மதிப்பிற்குரிய சாரதா மேடம்,
நன்றிகள் மேடம். நீங்கள் பதிவு செய்திருந்த உணர்ச்சிபூர்வமான அந்தப் பதிவுகளை இப்போதுதான் படித்து முடித்தேன். தெள்ளத் தெளிவான,மிக நியாயமான உள்ளக்குமுறல்கள். நிஜமாகவே உள்ளம் வலிக்கிறது மேடம்.இவ்வளவு சோதனைகளுக்கும்,வேதனைகளுக்கும் நடுவே அவர் சிறிதும் கலங்காது தன்னுடைய தொழிலில் இம்மியளவும் பிசகாது நடிப்பில் மேலும் பற்பல முத்திரைகளைப் பதித்தாரே... அதனால்தான் மனிதரில் மாணிக்கமாய் மக்கள் மனதில் மங்காப் புகழுடன் பவனி வந்து கொண்டிருக்கிறார்.
அன்பு மாணவன்
வாசுதேவன்.




Bookmarks