அதையெல்லாம் படிச்சுட்டு சிரிச்சிட்டு இருக்கீங்களா?! எனக்கே மறந்து போச்சு.. அது ஒரு காலம்.
ஆமாம் - இரண்டும் ஒருவரே (பசுவைய்யா = சுந்தர ராமசாமி போல) அவர் நிசத்தில் பல புனை பெயர்களில் எழுதியிருக்கிறார். ஆரம்பத்தில் தருமு சிவராமு.. இரண்டு பெயர்களில் வெளிவந்த கவிதைகளையும் படித்த நினைவு..
உண்மையில் - திராவிட இயக்க சித்தாந்தங்களுக்கு வெளியில் இயங்கிய படைப்புகளைப் படிக்க வேண்டும் என்கிற சுய விருப்பத்தின் பேரில் படித்தவை - பெரும்பாலானவை; அப்போது கணையாழியை தீவிரமாக வாசிப்பேன் - சில படைப்புகளின் இயங்குதளம் புரியாமலே கூட.![]()
"வர்ணம்" பற்றி பேசுவதைத் தவிர்த்து - அன்றந்த காலகட்டத்து சமூக நிகழ்வுகளின் மீதான ஆழப்பார்வையையும் தவிர்த்து - தத்துவ விசாரமும், தமிழ் அடையாள அரசியல் மறுப்பை/ கேலியை - உள்ளீடாகக் கொண்டே பெரும்பாலான "க.ந.சு" "சி.சு.செ" குழாம் கவிதைகள் - பரிமளித்துக் கொண்டிருந்தன என்அதே என் பார்வையாக இருந்தது; ஆனால் (திராவிட இயக்கம் தவிர்த்த/ வாணியம்பாடி குழு தவிர்த்த) வானம்பாடிக்குழு , மற்றும் சிசுசெ,கநசு குழுக்கள் - வேறு பல வீச்சுகளை அறிமுகம் செய்து கொண்டிருந்தன.
Any pagadi involved in it - for what i had uttered earlier?!
Will certainly do if i lay my hands on them again!
கண்டிப்பாக அங்கே வருகிறேன்; சோம்பேறித்தனமும், அதிகமாக எழுதுவதில் எனக்கே இருக்கும் சலிப்பும்(!) - சில நேரங்களில் படிப்பதில் இருக்கும் விருப்பம், எழுதுவதில், எதிர்வினையாற்றுவதில் இல்லை - அதற்கு ஒரு காரணமும் இல்லை - யாரையும் போர் அடிக்க விருப்பம் இல்லாததும் ஒரு காரணம்.
கவிதைப் பக்கங்களில் நான் இப்படித்தான் பேசியிருக்கிறேன்! (இப்போ இந்தப் பக்கம் வருவதே இல்லை!) ...தவிர எழுதுவததை விட, அசை போடுவதிலும், அமைதியாயிருப்பதிலும் உள்ள 'லயம்' அதிகமாகப் பிடிக்க ஆரம்பித்திருக்கிறது!
Bookmarks