-
22nd December 2011, 05:19 PM
#11
Senior Member
Devoted Hubber
நன்றி "அன்புடன் புகாரி"
அன்புடன் புகாரி எழுதியது :
எங்கள் கலைக்கூடம் கலைந்தது
ஜூலை 21, 2001
காற்று, ஓர் உன்னத தமிழனின் மூச்சுக்கு நிராகரிக்கப்பட்டு தன் புனிதம் கெட்டது.
தமிழ் மொழிபோல் இனிதாவது வேறெங்கும் காணோம் என்று பாரதி சொன்னான்.
அதை நிரூபிக்கும் சான்றுகளாய், தன் உயிர் சொட்டும் உச்சரிப்பால்,
நம் செவிகளையெல்லாம் தலையாட்ட வைத்த நடிகர் திலகம் இன்று மறைந்தார்.
கட்டபொம்மனாகட்டும் அல்லது அந்தக் கடவுளாகட்டும் அவர் காட்டாமல் எந்தப்
பாமரனுக்கும் தெரியாது. நகமும் முடியும்கூட நடிப்பை உருக்கி உணர்வுகளை
வார்க்க, பொய்யான திரைக்குள், நிஜத்தைக் காட்டி தமிழ் சினிமாவுக்குக்
கிரீடம் சூட்டிய பத்மஸ்ரீ இன்று மறைந்தார்.
எப்படி கர்ஜிப்பது என்று சிங்கங்களுக்கு வகுப்பெடுக்கும் குரல்
சக்கரவர்த்தி. பாசமலர் பார்த்தால், நமக்கெல்லாம் சகோதரனாவார். புதிய
பறவை பார்த்தால், 'எங்கே நிம்மதி' என்று நம்மையும் அலையவைப்பார். பார்க்க
வந்தவர்களையும் பாத்திரங்களாக்கி வென்ற செவாலியர் சிவாஜி இன்று
மறைந்தார்.
நடிப்பின் அகராதி, மூன்றாம் தமிழின் ஒப்பற்ற கலைக் களஞ்சியம், இப்படி
மறைந்துவிட்டார், மறைந்துவிட்டார் என்று கூறுவது சரியா கலைஞர்கள்
மறைவதில்லை.
கலைஞர்களையே உருவாக்கும் பிரம்மக் கலைஞருக்கு ஏது மறைவு
-
22nd December 2011 05:19 PM
# ADS
Circuit advertisement
Bookmarks