-
6th June 2012, 06:46 AM
#11
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
pammalar
"கர்ணன்" 100வது நாள் சென்னை விளம்பரத்தை என் கண்களால் பார்த்தவன் என்ற முறையில் இதைக் கூறுகிறேன். கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு முன்னர், சென்னையில் உள்ள ஒரு நூலகத்தில் [இப்போது அந்த நூலகம் இல்லை], 1964-ம் ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களின் 'THE MAIL' ஆங்கில மாலை நாளிதழின் தொகுப்பைப் பார்க்க நேர்ந்தது. அதில் "கர்ண"னின் 100வது நாளன்று [22.4.1964 : புதன்], சென்னையில் உள்ள மூன்று திரையரங்குகளிலும் [சாந்தி, பிரபாத், சயானி], 100 நாட்கள் ஓடுவதாக மூன்று அரங்குகளின் சார்பாகவும் மூன்று தனித்தனி விளம்பரங்கள் ஒன்றன்கீழ் ஒன்றாக கொடுக்கப்பட்டிருந்தன. அந்த ஒவ்வொரு விளம்பரத்தின் அளவும், Book-Notebookக்கு நாம் ஒட்டும் Labelலின் அளவைவிட சற்றுகுறைவாக இருக்கும். அந்த விளம்பரத்தில் என்ன இருந்தது என்பதையும் கூறி விடுகிறேன்.
"கர்ணன்" சென்னைப் பதிப்பு 100வது நாள் விளம்பரத்தை தேடும் எனது தொடர் முயற்சிகளில் வெற்றி கிட்டியவுடன் தாங்கள் அளித்த தகவல் தவறு என்பது ஆணித்தரமாக நிரூபிக்கப்பட்டுவிடும்.
மேலும், 11 அரங்குகளில் 50 நாட்கள் ஓடியதும் உணமை. சில வருடங்களுக்கு முன்னர் அந்தந்த ஊர்களிலுள்ள திரையரங்குகளைத் பலமுறை தொடர்பு கொண்டு, அதற்குப்பின்னர் அவர்கள் சொன்ன தகவல் சரிதானா என்பதனைப் பலமுறை சரிபார்த்து அதன்பின் பதிவிடப்பட்ட தகவல் இது. மேலும், வேலூர் முதற்கொண்ட இன்னும் 4 ஊர்களில், "கர்ணன்" 50 நாட்கள் ஓடியுள்ளதாக தகவல் உள்ளது. அவை இன்னும் சந்தேகத்துக்குட்பட்டவையாக இருப்பதால், வெளியிடப்படவில்லை.
அன்புடன்,
பம்மலார்.
Thank you Pammalar sir.
What a effort you are keep putting to bring unbeatable success of NT and also keeping shut of people asking the invalid questions with all the proofs. Infinite thanks for your efforts sir.
Cheers,
Sathish
-
6th June 2012 06:46 AM
# ADS
Circuit advertisement
Bookmarks