Results 1 to 10 of 666

Thread: Ponmanachemmal m.g.r. Filmography news & events

Threaded View

  1. #11
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    பொன்மனசெம்மலின் 12 வது திரைப்படமாகீய "சாலி வாஹனன்" கதைச் சுருக்கம் :

    அவதானி என்றொரு பிராமணன் உலகில் ஐந்து கிரகங்கள் அபூர்வமாக ஒரே இடத்தில் கூடும் அதிசயம் நிகழும் கால கட்டத்தில் கணவனும் மனைவியும் ஒன்று சேர்ந்து சுகித்தால் உலகம் போற்றத்தக்க ஒருவன் பிறப்பான் என்று சாத்திரம்.

    அவதானி தன் மனைவியை அனுபவிக்க வேண்டுமானால் கோதாவரி நதியைக் கடந்து அக்கரைக்கு செல்ல வேண்டும். அந்த நேரம் பார்த்து நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது வடகரையில் இருக்கும் தன் மனைவியின் இல்லத்துக்கு போகாமல் மழையில் அவதானி தவிக்கிறான்.

    அச்சமயம் அங்கு தோன்றிய பகவான் ஆதி சேஷேன் சந்நியாசி உருவில் கரையில் தோன்றி அவதானியின் பயன்படத் தக்க வலிமை பாழாகக் கூடாது என்று நினைத்து அவனை நதியின் தென்கரையில் வசிக்கும் குயவன் சிங்கண்ணன் வீட்டிற்கு அழைத்து சென்று மணமாகாத குயவனின் மகள் சொரூபா என்பவளை மணம் முடித்து வைத்து மறைகிறார்.

    அவதானி மூலம் சொரூபா கருவுற்று ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது. இந்த நிலையில் உஜ்ஜினி நாட்டு அரசன் விக்கிரமாதித்தன் தனக்கு நேர்ந்த சில அபச குணங்களை கண்டு அச்சமுற்று, ஜோதிடனை அழைத்து காரணம் கேட்க அதற்கு ஜோதிடர், "அரசே ! உங்களுக்கு ஒரு எதிரி குழந்தை பிறந்திருக்கிறது. அக்குழந்தை ஒரு-நாள் கருவில் பிறந்தான்" என்று கூறுகிறான்

    உடனே விக்கிரமத்த்தன், வேதாளத்தை ஏவி குழந்தையை கொல்லும்படி கூறுகிறான். சந்நியாசி உருவில் இருக்கும் ஆதி சேஷன் குயவனின் பேரனைக் காப்பாற்ற மண்ணினால் ஆன ஒரு குழந்தையை உருவாக்கி அதற்கு உயிர் கொடுத்து விட்டு மறைகிறார்

    வேதாளம் நிஜக் குழந்தையை விட்டு விட்டு மண் குழந்தையை கொன்று விட்டு, அந்த தகவலை விக்கிரமாதித்தனிடம் கூற, விக்கிரமாதித்தன் பயம் நீங்கியவனாய் ஆகிறான்.

    சொரூபா உண்மைக் குழந்தைக்கு சாலிவாஹன் என்று பெயரிட்டு வளர்க்கிறாள். தனக்கு ஓர் ஆண் குழந்தையிருக்கிறது. பெண் குழந்தை இல்லையே என்று கவலையுற்று, நந்தினி என்ற பெண்ணையும் தன் மகள் போல் பாது காத்து வருகிறாள்.

    சந்நியாசி சாலிவாஹனுக்கு மந்திர தந்திரங்கைளையும் கல்வியினையும் போதிக்கிறார். சாலிவாஹனன் அழகு வாய்ந்த காளைப்பருவமடைகிறான். நந்தினியும் கன்னிப் பருவமடைகிறாள்.

    ஒரு நாள் மகாதானபுரத்து பூமுக மன்னன் குமாரி சநதிரலேகை கோதாவரி நதியில் உல்லாசப் படகில் வந்து தென் கரையின் காட்சிகளை பார்க்கும் போது, நந்தினி ஒரு மான் பொம்மை வைத்து விளையாடுவதை கண்டு அதனை தனக்கு தரும்படி கேட்கிறாள் நந்தினி தர மறுக்கிறாள். சந்திரலேகை அதனை பறித்து தானே கொண்டு போகிறாள். நந்தினி ஓடி சென்று சாலி வாஹனனிடம் முறையிட்டு அவனை கூட்டி வருகிறாள். சாலிவாஹனன் சந்திரலேகை மான் பொம்மையை கொண்டு போக விடாமல் தடுக்கிறான். கோபத்தில், அரச குமாரியுடன் நடந்து கொள்ள வேண்டிய மரியாதையை மறந்து விடுகிறான். ஆனால், சந்டிரலேகையின் கண்களும், சாலிவாஹனன் கண்களும் சந்தித்து பேசிக் கொள்கின்றன காதல் இருவர் உள்ளத்தையும் பிணைக்கிறது.

    தோழியின் மூலம் பூமுகன் சாலிவாஹனன் நடத்தையை கேள்விப்பட்டு ஏழைக் குயப்பயலுக்கு என்ன திமிர் என்று அவனை அழைத்து வரும்படி சேவகர்களை அனுப்புகிறான் சேவகர்கள் அழைப்பிற்கிணங்கி செல்ல சாலிவாஹனன் மறுக்கிறான். அவனது தாய் சொரூபா அவனை சமாதானப்படுத்தி அரண்மனைக்கு அனுப்பி வைக்கிறாள்.

    கன்னி மாடத்தின் நந்த வனத்தில் சாலிவாஹனன் சந்திரலேகையை சந்திக்கிறான். தன் உள்ளக் கிளர்ச்சியை உரைக்கிறான். சந்திரலேகை அவனை எச்சரிக்கிறாள் தன் மன உணர்ச்சியை மறைத்துக் கொண்டு. அந்த சமயம் அங்கு வந்த பூமுகன் சாலி வாகனனை சிறையிலிடசேவகர்களுக்கு கட்டளை இடுகிறான். சாலிவாஹனன் சிறையில் வருந்துகிறான்

    சந்திரலேகை தன் தந்தையான பூமுகனிடம் சாலிவாஹனனை சிறையில் அடைத்தது நல்லது அல்ல என்று வாதாடுகிறாள். பூமுகன் தன் மகளின் விபரீத போக்கை கண்டுகொண்டு, அவளையும் கன்னி மாடத்தில் கட்டுக் காவலுடன் சிறையிலிடுகிறான்.

    சந்திரலேகை கூண்டுக்கிளியாக குமைகிறாள். பூமுக மன்னன் தன் மந்திரியின் யோசனைப்படி சுயம்வரம் நடத்த ஏற்பாடு செய்கிறான். அதனை சந்திரலேகைக்கு தெரிவிக்கிறான் சந்திரலேகை பூமுகன் செய்கையை ஒப்புக் கொள்ள வில்லை. என்றாலும் பூமுகன் எல்லா தேசத்து அரசர்களுக்கும் சுயம்வரக் கடிதம் அனுப்புகிறான்.

    சக்கரவர்த்தி விக்கிரமாதித்தன் சுயம் வரத்துக்கு வருகிறான். சுயம்வரத்துக்கு தேர்ந்த்தேடுக்கக் கூடிய உறைவாள்களும் அவ்விடம் வைக்கப்பட்டிருந்தன. சந்தர்ப்பங்கள் விக்கிரமாதித்தனுக்கு அனுகூலமாக அமையவே, சந்திரலேகை முற்றிலும் ஏமாற்றம் அடைந்தாள். எல்லோரையும் திடுக்கிட செய்யும் சம்பவமும் நடந்தன. சாலிவாஹனனும் சிறையிலிருந்து தப்பி யானை மேல் ஏறி சுயம்வர மண்டபத்தை அடைகிறான். சந்திரலேகை சாலிவாஹனனுக்கு மாலையிடுகிறாள். விக்கிரமாதித் தனுக்கும் பூமுகனுக்கும் இது முற்றிலும் பிடிக்க வில்லை. விக்கிரமாதித்தனுக்கும், சாலி வாஹனனுக்கும் போர் நடக்கிறது. சாலிவாஹனன் வெற்றி அடைகிறான். இருந்தும் பூமுகன் சாலி வாஹனனை மருமகனாக ஏற்றுக் கொள்ள மறுத்தான்.

    ஆதி சேஷன் பிரதயஷமாகி பூமுகனுக்கு சாலிவாஹனின் வரலாற்றை தெரிவிக்கவே சாலிவாஹன் சந்திரலேகையை மணந்து சிம்மாசனம் ஏறுகிறான்.


    - முற்றிற்று -
    ================================================== ================================================== ==========
    அன்பன் : சௌ செல்வகுமார்

    என்றும் எம்.ஜீ.ஆர்.
    எங்கள் இறைவன்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •