-
14th October 2012, 11:34 PM
#11
இன்று மாலை பேபி ஆல்பட் திரையரங்கில் [House Full] திருவிளையாடல் காவியத்தின் 25-வது நாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. திரையரங்கிற்கு வெளியே ஆரம்பித்து உள்ளே திரையரங்க வெளி வளாகம் முழுவதையும் பராசக்தி வைர விழாவிற்கு தயாரிக்கப்பட்ட பானர்கள் அலங்கரிக்க பலவற்றிக்கும் மாலை அணிவிக்கப்பட்டு ராஜ கம்பீரத்தோடு காட்சியளித்தன. வெளியே வெடிக்கப்பட்ட பட்டாஸ்-களின் எண்ணிக்கைக்கு கணக்கேயில்லை. எண்ணிக்கையில் மட்டுமல்ல அவை ஏற்படுத்திய ஒலி அதிர்வுகள் எக்மோர் ரயில் நிலையத்தையும் தாண்டி கேட்டிருக்கும். போக்குவரத்து ஸ்தம்பிக்க மக்கள் கூட்டம் இரு பக்கம் குவிய வாழ்தொலிகளும் ஆட்டங்களும் பட்டாஸ்-களின் வெடி சத்தமும் அந்த சுற்றுவட்டாரத்தையே சற்று நேரம் கலக்கி விட்டது உண்மை. அந்த வழியாக சென்றவர்கள், படம் பார்க்க அரங்கிற்கு வந்தவர்கள் அனைவரும் முதலில் புதிதாக வந்துள்ள படத்திற்குதான் இந்த அமர்க்களம் என நினைத்தனர். பிறகு நடிகர் திலகத்தின் பானர்களையும் சிவாஜியின் பெயர் வாழ்தொலிகளில் சொல்லபடுவது கேட்டு உண்மையை புரிந்துக் கொண்டனர்.
திரையரங்க ஸ்டாலில் இருப்பவர்கள் நம்மிடம் அடித்த கமண்ட். நாங்களும் எத்தனையோ படங்களுக்கு ரசிகர்களையும் அவர்களின் ஆட்டப்பாட்டங்களையும் பார்த்திருக்கோம். ஆனால சிவாஜி ரசிகர்கள் போல் இவ்வளவு உணர்ச்சிமிக்க விசுவாசமிக்க ரசிகர்களை பார்த்ததேயில்லை. அது போல் இடைவேளையின் போது இரண்டு படங்களுக்கும் ஒரே நேரத்தில் இடைவெளி விடப்பட நமது ரசிகர்களின் அலப்பறையை பார்த்து இளைஞர்களே அதிசயித்து போனதோடு மட்டுமல்லாமல் அந்த அலப்பறையை தங்களின் அலைபேசிகள் மற்றும் சிலர் காமராவில் பதிவு செய்துக் கொண்டனர், அரங்கிற்கு உள்ளே வழக்கம் போல் பலத்த வரவேற்பு அதிலும் குறிப்பாக இறுதி எபிஸோடு வழக்கம் போல் மிகுந்த ஆரவாரத்துடன் ரசிக்கப்பட்டது எப்போதும் போல் பாட்டும் நானே அதிலும் ஆடும் கலையின் நாயகன் நானே வரியெல்லாம் உச்சகட்டம்.
இறுதியாக ஒன்று. ஒரு நடுத்தர வயதுடைய நபர் அவருடன் மேலும் இரண்டு பேர்கள், அவர் ஒரு கேள்வி கேட்டார். சிவாஜி இறந்து பல வருஷம் ஆயிடுச்சிலே?
ஆமாம் பதினோரு வருஷம் ஆயிடுச்சு.
இப்பவுமா இவ்வளவு பேர் இப்படி இருக்காங்க?
இன்னும் நிறையப் பேர் இருக்காங்க. ஏன் அப்படி கேட்கீறிங்க?
இல்லே எதாவது லாபம்,பதவி பணம் இப்படி எதுவுமே கிடைக்க சான்ஸ் இல்லையே இருந்தும் இப்படி இருக்காங்கனா ரொம்ப உண்மையான மனுஷங்க என்று சொல்லிவிட்டு கூட வந்தவர்களிடம் இந்த விஷயத்தைப் பற்றி பேசிக் கொண்டே போனதுதான் ஹைலைட்.
அன்புடன்
-
14th October 2012 11:34 PM
# ADS
Circuit advertisement
Bookmarks