-
7th April 2012, 04:09 AM
#11
Senior Member
Veteran Hubber

Originally Posted by
Murali Srinivas
சுவாமி,
எப்போதாவது ஒரு முறைதான் சில நல்ல கட்டுரைகள் வாசிக்க கிடைக்கும். அப்படிப்பட்ட ஒரு கட்டுரைதான் நீங்கள் பதிவிட்டிருக்கும் துக்ளக் கட்டுரை. எப்படி நடிப்பை நன்கு உணர்ந்த நடிகர் திலகம் போன்ற ஒரு நடிகரால் மட்டுமே செய்ய முடியும் என்று ஒரு சில உதாரணங்களோடு கட்டுரையாசிரியர் விவரிக்கிறாரோ அதே போன்று சினிமாவின் மொழி தெரிந்த, நடிப்பை நன்கு ரசிக்க தெரிந்த ஒரு மனிதனால் மட்டுமே அதை எழுத்தில் வடிக்க முடியும். அப்படிப்பட்ட ஒரு லாவகம் வண்ண நிலவன் போன்ற தேர்ந்த எழுத்தாளருக்கு கை வந்திருப்பதில் ஆச்சரியமில்லை.
பலருக்கும் தெரியாத செய்தி. அன்றைய நாட்களில் [80-களில்] சமூக இலக்கிய சினிமா தளங்களில் காணப்பட்ட சீர்கேடுகளை சமூக நலத்திற்கு எதிரான போக்குகளை தன் சுட்டெரிக்கும் எழுத்துக்களால் துக்ளக் இதழில் துர்வாசர் என்ற புனை பெயரில் அவர் சாடி எழுதிய கட்டுரைகள் மிக பிரபலம்.
நல்ல ஒரு கட்டுரையை வாசிக்க கொடுத்ததற்கு மீண்டும் உங்களுக்கு நன்றி.
அன்புடன்
டியர் முரளி சார்,
தங்களின் பதிவுக்கும், பாராட்டுக்கும் மனமார்ந்த நன்றி !
அன்புடன்,
பம்மலார்.
-
7th April 2012 04:09 AM
# ADS
Circuit advertisement
Bookmarks