-
8th March 2013, 09:57 PM
#11
Senior Member
Seasoned Hubber
திரையிட்ட இடமெல்லாம் திருவிழாக் கோலம் ..
அந்தக் காலத்திலிருந்து புதுப் படங்களுக்கு செய்யப் படும் விளம்பரங்களில் தவறாது இடம் பெறக் கூடிய வாசகம்.
ஆனால் வெளியாகி 41 ஆண்டுகளுக்குப் பிறகு நவீன வடிவாக்கலில் மறு வெளியீடு செய்யப் படும் படத்திற்கும் இவ்வாசகம் பொருந்துகிறது என்றால், அதுவும் ஓராண்டு காலத்திற்குள் ஒரு நடிகரின் படம் இரண்டாம் முறை இப் பெருமையைப் பெறுகிறதென்றால் ...
அது நடிகர் திலகம் மட்டும் தான்.
தமிழகத்தில் இன்று மட்டும் 77 திரையரங்குகளில் வசந்த மாளிகை வெளியாகியுள்ளது. தினத்தந்தியில் தரப் பட்டுள்ள பட்டியலில் இடம் பெற்ற திரையரங்குகளோடும் மேலும் 5 இன்று சேர்ந்துள்ளன. நாளை கிட்டத் தட்ட 10 திரையரங்குகளில் வெளியாக உள்ளதாகவும் செய்தி. இதையும் சேர்த்தால் 85க்கும் மேல் ஆகிறது. இது நிச்சயம் நடிகர் திலகத்தின் தாக்கம் இன்றைய தலைமுறையில் எந்த அளவிற்கு உள்ளது என்பதற்கு எடுத்துக் காட்டு.
கர்ணன் மிகச் சிறப்பான துவக்கத்தைத் தந்துள்ளது மட்டுமின்றி ஒரு தலைமுறையினையே அதுவும் புதிய தலைமுறையினரையே சிவாஜி ரசிகர்களாக மாற்றியிருக்கிறது பிரமிப்பாக உள்ளது. இது வெறும் வாசகமோ அல்லது புகழுரையோ அல்ல.
இன்றைய பகல் காட்சியில் ஆல்பர்ட் திரையரங்கில் வசந்த மாளிகை படம் பார்த்த போது நேரடியாக நாம் பெற்ற அனுபவம்.
அரங்கிற்கு வெளியே சில இளைஞர்களுடன் பேசிக்கொண்டிருந்த போது அவர்கள் நடிகர் திலகத்தை சிவாஜி சார் என்று சொன்னார்கள். கர்ணன் படத்திற்குப் பிறகு அவருடைய படங்களைப் பார்ப்பது மிகவும் ஆவலை அதிகரித்திருக்கிறது என்றார்கள். டிவிடியில் பார்த்தாலும் தியேட்டரில் மக்களோடு பார்க்க மிகவும் விரும்புவதாகக் கூறினார்கள். அதுவும் யாருக்காக பாடலை தியேட்டரில் ரசிகர்களோடு பார்க்க வேண்டும் என்று ரொம்ப ஆவலோடு வந்திருப்பதாக கூறினார்கள்.
உள்ளே நாம் பெற்ற அனுபவம் இன்னும் வித்தியாசமாக இருந்தது. சில காட்சிகளைத் தவிர பெரும்பாலான காட்சிகளை தவிர்த்து விட்டு எங்களுக்கு முன்னால் அமர்ந்திருந்த ஓர் இளைஞர் குழுவையே பார்த்துக் கொண்டிருந்தோம். அவர்களுக்கு வயது 25 லிருந்து 30 வரைக்கு மேல் இருக்காது. ரத்தத்திலேயே ஊறிப்போன சிவாஜி ரசிகர்களைப் போல அவர்கள் ரசித்ததைப் பார்த்த பொழுது அதையே தான் நான் பார்த்துக் கொண்டிருந்தேன். சக்கரவர்த்தியடா என்ற வரிகளின் போது அந்த இளைஞர்களில் ஒருவர் எழுந்து நின்று குதித்து குதித்து ஆரவாரத்துடன் கை தட்டிய போது என்னையே என்னால் நம்ப முடியவில்லை. அது மட்டுமின்றி சில காட்சிகளில், அந்த இளைஞர் குழுவில் இருந்த ஓர் இளம் பெண்ணும் கை தட்டி ரசித்து ஆரவாரத்துடன் பாராட்டியதும் இன்னும் மகிழ்ச்சியாக இருந்தது.
நானும் முரளி சாரும் தான் ஒன்றாக அமர்ந்து இந்த கொண்டாட்டத்தை ரசித்துக் கொண்டிருந்தோம்.
வெளியே வரும் போது எங்கள் மனதில் ஏற்கெனவே நெஞ்சில் நிலைத்திருந்த கருத்தினை அவர்கள் ஆழமாக சுத்தியலால் இன்னும் வலுவாக இறக்கியது போல் ஒரு சந்தோஷமாக இருந்தது. அந்த கருத்து உங்கள் மனதிலும் ஏற்கெனவே உள்ள கருத்து தான்.
காலங் கடந்த கலைக் கடவுள் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
8th March 2013 09:57 PM
# ADS
Circuit advertisement
Bookmarks