-
15th March 2013, 08:04 PM
#11
Junior Member
Platinum Hubber
குடியிருந்த கோயில்
15.3.1968
குடியிருந்த கோயில் முதல் நாள் பார்த்த அனுபவம் .
வேலூர் - ராஜா அரங்கில் முதல் நாள் மாலை காட்சி காணும் வாய்ப்பு கிடைத்தது .
ராஜா அரங்கு முழுவதும் தோரணங்களாலும் , ஸ்டார் களாலும் அமர்க்கள பட்டு ரசிகர்கள் வெள்ளத்தில் திருவிழாவாக காட்சி அளித்தது . ஒரு வழியாக நீண்ட போராட்டத்துக்கு பின் டிக்கெட் வாங்கி உள்ளே நுழையும் போது படமும் ஆரம்பமாகி விசில் சத்தமும் ஆரவாரமும் காதைபிளந்தது .
படம் துவங்கி சில நிமிடங்கள் கழித்து மக்கள் திலகம் அறிமுகமாகும் காட்சியில் துவங்கி ஆரம்ப சண்டை காட்சியில் தூள் கிளப்பும் மக்கள் திலகம் பின்னர்
உன் விழியும் என் வாளும்
என்னை தெரியுமா ....
நீயேதான் எனக்கு மணவாட்டி
நான் யார் .. நான்யார் ..நீ யார்
துள்ளு வதோ இளமை
ஆடலுடன் பாடலை
குங்கும பொட்டின் மங்கலம்
அட்டகாசமான பாடல்களும் , மக்கள் திலகம் -ஜஸ்டின் - காந்தாராவ் - நடராசன்
ஆகியோருடன் நடத்தும் சண்டை காட்சிகளும் இறுதி காட்சியில் நம்பியாருடன் போடும் சண்டைகாட்சிகளும் பிரமாதம் .
மக்கள் திலகத்தின் மாறுபட்ட இரண்டு வேடங்களில் அருமையாக நடித்து ரசிகர்களை மகிழ்வித்தார் .
ரசிகர்களுக்கும் மக்களுக்கும் ஒரு இனிய விருந்து படைத்தார் மக்கள் திலகம் .
அன்றும் இன்றும் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும் மக்கள் திலகத்தின் குடியிருந்த கோயில் மதுரை மீனாக்ஷி கோயில் புகழ் போல் நிலைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை .
Last edited by esvee; 15th March 2013 at 09:29 PM.
-
15th March 2013 08:04 PM
# ADS
Circuit advertisement
Bookmarks