Page 58 of 63 FirstFirst ... 8485657585960 ... LastLast
Results 571 to 580 of 625

Thread: வாகை சூட வரும் 'வசந்தமாளிகை'

  1. #571
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ஜோலார்ப்பேட்டையில் வசந்தமாளிகை கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடிகர் திலகத்தின் பிரம்மாண்ட கட்-அவுட்டுக்கு ரூபாய் ஐந்து லட்சம் பண மாலைகள் போடப்பட்ட செய்தி பத்திரிகைகளில் வெளிவந்து நமது திரியில் பதிவு செய்தது அனைவரும் அறிந்ததே. அகில இந்திய சிவாஜி ரசிகர்மன்ற செயலாளர் திரு.M.L. கான் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் நம் பார்வைக்கு இப்போது.







    திரு..M.L..கான் அவர்கள் உரையாற்றுகிறார்.

    நடிகர் திலகமே தெய்வம்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #572
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    அன்பு வாசு சார்,

    ஆழ்ந்த சிந்தனையோட்டத்தில் விளைந்த வேதனையோடு கூடிய உங்கள் கருத்துக்களோடு அனைவரும் ஒத்துப் போவர். உங்கள் மனவருத்தத்தில் பங்கேற்பதுடன் இது போன்ற சூழல் மீண்டும் நடவாமல் இருக்க வேண்டுவோம்.

    ஆதிராம்.

    உங்கள் கேள்விக்கு பதில். வசந்த மாளிகை இந்த இரண்டாவது வாரத்திலும் நன்றாகவே போகிறது. மெருக்கேற்றலின் தரம் பற்றிய மனக்குறை பலருக்கும் இருந்த போதும் கணிசமான மக்கள் திரையரங்கிற்கு வருகை தருகின்றனர். நேற்று சனிக்கிழமை மாலைக் காட்சிக்கு ஆல்பட் அரங்கத்திற்கு நான் சென்ற போது நல்ல கூட்டம். எனக்கு முன்னால் வரிசையில் நின்றிருந்த இருவர், சிவாஜி படம் வசந்த மாளிகை அதற்குதான் டிக்கெட் வேண்டும். வேறு படத்திற்கு கொடுத்து விடாதீர்கள் என்று சொல்வதை புன்சிரிப்போடு கேட்டுக் கொண்டிருந்தேன். அதில் குறிப்பிடத்தக்க விஷயம் பெரும்பாலோர் குடும்ப சமேதமாக வந்திருந்த காட்சி. அதிலும் இளம் பெண்களும் ஆண்களும் அடங்கும். அனைவரும் படத்தை ரசித்து பார்ப்பதை கவனிக்க முடிந்தது. பொது மக்கள்தான் 99 சதவிகிதம். நமது ரசிகர்கள் குறைவே. வந்திருந்த ரசிகர்களும் எந்தெந்த இடங்களில் ரசிக்க வேண்டும் என்பதை பொது மக்களுக்கு தங்கள் கைதட்டல்கள் மூலமாக சுட்டிக் காட்டி கொண்டிருந்தனர்.

    நேற்று மாலை அப்படியென்றால் இன்று மாலை மீண்டும் ஹவுஸ் புல். அதுவும் மாலை 5.40-ற்கே. ரசிகர்கள் இந்த வாரமும் திரையரங்க வளாகத்தை ஒரு கலக்கு கலக்கி விட்டதாக கேள்வி. இன்றும் பஸ்கள், கார்கள் மற்றும் இரு சக்கர வாகனத்தில் அந்த ரோடில் சென்றவர்கள் அரங்க வாசலை கடக்க பல நிமிடங்கள் ஆனதாம். இன்றும் 5000 வாலாக்கள் சரம் சரமாய் சீறி செவிகளை கிழித்தன என்று சொன்னார்கள். இன்றும் ஏராளமான பொது மக்கள் வந்திருந்தனராம். ஒரு விஷயம் தெரியுமா? அதே வளாகத்தில் வெளியாகி இருக்கும் புதிய படத்திற்கு டிக்கெட்கள் விற்காமல் இருக்க நமது படத்திற்கு black டிக்கெட் விற்பனை நடந்திருக்கிறது.

    இங்கே இப்படியென்றால் மதுரையில் சரஸ்வதி திரையரங்கில் இரண்டாவது வாரமாக ரெகுலர் காட்சிகளில் ஓடிக் கொண்டிருக்கும் மாளிகை இன்று மாலைக் காட்சி ஹவுஸ் புல். ஆயிரம் இருக்கைகள் capacity உடைய சரஸ்வதி திரையரங்கம் இன்று மாலை நிறைந்து வழிந்திருக்கிறது [காலரை தூக்கி விட்டுக் கொள்கிறேன்]. ரசிகர்களின் உற்சாக ஆட்டபாட்டமெல்லாம் அமர்களமாக நடந்ததாக செய்தி. அன்னதான நிகழ்ச்சியும் நடைப்பெற்றதாக தகவல்.

    சென்ற வாரம் வெளியாகாமல், இந்த வெள்ளிகிழமை வெளியான நெல்லை மாநகரிலும் சிறப்பான வரவேற்பை மாளிகை பெற்றிருப்பதாக செய்தி. பகிர்ந்து கொண்ட ராமஜெயம் அவர்களுக்கு நன்றி.

    அன்புடன்

  4. #573
    Senior Member Seasoned Hubber goldstar's Avatar
    Join Date
    Apr 2010
    Location
    Australia
    Posts
    168
    Post Thanks / Like
    Quote Originally Posted by Murali Srinivas View Post
    அன்பு வாசு சார்,

    இங்கே இப்படியென்றால் மதுரையில் சரஸ்வதி திரையரங்கில் இரண்டாவது வாரமாக ரெகுலர் காட்சிகளில் ஓடிக் கொண்டிருக்கும் மாளிகை இன்று மாலைக் காட்சி ஹவுஸ் புல். ஆயிரம் இருக்கைகள் capacity உடைய சரஸ்வதி திரையரங்கம் இன்று மாலை நிறைந்து வழிந்திருக்கிறது [காலரை தூக்கி விட்டுக் கொள்கிறேன்]. ரசிகர்களின் உற்சாக ஆட்டபாட்டமெல்லாம் அமர்களமாக நடந்ததாக செய்தி. அன்னதான நிகழ்ச்சியும் நடைப்பெற்றதாக தகவல்.

    அன்புடன்
    Madurai, NT's iron fort. No one born to break NT's Madurai rule.

    Thank you Murali sir.

    Cheers,
    Sathish

  5. #574
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Inpsite of the quality of the Print NT Still rocks in Box Office
    everywhere. Thanks for the info Mr Murali Sir.

  6. #575
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    Thank you Murali sir,

    Your posts are always like 'parimelazhagar urai', having very detailed informations, current actions and we feel pleasure on reding your posts.

    I never seen any one liner posts from you till now. Every post is an informative one.

    Happy to know from your post, Vasandha Maaligai is going well in box office. Apart from its present quality it is collecting more means, that is the unshaken RAASI of vasandha maaligai.

    ungal padhivu enggal kaadhugalil thean paachiyadhu.

    Thanks for Madurai and Nellai details also.

  7. #576
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    ... Yaanai paduththalum kudhirai mattamthan!how else we console ourselves when our dream of VM outsmarting the record of karnan has become a mirage!

  8. #577
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    அனைவருக்கும் நன்றி. நேற்று பதிவிட்ட போது எழுத விட்டுப் போன ஒரு தகவல். தூத்துக்குடி நகரில் வசந்த மாளிகை K.S கணபதி கலையரங்கம் என்ற திரையரங்கில் வெளியாகியிருக்கிறது. இது நகருக்கு சற்று வெளியே அமைந்திருக்கும் அரங்கம் என்று சொல்கிறார்கள். இருப்பினும் சுமார் 900 இருக்கைகள் அமைந்துள்ள இந்த அரங்கம் நேற்று மாலை ஹவுஸ் புல் ஆனதோடு மட்டுமல்லாமல் அதிகப்படியான சேர்கள் போடப்பட்டு ஆட்கள் அனுமதிக்கப்பட்டனராம். Heavy returns வேறு.

    அன்புடன்

  9. #578
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    பெங்களூரு அருணா திரையரங்க அளப்பரை நிழற்படங்கள். அனுப்பித் தந்த செந்தில் [ஹரீஷ்] அவர்களுக்கு உளமார்ந்த நன்றி.

    அரங்கின் வாயில் ....













    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  10. #579
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    பெங்களூரு அருணா திரையரங்க வசந்த மாளிகை அளப்பரை நிழற்படங்கள், மார்ச் 2013

    அரங்கினுள்















    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. #580
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    Bangalore Aruna theatre photos are very nice.

    alapparais inside the hall are well covered.

    Thanks Mr.Harish Senthil and Mr.Raghavendar for neat presentation.

Page 58 of 63 FirstFirst ... 8485657585960 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •