சென்னை மியூசிக் அகாடமியில் ஒரு கச்சேரி.
என்னை மறந்து பாடிக் கொண்டிருக்கிறேன். நான் கச்சேரியில் பாடிக்கொண்டிருக்கும் போது ஒரு வி.வி.ஐ.பி. வந்தார். எந்தவித ஆரவாரமும் இல்லாமல் தனது வருகையால் கச்சேரிக்கு குந்தகம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் மிகவும் எச்சரிக்கையாக அனைவரிடமும் தன் விரலசைவாலேயே அமைதியாக இருக்கும் படி கட்டளையிட்டு இருக்கையில் அமர்ந்தார். அவர் ஆணையிட்டால் என்ன நடக்கும் என்பது தான் உலகறிந்ததாயிற்றே. அவர் வந்த சுவடே தெரியவில்லை. நான் அவர் வந்ததை அறியாமலே பாடிக் கொண்டிருக்கிறேன். அதில் ஒரு பாடல் ராம நாமம் நல்ல நாமம். பாடல் முடிந்தவுடன் பலத்த கைதட்டல். மற்ற பாடல்களுக்குக் கிடைத்த வரவேற்பை விட அந்தப் பாடலுக்கு மிகுந்த வரவேற்பு. காரணம் புரியாமல் நான் சுற்றும் முற்றும் பார்த்தேன். அதற்குப் பிறகு தான் புரிந்தது. நான் தசரத ராமனைப் பற்றிப் பாடினேன். அதை ராமவரம் ராமனைப் பற்றிப் பாடியதாக நினைத்து மக்களின் கரகோஷம் விண்ணைப் பிளந்தது. ஆம் வந்திருந்த வி.வி.ஐ.பி. சாட்சாத் எம்.ஜி.ஆர் என்று எல்லோராலும் அழைக்கப்படும் எம்.ஜி.ராமச்சந்திர மூர்த்திதான்.
சொன்னவர் பிரபல பாடகர் கே.ஜே.யேசுதாஸ்