பொன்மனச்செம்மலின் முதல் திரைப்படமாகிய "சதிலீலாவதி"   பற்றிய தகவல்களை இத்திரியினில் பகிர்ந்து கொண்ட திருவாளர்கள் எம்.ஜி.ஆர். ரூப் குமார் அவர்களுக்கும் ஜெய் சங்கர் அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்ளும் இந்த வேளையில், இப்படம் பற்றிய கூடுதல் தகவலாக படத்தில் இடம் பெற்ற பாடல்களின் ஆரம்ப வரிகளை இங்கே பதிவிடுவதில் மகிழ்ச்சி  கொள்கிறேன். 
படம் வெளியான தேதி :  28-03-1936 
1.  கடவுள் வணக்கம் பாடல்   :   தாயது வயற்றிலே மாயமாய் தரித்து - நான் தங்கினேன் அங்கு சில நாள் 
2.  தனித்த பெண் குரல் பாடல் :  தோடுடைய சேவியன்விடை யேறியோர் தூவெண் மதி சூடி 
3.  குழுவினர் பாடல்          :   ஹலோ என்னுடைய டியர் ப்ரென்ஸுகள் வாரும் 
4.  ஜோடிப்பாடல்             :    அதிக சினமேன் அன்புள்ள நயினா (பல்லவி)  
                                                                எதிர் மொழி சொல்லா எனதன்னையை நீர் (அநு பல்லவி)   
                                                                அடிக்கடி பல்லை கடிக்கிறீர்  ஏனோ  (சரணம்)  
5.  தனித்த ஆண் குரல் பாடல் :   பாதை தெரியாமலே பேதலிக்கிறேன்     
6.  தனித்த பெண் குரல் பாடல்  இனி என்ன செய்குவேன் தேவியே 
7.  தனித்த ஆண் குரல் பாடல் :   சதிகாரமாரனேவுபாணம் சாருதே என் மீது 
8.  ஜோடிப்பாடல்             :    காமி சத்திய பாமா கன்னத்தை கடிப்பாய் எந்தன் பூமி புகழும் நேயன் 
9.  தனித்த பெண் குரல் பாடல் :  புது நிலா முகப் பூமான் புண்ணிய சீமான் (பல்லவி) 
                                                                மதுகரமென்னுந்தேரல் மதுரச் செவ்வயினூறல் (அனு பல்லவி) 
                                                                புருவவில் இந்து நுதல் புருஷசிங்கரானிவன் (தொகையறா) 
10. தெம்மாங்கு பாட்டு        :    கள்ளே கடவுளடா தம்பி - கருவாடே சொர்க்கமடா தம்பி 
11. தனித்த ஆண் குரல் பாடல் :   வாழ்வினிலே மகா தாழ்வடைந்தேனையோ ஊழ்வினைப் பயனீ தோ 
12. தனித்த ஆண் குரல் பாடல் :   தேயிலைத் தோட்டத்திலே - பாரத சேய்கள் சென்று சென்று 
13. தனித்த பெண் குரல் பாடல் :   உந்தீபற - அதி உன்னத தக்களியே 
14. தனித்த பெண் குரல் பாடல் :   ராட்டினமே  - கதர் பூட்டினமே - கை ராட்டினமே  (பல்லவி)
                                                                  நாட்டினிலே சிரோஷ்டமான வேஷ்டிக் கதரே   (அனு பல்லவி)
                                                                  போதமானவரே காந்தி சாந்தகரே (பாட்டு) 
==================================================  ==================================================  ==========                                   
ரூப் சார் :  மக்கள் திலகத்தின் பெரும்பாலான ஒரிஜினல் தியேட்டர் பாட்டு புத்தகங்கள் (சதிலீல்வதி உட்பட) அனைத்தும், சில அரிய அபூர்வ புகைப்படங்களையும்,  பொக்கிஷமாக போற்றி பாதுகாத்து வருகிறேன்.   விரைவில் அவைகளை  நமது திரியில் வெளியிட உத்தேசித்துள்ளேன். 
புரட்சித் தலைவரின் சிறு வயது தோற்ற புகைப்படம் கீழே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது    
அன்பன் : சௌ. செல்வகுமார்
 
என்றும் எம்.ஜி.ஆர். 
எங்கள் இறைவன் 

 
			
		
Bookmarks