
Originally Posted by
RAGHAVENDRA
அன்பு நண்பர்களே,
நம்மில் எத்தனை பேர் கடந்த 28.04.2011 அன்று இரவு விஜய் டி.வி. நடந்தது என்ன நிகழ்ச்சியைப் பார்த்திருப்பீர்கள் என் று தெரியாது. ஆனால் அன்றைய நிகழ்ச்சியில் கமலா திரையரங்கு உரிமையாளர் திரு சிதம்பரம் அவர்கள் கூறிய தகவல் நம் அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கும் என்றால் மிகையில்லை. சமீபத்தில் மறைந்த ஆன்மீக குரு பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா அவர்கள் ஒரு முறை நடிகர் திலகத்தை அழைத்திருந்தாராம். சிதம்பரம் அவர்கள் அழைத்து சென்றிருக்கிறார். அங்கே நடுநாயகமாக வீற்றிருந்த பகவான் அவர்கள் 50 அடி தூரத்திலுள்ள பாதையை விட்டு விட்டு, 150 அடி தூரத்திலுள்ள பாதை வழியாக நடிகர் திலகத்தை வரச் சொல்லியிருக்கிறார். அதே மாதிரி சென்ற நடிகர் திலகத்திடம் பாபா அவர்கள் கேட்டிருக்கிறார், கணேசு, உன்னை ஏன் 150 அடி தூரத்திலுள்ள பாதை வழியாக வரச்சொன்னேன் தெரியுமா என்று. பதில் தெரியாமல் நடிகர் திலகம் ஆவலுடன் பாபா அவர்களை நோக்க, பாபாவே பதிலளித்திருக்கிறார். உன்னுடைய நடையழகை பார்க்கவே உன்னை அப்படி வரசொன்னேன் என கூறியிருக்கிறார்.
திரு சிதம்பரம் அவர்கள் அளித்த பேட்டியின் காணொளி
அனைத்து இறையருளும் ஒருங்கே அமையப் பெற்ற நடிகர் திலகத்தின் மேல் தூற்று மாரி பொழிவோரைப் பற்றி நாம் கவலைப் பட வேண்டாம். அவர்களை அந்த இறைவன் பார்த்துக்கொள்வார். நாம் நம்முடைய பணியைத் தொடர்வோம்.
அன்புடன்
Bookmarks