-
23rd May 2011, 03:52 AM
#11
Senior Member
Diamond Hubber
படமா இது?!? காவியம், கவிதை, கலை! கலக்கியிருப்பது ஒட்டுமொத்த டீமுமே
( நந்தலாலா, அழகர்சாமியின் குதிரை போன்ற தரமான படங்கள் பெங்களூரில் ரிலீஸே ஆகாது
ஏதோ "கண்டேன்" என்று ஒரு படம், சந்தானம் தவிர ஒரு முகமும் தெரியவில்லை, அது 5 தியேட்டர்களில் ஓடுகிறது. இந்தப்படம் ஒசூரில் ஓடுகிறதா என்றும் இணையம் மூலம் தெரிந்துகொள்ளமுடியவில்லை என்பதால் வேறு வழியின்றி திருட்டுத்தட்டிடம் சரணடைந்தேன் )
கதை ஆரம்பத்தில் சற்று தினுசு, சற்று பழசு என மாறிமாறிச் சென்றபோது நிறைய சந்தேகங்கள் வந்தன, இப்படி கதை இருந்தால் பின்னால் எப்படி சுவாரசியம் கூடும் என. அதற்கேற்றார்போல் சமீபகாலமாக வரும் கிராமிய படங்களுக்கே உரிய ஊர்த்திருவிழா, ஊர்ப்பெருசுகளின் வெட்டிச்சண்டை, மூடநம்பிக்கை, ரகசிய காதல் இப்படி பல. ஆனால் குதிரை தொலைந்தபின் சற்றே போக்கு மாறுவது, நீண்டநேரம் கதைநாயகன் அப்புகுட்டி அறிமுகமாகாமல் இருப்பது எல்லாம் நிமிர்ந்து உட்காரவைக்கின்றன. அப்புகுட்டி வந்தபின்னர் சூடுபிடித்துவிடுகிறது.
கதாபாத்திர தேர்வு, கதை செல்லும் தினுசு, இடையிடையே சொல்லப்படும்/வெளிப்படும் கருத்துக்கள், கருத்தாக்கங்கள், எல்லாமே டாப்கிளாஸ். அவ்வப்போது வேகம் குறைவதுபோல் இருந்தாலும் கிளைமேக்சும், பரவலாக வரும் பின்னணி இசையும் என்னை கடைசி வரை ஆர்வத்துடன் வைத்துருந்தன. ஆரம்பம் முதல் கடைசிவரை, இயல்பு குறையாமல் இருந்தது, மூல நாவலும் அதை வெகு திறமையாக படமாக்கிய விதமுமே காரணம். அதே சமயம் ஈயடிச்சான் காப்பி இல்லை என்பதற்கும் சிலபல சாம்பிள்கள் இருந்தன. உதாரணம், அந்த அதீத-நக்கல் சிறுவன், புரோட்டா காமெடி போன்றவை. சிறுவன் காமெடி எனக்கு உறுத்தலாகவோ போரடிக்கவோ இல்லை! புரோட்டா காமெடியும் கலந்து நன்றாகவே இருந்தது!
பொதுவாக மிருகங்களை தமிழ் சினிமாவில் ஒரு கதாபாத்திரமாக மதித்து பயன்படுத்துவது வெகு-குறைவு. கடைசியாக என்ன படம் என தெரியவில்லை. மும்பை எக்ஸ்ப்ரெஸ், அன்பேசிவம், மகாநதி போன்ற படங்களில், நாய் குதிரை எல்லாம் கதாபாத்திரம் தான் என்றாலும் ஜஸ்ட் வந்துபோகும் அளவுதான். ஆனால் இதில் படம்முழுக்க குதிரை வருகிறது, ஆனால் எந்த இயல்புமீறலிம் இல்லை. இதற்காகவே தனி பாராட்டு!
பாஸ்கர் சக்தி, வசனெம்ல்லாம் தனியாக எழுதினாரா தெரியவில்லை, ஒவ்வொரு வரியும் கலக்கல்! அப்புகுட்டி போலிஸ் ஸ்டேஷனில் கம்ப்ளெயின் செய்யவரும்போதும்கூட ஒரு சின்ன காமெடி!
இன்னுமா கிராமங்களில் பாரதிராஜா படங்கள் ரீ-ரிலீஸ் ஆகிறது?!? சரி, எம்ஜியார் சிவாஜி கருப்புவெள்ளை படங்கள் ரேஞ்சிலிருந்து இது நல்ல முன்னேற்றம் தான்! அந்த பகவதி பெர்ஃபாமென்ஸ் இன்னும் இம்ப்ரூவ்மென்ட் தேவை! பெர்ஃபார்மென்சில் இவரைத்தவிர அனைவருமே அசத்துகிறார்கள்
படம் முழுக்க, சமீபகாலமாக வரும் கிராமியப்படம் போலவே தோற்றமளித்தாலும், கொஞ்சமும் தொய்வில்லாமல் இருப்பதே படத்தின் பிளஸ் பாயின்ட். Hats off to Suseendran's Hatrick! சைலென்டா சாதிச்சிருக்கார்!
மொட்டைபாஸின் இசை பற்றி
திருவிழா பாட்டு சுமார்தான் என்றாலும், அடுத்துவரும் காதல் பாட்டு, சற்று புதிதாகவும், அதே நேரம் பழைய ராஜாவை இனிமையாக நினைவூட்டும் விதமாகவும் இருந்தது. எனக்கு மிகவும் பிடித்தபாடல் இதுதான்.
'குதிக்கிர' பாடலை புத்திசாலித்தனமாக ரெண்டாய் பிரித்திருக்கிறார்கள். இந்தப்பாட்டில் ராஜாவின் வாய்ஸ் மாடுலேஷன் ஆச்சர்யம்! ஆனால், அந்த காதல் பாட்டும் சரி, 'குதிக்கிர'வும் சரி, பின்னணியில் ஓடவிட்டு, உதட்டசைவு இல்லாமல் படமாக்கியிருக்கிரார்கள். ஆனால் அப்படி உதட்டசைவு இருந்தால் வழக்கமான பாடல்களாகிவிடும், இப்போது இரண்டு பாடல்களுமே மிகமிக இயல்பாக படத்துடன் பொருந்தக்காரணமே பின்னணி ஓட்டல் தான்!
டைட்டில் மைய இசை, அப்புகுட்டி அறிமுகமாகும்போது ரிப்பீட் ஆகிறது. இந்த படத்தின் பின்னணி இசையில், இருப்பதிலேயே டாப் கிளாஸ் இதுதான். பின்னணி இசை, பக்காவாக அதே சமயம், கவனத்தை ரெம்பவும் கலைக்காமல், காட்சியோடும் பொருந்தி உள்ளது. முழு கிராமியமாக இல்லாமல், மிகவும் நவீனமாக, நிறைய ஷெனாய் வாசிப்புடன் இருப்பது வரவேற்கவேண்டிய புதுமை.
மற்ற பளிச் பின்னணி இசைத் துணுக்குகள்:-
- புரோட்டா காமெடியனின் அறிமுகம்(இவர் பேர் என்ன? "கள்ளாட்டம்" சூப்பரா ஆடுகிறார் )
- பகவதியிடம் அஸிஸ்டென்டாக சேருமிடம்( காமெடியனின் ஏக்கமும், காட்சியின் குசும்பும் சேர்ந்த இசை, சிறியதென்றாலும் நச்
)
- கதாநாயகி வீட்டிலிருந்து கீழே இறங்கி வரும்போது ( சாதாரண காட்சி போல் தோன்றும், ஆனால் ஷெனாய் வழியே உசிரை உருக்குகிரார் )
- கடைசியில் அந்தக் குதிரை ஓடியபடியே பாதி கிளைமாக்ஸை முடித்துவிடுகிறது, அப்போது வரும் இசையும் கிராமியமாக இல்லாமல் மிக நவீமான கலக்கல்!
- கடைசியில், மழை வரும் அறிகுறியை காட்டும் சிறு பின்னணி இசை உலகத்தரம்! இந்தாளுக்கு இதுபோன்ற சிச்சுவேசனையே குடுங்கப்பா
- கடைசியில், அப்புகுட்டி, ராஜா மாதிரி குதிரை மேல் உட்கார்ந்துவரும் காட்சி
(coudn't differentiate shenai & oboe at places)
ஆக, இந்த வருடத்தின், உருப்படியான படம், இசை. ஐயம் வெரி ஹாப்பி, ஸ்டார்ட் மியூசிக்
Last edited by sakaLAKALAKAlaa Vallavar; 23rd May 2011 at 04:56 AM.
-
23rd May 2011 03:52 AM
# ADS
Circuit advertisement
Bookmarks