-
15th March 2013, 04:39 PM
#11
Junior Member
Veteran Hubber

"குடியிருந்த கோயில்" திரைப்படம் என் வாழ்க்கையில் மறக்க முடியாத படம். 15-03-1968ல், என்னுடைய 12வது வயதில், முதன் முறையாக வெளியீடு செய்யப்பட்ட போதே இப்படத்தினை பார்க்கும் பாக்கியம் பெற்றேன். இந்த படத்தில் நமது மக்கள் திலகம் அவர்களின் அற்புதமான நடிப்பும், செவிக்கினிய பாடல்களும், அருமையான கதையும், காட்சி அமைப்பும், தாய் மீது கொண்ட பாசமும் என்னை அவரது ரசிகனாக, அந்த பால பருவத்தில், மாற்றியது.
தொடர்ந்து அவரது புதிய படங்களை முதல் நாளன்றே பார்க்க தொடங்கினேன். மறு வெளியீட்டில் திரையிடப்பட்ட பழைய படங்களையும் மீண்டும் மீண்டும் பார்த்து புளகாங்கிதம் அடைந்தேன். இது நிதர்சனமான உண்மை. எனது மனங்கவர்ந்த நாயகனின் மிகைப்படுத்தப்படாத இயல்பான நடிப்பும், இளமை துடிப்பும், தாய்மைக்கு அவர் தரும் மரியாதையும், அண்ணன் - தங்கைப் பாசத்தையொட்டி பின்னாளில் வெளி வந்த மற்ற படங்களுக்கெல்லாம் முன்னோடியாக, வந்து, வெள்ளி விழா கொண்டாடி, வரலாற்று சாதனை படைத்து, அண்ணன் - தங்கை பாசத்தை தமிழ் திரை உலகத்துக்கு இதை விட சிறந்த முறையில் எவரும் உரைத்திட முடியாது என்ற உண்மையை உணர்த்திய "என் தங்கை", 1958 கால கட்டத்திலேயே மிக பிரமண்டாமாக எடுக்கப்பட்ட "நாடோடி மன்னன்", மற்றும் "மலைக்கள்ளன்", "மகாதேவி", "அலிபாபாவும் 40 திருடர்களும்", குலேபகாவலி"
"மர்மயோகி", "மந்திரிகுமாரி", "மன்னாதி மன்னன்" போன்ற படங்களின் மூலம் மேலும் ஈர்க்கப்பட்டு, அவரது தீவிர அபிமானியாக மாறினேன். ஒரு உழைக்கும் தொழிலாளிக்கு ஏற்படும் அல்லல்களையும், விவசாயி காணும், துயரங்களையும், மீனவர்கள் சந்திக்கும் இன்னல்களையும், ஏழைகள் படும் அவஸ்தைகளையும் இவரைப்போல் திரைப்படங்கள் மூலம் எவருமே வெளிப்படுத்தியதில்லை. அதனால் தான் இவர் மட்டுமே "ஏழைப்பங்காளன்" என்றழைக்கப்படுகிறார்.
மேற்கூறிய திரைப்படங்கள் மட்டுமல்ல அவரது அனைத்து படங்களிலும் ஒரு தனி முத்திரை படைத்திருப்பார். " தாலி பாக்கியம்" என்ற படத்தின் நேர்த்தியான காட்சி அமைப்புக்களும், கதையம்சமும், அப்படத்தில் இடம் பெற்ற "கோல் சண்டை" யும் பிரசித்தம் பெற்றவை. "தேர்த்திருவிழா" படத்தின் கருப்பு-வெள்ளை வெளிப்புறப் படபிடிப்பு காட்சிகளும், தேனினும் இனிய பாடல்களுக்காகவும் பல முறை பார்க்கலாம். அதே போன்று, "புதுமைப் பித்தன்" படத்தினை தொடர்ந்து,"காதல் வாகனம்" படத்தில் புரட்சித் தலைவர் பெண் வேடமிட்டு நடித்ததும் ஒரு புதுமையே. வெற்றி பெறாத ஒரு சில படங்களும் கூட ரசிக்கும் படியாகத்தான் இருக்கும். எந்த வகையிலும் ரசிகர்களை ஏமாற்றாத ஒரே நடிகர் உலகில் நமது எழில் வேந்தன் எம்.ஜி. ஆர். அவர்கள் ஒருவராகத்தான் இருக்க முடியும்.
நடிப்புக்கு மட்டும் வாங்கும் ஊதியத்திற்கேற்ப வெறுமனே நடிப்பதுடன் தனது கடமை முடிந்து விட்டதாக என்றுமே நமது பொன்மனச்செம்மல் கருதியது கிடையாது. அந்த படம் வெற்றி பெற, தனக்கு தெரிந்த ஏனைய தொழில் நுட்பங்களையும் படத்தில் புகுத்த வேண்டும் என்ற தணியாத ஆவலினால், பாடல்கள், எடிட்டிங், கதை காட்சி அமைப்பு மற்றும் இதர அலுவல்களில் அவரது முழுமையான அர்ப்பணிப்பும், ஈடுபாடும் இருக்கும். இதற்கென்று அவருக்கு தனி சம்பளம் கிடையாது. ஆனால், திரையுலகில் அவரது வளர்ச்சியை கண்டு பொறாமை படைத்த பொல்லாங்கு கூட்டம், அவரது தலையீடுகளும், குறுக்கீடுகளும் படங்களில் இருக்கும் என்று இட்டுக்கட்டியோரை, அவரது அந்த செய்கைகளினால் தான் படம் வெற்றிகரமாக அமைந்தது என்று உணர வைத்து, வாயடைத்த சம்பவங்கள் பல உண்டு.
அவர் படங்களில் வலியுறுத்தும் நீதி, நேர்மை, நியாயம், தர்மம் போன்ற கொள்கைகளால் கவரப்பட்டேன்.
எனது வாழ்க்கையில், நான் உயரிய சமூக அந்தஸ்து பெற்றுள்ளேன் என்றால் அதற்கு முழு காரணமும் நான் அனு தினமும் வணங்கி போற்றும் எனது குல தெய்வம் எம். ஜி.ஆர். அவர்கள்தான்.
எல்லாப் புகழும் எங்கள் இறைவன் எம். ஜி. ஆர். அவர்களுக்கே.
குடியிருந்த கோயில்" படம் வெளியான நாள் எனது வாழ்க்கையில் மறுமலர்ச்சி ஏற்படுத்திய நாள் என்ற நினைவுகளுடன் இந்த தொகுப்பினை பகிர்ந்து கொள்வதில் நான் பெருமிதம் கொள்கிறேன்.
முதலில் இப்படத்துக்கு "இரு துருவம்" என்று பெயரிடப்பட்டு, பின்னர் "சங்கமம்" என மாற்றப்பட்டு பின்னர் "குடியிருந்த கோயில்" என இறுதி வடிவம் பெற்றது.
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம்.ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
Last edited by makkal thilagam mgr; 15th March 2013 at 04:44 PM.
-
15th March 2013 04:39 PM
# ADS
Circuit advertisement
Bookmarks