தமாக ஒரே ஒரு காரியம் செய்து அதையே பெரிய சாதனையாக சொல்லிக்கொள்வது.
இவர்களையெல்லாம் நாம் சரியாக அடையாளம் கண்டு கொண்டால், சிவாஜி ரசிகர்கள் யாருக்கு தங்கள் வாக்கினை அளிப்பது, என்பதில் குழப்பம் இருக்காது என எண்ணுகிறேன். இது பற்றி மற்ற ரசிகர்களும் தம் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம். தங்களுடைய கருத்துக்களை சொல்லும் போது வழிமுறைகளை மட்டும் கூறி விட்டு தனிப்பட்ட மனிதர்களையோ அல்லது இயக்கத்தையோ குறிப்பிடாமல் இருத்தல் நலம்.
அன்புடன்
Last edited by RAGHAVENDRA; 12th April 2011 at 11:06 AM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
12th April 2011 11:01 AM
# ADS
Circuit advertisement
Bookmarks