கவிதை நடையில் கலைக்குரிசில் புகழ் பாடும் காவிரியின் கண்ணன் அவர்களே!
தமிழோடு விளையாடவே தாங்கள் இருக்கிறீர்கள்.
அதை அள்ளிப் பருகவே நாங்கள் இருக்கிறோம்.
அற்புதம். அருமை. பாராட்டுக்கள்.
தங்களுக்காக இதோ நம் ஜூலியஸ் சீஸர்.
கிரேக்கச்சிற்பங்களை விஞ்சும் உருவ இலக்கணம் பொருந்திய ஒளிமுகம்.. களைமுகம்..
இந்த ஒரு உடல் மொழிக்கே உலகத்தை இவருக்கு விலையாகத் தரலாம்.
"நான் காணாத களமில்லை ...
பெற்றுத் தராத வெற்றி இல்லை...
என் உடலில் வெற்றிவடு படாத இடமில்லை...
என்னை எதிர்த்தவர்கள் தங்களையே அழித்தவர்கள் ஆவார்கள்...
புத்தி உள்ளவன் திருந்துவதுதான் புகழுக்குரியது...
புத்தி உ(ள்)ளதா... இ(ல்)லையா"...
சீறும் சிங்கமென நம் சீஸர் முழங்குவதை 'சொர்க்க'த்தில் காணலாம்.
லூயிஸ் கல்ஹெர்ன் ஜூலியஸ் சீஸர் ராகவும், 'ஹாலிவுட் சிவாஜி' மார்லன் பிராண்டோ மார்க் ஆண்டனி யாகவும், ஜேம்ஸ் மேஸன் புருட்டஸாகவும் நடித்த ஜூலியஸ் சீஸர் (1953) ஆங்கிலப் படத்திலிருந்து அதே காட்சி.
திறமையான நடிகர்கள்தான். அதில் சந்தேகமில்லைதான். ஆனால் எம் தலைவன் முன் இவர்கள் எம்மாத்திரம்? வீடியோவில் பாருங்கள் எவ்வளவு வித்தியாசம் என்று!
அன்புடன்,
வாசுதேவன்.











Reply With Quote
Bookmarks