-
28th January 2013, 04:44 PM
#11
Junior Member
Devoted Hubber

Originally Posted by
kaveri kannan
நடிகர்திலகத்தின் உடல்மொழி வரிசையில் அந்தத் தங்கச்சுரங்கத்தில் இருந்து அள்ள அள்ளக் குறையாத கட்டிகளை வெட்டி வெட்டித்தரும் அனைவரோடு என் சிறுகரமும்...
படம்: பாபு
பாடல்: இதோ எந்தன் தெய்வம்
உடல்மொழிக் கவிதை:
குழந்தையை ஆலவட்டம் சுற்றிய நடுவயது மனிதனுக்கு வரும் அந்த தலைச்சுற்றல்..
சில நொடிகளில் அது சரியாகும்போது வரும் விழி+ முகத்தெளிவு ----> செய்துகொண்டிருக்கும் பணியை அச்சிறு தடங்கள் தாண்டி செவ்வனே தொடரும் மனநிறைவு முகபாவம்..
உலகில் எங்கும் காணா அந்த அரிய கலைதேவன் நமக்காய் வந்தது நம் அதிர்ஷ்டம்...
2) படம்: படிக்காத மேதை..
பாடல் : ஒரே ஒரு ஊரிலே..
பாடச்சொன்னது சௌகார் ஜானகியை..
பாடவிரும்பி இடையில் வருபவர் ஓசையின்றி கை ஜாடையால் '' இரு... இங்கு நான் தொடர்வேன்'' என
ஜதி விலகாமல் சொல்லும் அந்த வினயமான கைமொழி..
கற்றதால் பெற்றதா ...பிறவியிலேயே இருந்ததா?
Nature OR Nurture?
NT is always a wonderful puzzle to me!
சில கேள்விகளுக்கு விடையில்லை!
சில கேள்விகளுக்கு விடை தெரியாமல் இருப்பதே அழகு!
ஆஹா 'காவேரி' கரை புரண்டு ஓடும அழகை என்னவென்று சொல்வது!!
துணைக்கு 'கண்ணன்' வேறு!
அழகோ அழகு..
உங்கள் வர்ணனை அசத்தல் நண்பரே.
அதுவும்,
பல நூல் படித்து நீ அறியும் கல்வி
பொது நலம் நினைத்து நீ வழங்கும் செல்வம்
பிறர் உயர்வினிலே உனக்கிருக்கும் இன்பம்
இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்
எனும்,
கவியரசரையே பொறாமை கொள்ளவைக்கும்,
வாலியின் வரிகளுக்கு
நடிப்பரசரின் அபிநயம்!!
உங்கள் சந்தேகம்:
கற்றதால் பெற்றதா ...பிறவியிலேயே இருந்ததா?
கலைக்கடவுள் சரஸ்வதி தேவிக்கு,
வானுலகில் சற்று அலுப்புதட்ட,
ஒரு மாறுதலுக்கு,
பூவுலகிற்கு வருகை தர எண்ணி,
அதற்கு எடுத்த ஒரு மானுட வடிவம் அல்லவா,
தலைவர்.
இரண்டு உதாரணங்கள் ..
1)
கிளிசரின் எனும் ஒரு ரசாயனப்பொருள் அனைவர் கண்களிலும் நீரைப்பெருகசெய்யும்.
ஆனால் தலைவருக்கோ அது கண்ணீரை உற்பத்தி செய்வதோடு நிறுத்திக்கொண்டு,
அவர் கண்களில் அதை ஒப்படைத்து விட்டு,
தன் பணி முடிந்தது என அகலும்.
அதன் பிறகு அவர் நினைக்கும் பொழுதுதான்,
அந்த கண்ணீர் கண்களை விட்டு வெளியே வரும்.
2)
100% அறிவற்றவன்=மூடன்.. மகாகவி காளிதாஸ்
25% அறிவு+75%நல்லகுணம் உடையவன் =அசடு.. ராமன் எத்தனை ராமனடி
50% அறிவு+50%நல்லகுணம் உடையவன்=வெகுளி.. பாபு
75% அறிவு+25%நல்லகுணம் உடையவன்=அப்பாவி.. படிக்காத மேதை
100% அறிவு+0%நல்லகுணம் உடையவன்=கபடன்.. அந்த நாள்
100% அறிவு+100%நல்லகுணம் உடையவன்=தலைவன்.. கட்டபொம்மன்..
இதற்கு பிறகும் சந்தேகமா?
-
28th January 2013 04:44 PM
# ADS
Circuit advertisement
Bookmarks