-
11th October 2012, 05:39 PM
#11
Senior Member
Veteran Hubber
அன்புள்ள கோபால் சார்,
இது நடிகர்திலகத்தின் புகழ்பாடும் திரி என்பதால் இங்கு இசையமைப்பாளர்களைப்பற்றிய விவாதம் தேவையில்லையென்றாலும் நீங்கள் துவக்கிய விவாததத்துக்கு ஒரு சிறு விளக்க்மேனும் தந்து முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறேன். நீங்கள்தான் அளவுக்கு அதிகமாக கே.வி.மகாதேவன் மாமாவுக்கு கிரெடிட் கொடுக்கிறீர்கள். அவரது சாதனைகளனைத்தும் புராணப்படங்களில்தான். சமூகப்படங்களில் அவரது வெற்றியென்பது காக்காய் உட்கார பனம்பழம் விழுந்த கதைதான். அடிமைப்பெண், மாட்டுக்கார வேலன், வசந்தமாளிகை வெற்றிகள் அப்படித்தான்.
விஸ்வநாதன் - ராமமூர்த்தி ஜோடி பிரிந்தபின், யாரால் அந்த ஜோடி முன்பு ஸ்திரம் பெற்றிருந்தது என்பது உள்ளங்கை நெல்லிக்கனியானது. பிரிந்தபின் மெல்லிசை மன்னர் வருடத்துக்கு 20 படங்கள் கொடுக்க, ராமமூர்த்தியோ தனியாக மொத்தமே 26 படங்களைத்தான் கொடுத்துள்ளார். பிரிந்தபின் தனியாக நின்ற மெல்லிசை மன்னரைக்கூட மாமாவால் வீழ்த்த முடியவில்லை. அதிலும் கே.வி.எம். அறுபதுகளின் துவக்கத்தில் சின்னப்பா தேவர் படங்களுக்கு இசையமைத்த படங்களில், படத்தின் டைட்டிலை மாற்றிவிட்டால் எந்தப்பாடல் எந்தப்படம் என்று புரியாது அந்த அளவுக்கு வெரைட்டி இல்லாமல் ஒரே மாதிரியாக அடித்துத் தள்ளினார்.
தனியே பிரிந்த பின் மெல்லிசை மன்னர் கொடுத்த ஊட்டிவரை உறவு, இருமலர்கள், அன்பே வா, ரகசிய போலீஸ், குடியிருந்த கோயில், உயர்ந்த மனிதன், செல்வமகள், சிவந்த மண், நம்நாடு, சொர்க்கம், எங்கிருந்தோ வந்தாள், எங்கள் தங்கம், காவியத்தலைவி (எழுபதுகளில் வந்த அனைத்து சிவாஜி, எம்.ஜி.ஆர். படப்பாடல்களும்) அவள் ஒரு தொடர்கதை, அபூர்வ ராகங்கள், மனமத லீலை, நினைத்தாலே இனிக்கும் உள்பட ஏராளமான பாடல்களைக்கேட்டபின்னும், "த்னியே வந்தபின் எம்.எஸ்.வி. ஜொலிக்கவில்லை" என்று நீங்கள் சொல்லியிருப்பதை இந்த ஆண்டின் சிறந்த ஜோக்காக எடுத்துக்கொள்கிறேன்.
மேற்கொண்டு விவாதிப்பதென்றால் மெல்லிசை மன்னர் திரிக்குப் போகலாம். இங்கே விவாதித்து நடிகர்திலகத்துக்கு நாம் இடைஞ்சல் தர வேண்டாம்.
-
11th October 2012 05:39 PM
# ADS
Circuit advertisement
Bookmarks