-
3rd December 2012, 05:50 PM
#11
Senior Member
Seasoned Hubber
உலக அளவில் நடிகர் திலகத்தின் வீச்சு அளப்பரியது என்பதற்கு ஒரு புதிய சான்று.
சென்னை ருஷ்யக் கலாச்சார மய்யத்தின் 40வது ஆண்டு விழா விரைவில் நடைபெற உள்ளது. அதன் ஒரு பகுதியாக அயல் நாட்டு பிரமுகருக்கு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பெயரால் விருது வழங்கப் பட உள்ளது. இது ஒரு மிகப் பெரிய பெருமையாகும். உலக அளவில் நடிகர் திலகத்தின் பெயரால் ஒரு விருது வழங்கப் படுவதும் அதனை வேற்று நாட்டினர் பெறுவதும் முதல் முறையாக நடைபெற உள்ளது. இவ் விழா டிசம்பர் 14ம் தேதியன்று நடக்கிறது. விவரங்கள் வெகு விரைவில். அனைத்து சிவாஜி ரசிகர்களும் தவறாமல் இவ்விழாவில் கலந்து கொண்டு வரலாற்றில் இடம் பெறும் வாய்ப்பினை பயன் படுத்திக் கொள்ள வேண்டும்.
அன்புடன்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
3rd December 2012 05:50 PM
# ADS
Circuit advertisement
Bookmarks