Page 149 of 401 FirstFirst ... 4999139147148149150151159199249 ... LastLast
Results 1,481 to 1,490 of 4005

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 10

  1. #1481
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    அன்புள்ள சகோதரர் வாசுதேவன் அவர்களே,
    பன்னாட்கள் திரியில் பங்குகொள்ளாமல், எதுவும் எழுதாமல் எம்மை பசியோடு இருக்க வைத்து, இப்படி தலை வாழை முழு விருந்தாய் திகட்ட திகட்ட விருந்தளிக்கின்றீர். இருந்தாலும் நடிகர் திலகத்தின் நடிப்பு சுவை எமக்கு திகட்டவே திகட்டாது. இது உண்ண உண்ண பசியை அதிகமாக்கும் விருந்து. அதுவும் அரிதான விருந்து. கோபால் சார் சொன்னது போல் கடுகை மலையாக்கி இருக்கின்றீர். நடிகர் திலகத்துக்கே இது சாத்தியம் (சிறிய வேடமும் சிறப்பாக செய்வது). அவரது ரசிகர் உமக்கும் சிறிய வேடத்தையும் பிரமாதமாக பிரமாண்டமாக எழுத முடிவது சாத்தியமாகி உள்ளது. அற்புதம். பெருமை கொண்டோம். நன்றி.
    தனது ஓவியங்களால் திரிக்கு சிறப்பு சேர்க்கும் சகோதரி வனஜாவிற்கும் வாழ்த்துக்கள்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1482
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Madam

    Actually all my postings are done from office due to holidays I could not
    post. Seeing NT's thread will give me a tremendous strength in overcoming
    all the probelms in official work.

  4. #1483
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by kaveri kannan View Post
    நடிகர்திலகத்தின் உடல்மொழி வரிசையில் அந்தத் தங்கச்சுரங்கத்தில் இருந்து அள்ள அள்ளக் குறையாத கட்டிகளை வெட்டி வெட்டித்தரும் அனைவரோடு என் சிறுகரமும்...


    படம்: பாபு

    பாடல்: இதோ எந்தன் தெய்வம்

    உடல்மொழிக் கவிதை:

    குழந்தையை ஆலவட்டம் சுற்றிய நடுவயது மனிதனுக்கு வரும் அந்த தலைச்சுற்றல்..
    சில நொடிகளில் அது சரியாகும்போது வரும் விழி+ முகத்தெளிவு ----> செய்துகொண்டிருக்கும் பணியை அச்சிறு தடங்கள் தாண்டி செவ்வனே தொடரும் மனநிறைவு முகபாவம்..

    உலகில் எங்கும் காணா அந்த அரிய கலைதேவன் நமக்காய் வந்தது நம் அதிர்ஷ்டம்...


    2) படம்: படிக்காத மேதை..

    பாடல் : ஒரே ஒரு ஊரிலே..

    பாடச்சொன்னது சௌகார் ஜானகியை..

    பாடவிரும்பி இடையில் வருபவர் ஓசையின்றி கை ஜாடையால் '' இரு... இங்கு நான் தொடர்வேன்'' என
    ஜதி விலகாமல் சொல்லும் அந்த வினயமான கைமொழி..

    கற்றதால் பெற்றதா ...பிறவியிலேயே இருந்ததா?
    Nature OR Nurture?
    NT is always a wonderful puzzle to me!

    சில கேள்விகளுக்கு விடையில்லை!
    சில கேள்விகளுக்கு விடை தெரியாமல் இருப்பதே அழகு
    !
    ஆஹா 'காவேரி' கரை புரண்டு ஓடும அழகை என்னவென்று சொல்வது!!

    துணைக்கு 'கண்ணன்' வேறு!

    அழகோ அழகு..

    உங்கள் வர்ணனை அசத்தல் நண்பரே.

    அதுவும்,

    பல நூல் படித்து நீ அறியும் கல்வி
    பொது நலம் நினைத்து நீ வழங்கும் செல்வம்
    பிறர் உயர்வினிலே உனக்கிருக்கும் இன்பம்
    இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்


    எனும்,

    கவியரசரையே பொறாமை கொள்ளவைக்கும்,

    வாலியின் வரிகளுக்கு

    நடிப்பரசரின் அபிநயம்!!

    உங்கள் சந்தேகம்:

    கற்றதால் பெற்றதா ...பிறவியிலேயே இருந்ததா?

    கலைக்கடவுள் சரஸ்வதி தேவிக்கு,
    வானுலகில் சற்று அலுப்புதட்ட,
    ஒரு மாறுதலுக்கு,
    பூவுலகிற்கு வருகை தர எண்ணி,
    அதற்கு எடுத்த ஒரு மானுட வடிவம் அல்லவா,
    தலைவர்.

    இரண்டு உதாரணங்கள் ..
    1)

    கிளிசரின் எனும் ஒரு ரசாயனப்பொருள் அனைவர் கண்களிலும் நீரைப்பெருகசெய்யும்.

    ஆனால் தலைவருக்கோ அது கண்ணீரை உற்பத்தி செய்வதோடு நிறுத்திக்கொண்டு,
    அவர் கண்களில் அதை ஒப்படைத்து விட்டு,
    தன் பணி முடிந்தது என அகலும்.
    அதன் பிறகு அவர் நினைக்கும் பொழுதுதான்,
    அந்த கண்ணீர் கண்களை விட்டு வெளியே வரும்.

    2)

    100% அறிவற்றவன்=மூடன்.. மகாகவி காளிதாஸ்
    25% அறிவு+75%நல்லகுணம் உடையவன் =அசடு.. ராமன் எத்தனை ராமனடி
    50% அறிவு+50%நல்லகுணம் உடையவன்=வெகுளி.. பாபு
    75% அறிவு+25%நல்லகுணம் உடையவன்=அப்பாவி.. படிக்காத மேதை
    100% அறிவு+0%நல்லகுணம் உடையவன்=கபடன்.. அந்த நாள்
    100% அறிவு+100%நல்லகுணம் உடையவன்=தலைவன்.. கட்டபொம்மன்..

    இதற்கு பிறகும் சந்தேகமா?

  5. #1484
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Vankv View Post
    still
    இந்த உவமை,
    கொஞ்சம் புதுமை,
    இன்னும் உனக்கேன் புரியவில்லை?
    வேறென்ன சொல்வேன் தெரியவில்லை!
    xxxxxxxxx

    (நட்பு கருதி கடைசி வரி நீக்கப்பட்டது!)

  6. #1485
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    #1643

    அம்மணி,

    Indian Film Code sec.77 (B) படி நடிகர் திலகம்,சிவாஜி,போன்ற பெயர்கள் வரும் போது அதனிடமிருந்து குறைந்த பட்சம் நூறு வார்த்தைகள் தள்ளித்தான் சத்யராஜ்,ரகுவரன்,விஜயகுமார் போன்ற பெயர்களை உபயோகிக்கலாம்.தயை கூர்ந்து கவனத்தில் கொள்ளவும்.

  7. #1486
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    எனது இதயம் கவர்ந்த 'இருமலர்கள்' போஸ்.

    நடிகர் திலகமே தெய்வம்

  8. #1487
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    16 டிசம்பர் 2012 சினிமா எக்ஸ்பிரஸ் 'திருப்புமுனை திரைப்படங்கள்' தொடரில் 'பாசமலர்'

    நடிகர் திலகமே தெய்வம்

  9. #1488
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    அன்புள்ள சகோதரியே,
    கஷ்டத்தில் இருக்கும் அண்ணனுக்குத்தான் எத்தனை உதவிகள் செய்கிறீர்கள்!!?? சசி சார்,நீங்கள் மிக மிக கொடுத்து வைத்தவர்.

  10. #1489
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Vankv View Post
    சரி விட்டுத்தள்ளுங்கள். இதற்கெல்லாம் சோர்ந்து போனால் எப்படி? நடிகர் திலகம் பற்றி பேசுவதற்கும் விவாதிப்பதற்கும் இன்னும் எத்தனையோ விடயங்கள் இருக்கின்றன. தொடருவோம்.
    ஹ ஹ ஹா ,திரியிலே இதெல்லாம் சாதாரணமப்பா .......

  11. #1490
    Devoted Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    33
    Post Thanks / Like
    அன்பார்ந்த மூத்த பதிவாளர்களுக்கு

    அதிதீவிர நடிகர்திலக ரசிகன் நான் என இறுமாந்திருந்த எனக்கு
    அவையடக்கம் படிப்பித்த இத்தளத்திற்கு நன்றி கூறி....
    நான் கேட்கப்போகும் கேள்வி ஏற்கனவே இங்கு அலசப்பட்டிருந்தால் முன்மன்னிப்பு கோரி..

    என் பார்வையை... வினாவைப் பதிகிறேன்..

    ---------------------------------------------------

    நடிகர்திலகத்தின் விழியீர்ப்பு விசை

    உயர்ந்த மனிதனில் காதல் மனைவி பார்வதியைத் தீவிபத்தில் பறிகொடுக்கும் முன் அவர் விழிகளில் தெறிக்கும் மகிழ்ச்சியை
    பின்னாளில் வரும் காட்சிகளில் ஒன்றிலாவது நான் கண்டேனில்லை..

    ஓட்டுநர் வீட்டு காரசார விருந்து உண்ணும் சிறு சிறு மகிழ்வுக்கட்டங்களில் கூட
    கோடைக்கானல் மார்கழிக்காலைச் சூரியன் போல் ஒரு சோகச்சீலை போர்த்திய விழிக்கதிர்கள் ...

    -------------------------------------------------------

    ஒற்றை அடியில் மரத்தடியில் சித்ராவைச் சாய்ப்பதற்கு முன் இருந்த அந்த செல்வக்குழந்தையின் குதூகலம் கொஞ்சும் முகம்...
    கள்ளமற்ற அந்த வெள்ளைப்பார்வை...

    அந்த நொடிக்குப் பின் கோபால் விழிகளில் தென்படவே இல்லை..

    ----------------------------------------------------------------

    எது எனக்கு மட்டுந்தானா? உங்களுக்கும் தோன்றியதுதானா??

    எப்படி முன்பின்னாக எடுக்கப்பட்ட காட்சிகள்..
    எத்தனை விதவிதமான படங்கள் ..பாத்திரங்கள்.. ஏககாலத்தில்..

    எப்படி இயன்றது என் தலைவனுக்கு?
    மனம் சொன்னதை முகத்தசை முதல் விழியுணர்வு வரை நூறுசதம் பிரதிபலிக்கவைக்க
    இன்னொருவர் இதுவரை உலகெங்கும் தென்படவே இல்லையே ஏன்?

    அல்பசினோ முதல் எண்ணற்றோரை அலசித் தேடிச் சலித்துப் பார்த்தும்
    நம்மவரின் விழியீர்ப்பு விசை காணாமல் சலித்துப் போனது நான் மட்டும்தானா?

    வாராதுபோல் வந்த மாமணி நம் நடிகர்திலகம்..இதுவே உண்மை!
    பூமியில் வேறெங்கும் மாற்று இருக்கும் என எண்ணுவதே மடமை!!
    Last edited by kaveri kannan; 30th January 2013 at 02:47 AM.
    நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •